உள்ளான மனிதன் THE INSIDE MAN Chicago, Illinois, USA 53-12-12 1. மிக்க நன்றி சகோதரர் போஸே, மாலை வணக்கம் நண்பர்களே, இந்த இரவுப் பொழுது கர்த்தருக்கு ஊழியம் செய்ய இங்கு உங்களோடு இருப்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாயிருக்கிறது. கடந்த இரவு உங்களுக்கு ஏமாற்றம் கொடுத்ததற்கு நான் வருத்தப்படுகிறேன். அது என்னுடைய தவறு அல்ல. நான் இங்கு வந்து இருந்தேன். ஆனால் ஏதோவொரு காரியம் நேர்ந்தது... நான் அங்கு சபைகளை குறித்து ஏதோ ஒரு காரியத்தை பேசினேனென்று, எல்லோரும்...அவ்வண்ணமாக நான் இங்கு பேசினால் பிறகு அங்கு என்னை பிரசங்கிக்க விடமாட்டார்கள். ஆகவே குறைந்த பட்சம் என்னுடைய வார்த்தைகள் நலமாக இருக்க வேண்டும் என்று நினைத்தேன். கொடுத்த வார்த்தையில் நிற்க வேண்டும் என்று எண்ணினேன். இங்கு வருவதாக நான் வாக்களித்ததால் இங்கு வந்தேன். மேலும் இங்கு இருப்பது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது. நாம் இங்கு இருக்கையில் தேவன் நமக்கு உதவி செய்யும்படி மற்றும் இரண்டு அருமையான இரவு ஆராதனைகளை தரும்படி ஜெபியுங்கள். 2. மேலும் எனக்கு களைப்பாக உள்ளது, புளோரிடா கூட்டம் முடித்து வந்துளோம். அது ஆறாவது வாரம் என்று எண்ணுகிறேன். தொடர்ந்து கூட்டங்கள் இருந்தன. எனவே நான் மிகவும் களைத்து இருக்கிறேன். (ஒலி நாடாவில் காலியிடம்) ஆயிரத்து நூறு மைல் ஓர் இரவில் அந்த பழைய வாகனமாகிய செவரோலெட் காரில் நானும் பில்லியும் ஓட்டி கொண்டு வந்தோம் என்று எண்ணுகிறேன். ஆகவே சுமார் இருபத்தி மூன்று மணிநேரம். அவ்வாறு ஓட்டி இருக்கிறோம். நான் இரண்டு பக்கமாக உட்காரும்படி அமர்ந்திருந்தேன். மற்றும் எங்களுக்கு அருமையான நேரம் உண்டாயிருந்தது. அந்த பயணத்திலிருந்து நேராக வீடு திரும்பினோம். பிறகு இங்கு வந்தோம். நேற்றைய இரவு நான் மிகவும் களைப்பாக இருந்தேன். மிக தாமதமாக வந்தோம். சுமார் ஏழு மணியளவில் இந்த கூட்டத்திற்கு வந்தோம். சில ஸ்தாபனங்கள் மற்றும் சில காரியங்கள் தவறாக போனதென்று நான் கேள்விப்பட்டேன். (கூட்டம் ஆமோதித்து கரங்களை தட்டுகிறார்கள்), மிக்க நன்றி. அதை நான் என் இருதயத்திலிருந்து சொல்லுகிறேன். நாம் குழு சார்பற்ற ஸ்தாபனமாக இருப்போமென்றால் அவ்வாறு தான் இருக்கவேண்டும். அது எல்லா ஸ்தாபனத்திற்கும் பொருந்தும் அவர்கள் என்னவாக இருந்தாலும் பரவாயில்லை. அது குறிப்பிட்ட இந்த சபையை சார்ந்தவர் என்றும் அந்த சபையை சார்ந்தவர் என்று சொல்வோமென்றால், நாம் குழுசார்பற்ற ஸ்தாபனமாக இருக்க முடியாது. இது அனைவருக்கும் சார்ந்தது. 3. தேவனின் பிதாத்துவம் மற்றும் மனிதனின் சகோதரத்துவத்திலும் நான் நம்பிக்கை உள்ளவன். நாம் அனைவரும் சகோதரர்கள் என்று நினைக்கிறேன். அவ்வாறு தான் நாம் இருக்க வேண்டும். மேலும் தேவனுக்கு பிள்ளைகள் உண்டு. சிலரின் விசுவாசத்திற்கும் அல்லது உங்கள் விசுவாசத்திற்கும் அல்லது என் விசுவாசத்திற்கும் ஏதோ ஒரு சிறு வித்தியாசங்கள் இருக்கக்கூடும். ஆனால் தேவன் தன் பிள்ளைகளை ஏற்றுக் கொள்கிறார். ஆகவே அவர்களை நம் சகோதரிகளாக மற்றும் சகோதர்களாக நாமும் ஏற்றுக் கொள்ள வேண்டும். அப்படி நாம் ஏற்றுக் கொள்வோமா? அதுசரிதானே? மேலும் நான் இங்கு இருக்கும் இந்த சிறிய சபையாகிய பிலடெல்பியா சபை... (நன்றி சகோதரர் போஸே) ஸ்வீடனில் நான் இருந்த போது ஸ்வீடன் மக்கள் என்னை உபசரித்தது போல் என் ஜீவியத்தில் இதுவரை அருமையான உபசரிப்பு இருந்ததில்லை. மிகவும் அருமையாக மற்றும் பண்போடு என்னிடத்தில் இருந்தார்கள். 4. மேலும் எந்த இடத்திற்கெல்லாம் நான் சென்றேனோ என்னை அருமையாக உபசரித்தார்கள். அது எல்லாம் வெவ்வேறு மக்கள். ஆகவே எனக்கு எந்த ஒரு ஸ்தாபனமும் கிடையாது. நாற்பது வருஷமாக நான் பிரான்ஹாம் குடும்பத்தில் இருக்கிறேன். அந்த குடும்பத்தில் என்னை சேர்ந்துக்கொள்ள அவர்கள் சொல்லவில்லை. பிரான்ஹாம் குடும்பத்தில் நான் பிறந்தேன். அது போல்தான் நாம் கிறிஸ்தவர்கள் என்று எண்ணுகிறேன். அப்படி நீங்கள் நினைக்கவில்லையா? கிறிஸ்தவர்களாக பிறக்கிறோம். ஸ்தாபன சபைகள் மேல் விரோதமாக எனக்கு எதுவுமில்லை. அவர்கள் எதை விசுவாசிக்க விரும்புகிறார்களோ அதன்படி அவர்கள் இருக்கட்டும். ஆனால் சகோதரத்துவத்தை பிரிக்ககூடாது என்று நான் கருதுகிறேன். ஆமென். நாம் எல்லோரும் கர்த்தருக்கு ஊழியம் செய்து அவரை நேசிக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். 5. மேலும் நான் என் ஜீவியத்தில் என்னை சுற்றிலும் ஒரு நல்ல சூழ்நிலை இருக்க வேண்டும் என்று முயற்சிக்கிறேன். அது என்னவென்றால் அன்பான தேவனின் ஆவி என்னை சுற்றி இருப்பதை நான் உணரவில்லையென்றால், அப்போது ஏதோ ஒரு காரியம் இங்கு தவறாக இருக்கிறது என்று எண்ணுவேன். ஆகையால் அந்த அன்பான இனிமையுள்ள உணர்வு என்னை விட்டு விலகிப்போனால், அப்படிப்பட்ட எந்த ஒரு காரியத்தோடும் நான் கலந்து கொள்ள விரும்பமாட்டேன். பாருங்கள். அது எல்லா நேரத்திலும் என்னை சூழ்ந்து இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். ஏனென்றால் அதைக் கொண்டு தான் நான் தேவனின் மக்களுக்கு உதவி செய்ய முடியும், உங்களுக்கு புரிந்ததா... சில மக்கள் மத்தியில் நீங்கள் இருக்கும் போது உங்களால் அங்கு இருக்கவே முடியாத கடினமான சூழ்நிலையை நீங்கள் உணர்வீர்கள். மற்றும் ஒருவேளை உங்களை அவர்கள் சபித்து கொண்டிருக்கலாம், நல்லது அது... அந்த மக்கள் ஒருவேளை சரியானவர்களாக இருக்கலாம். ஆனால் அது போன்ற ஆவியினால் அவர்கள் அபிஷேகம் பண்ணப்பட்டிருக்கிறார்கள். புரிந்ததா? மற்றும் சிநேகத்தோடு பழகும் மக்களை எனக்கு பிடிக்கும், மற்றும் அருமையாகவும், சாந்தத்தோடும், சகோதரத்தோடும் மற்றும் அன்போடும் இருக்கும் அப்படிப்பட்ட மக்களை எனக்கு பிடிக்கும். அதுவே என்னுடைய ஒருவிதமான நம்பிக்கை. 6. நான் அப்படியாக யோசித்தேன். நாம் தேவனின் கனிகளை கொடுக்கிறவர்களாக இருக்கிறோம். அக்காரியம் பரிசுத்த யோவானில் 17-ம் அதிகாரத்தில் இருக்கிறது என்று எண்ணுகிறேன். இயேசு சொன்னார், “நீங்கள் கிளைகளாக இருக்கிறீர்கள், அவர் திராட்சை செடியாக இருக்கின்றார். திராட்சை செடி கனிகளை கொடுக்கிறது. ஆனால் கிளைகள் தான் அதை சுமக்கிறது. ஆகவே கிளைகள் அந்த திராட்சை செடியிலிருந்து ஜீவனை பெற்று கொள்ளுமென்றால் திராட்சை செடியில் இருக்கும், அதே ஜீவன் தான் அதனுள் இருக்கும்”, அவ்வாறுதானே? நீங்கள் அப்படி நினைக்கவில்லையா? நம்முடைய கரங்களும், உதடுகளும் மற்றும் கண்களும், அவை தேவனுடைய கரங்களும், உதடுகளும் கண்களுமாயிருக்கிறது, மேலும் நாம் இங்கு கொண்டிருக்கிற உதடுகளும், கண்களும், கரங்களும் இந்த பூமியில் தேவனுடையதாயிருக்கிறது. இப்போது அவர் தேவனிடத்தில் திரும்ப சென்றார். மற்றும் அவருடைய ஆவியின் சக்தியை நமக்கு அனுப்பி பரிசுத்த ஆவியினால் அபிஷேகிக்கிறார். மேலும் நாம் அவருக்கு ஒப்புக் கொடுப்போ மென்றால் நம்முடைய கரங்கள் அவருடைய கரங்களுக்கு பிரதிநிதித்துவமாயிருக்கும். அந்த காரணத்தினால் தான் சொன்னார், “அவர்கள் வியாதியஸ்தர்கள் மீது கரங்களை வைக்கும் போது அவர்கள் சுகமாவார்கள்”, பாருங்கள். பரிசுத்த ஆவியை பெற்றுக் கொண்ட பிறகு அப்போஸ்தலர்கள் கைகளை வைத்தபோது அங்கு ஏதோ சம்பவித்தது. அந்த மக்கள் மேல் பேதுரு கைகளை வைத்தபோது அவர்கள் பரிசுத்த ஆவியை பெற்றுக் கொள்வதை மாய வித்தைக்காரனாகிய சீமோன், அங்கு ஏதோ ஒரு காரியம் சம்பவித்ததென்று உணர்ந்தான். இப்பொழுது அது தேவனுடைய வரம். அதில் ஏதோவொன்று உள்ளது. 7. இங்குள்ள தாய்மார்கள் எத்தனை பேருக்கு கரங்களை வைத்து ஜெபிக்கிறதான அர்த்தம் தெரியும். ஒரு சிறிய பிள்ளை சினிங்கிக் கொண்டு அல்லது அழுது கொண்டிருந்தால், அந்த தாயானவள் அந்த பிள்ளை மீது தன்னுடைய கரத்தை வைத்தால் போதும். அது எல்லாம் போதுமானதாயிருக்கும். அந்த சிறிய பிள்ளை அழுவதை நிறுத்தி, தன் தாயினிடத்தில் ஒடுங்கிக்கொள்ளும். புரிகிறதா. அதுதான் மேலே கைகளை வைப்பதற்கான அர்த்தமாகும். அந்த தாயின் தொடு உணர்ச்சி போதும். பதட்டமான நிலையில் உள்ள குதிரையை வைத்திருந்த அனுபவம் எத்தனை பேருக்கு உள்ளது. குதிரையை சிநேகிக்கும் மனிதன் அதன் கால்களை தட்டி கொடுக்கட்டும். (சகோதரர் பிரான்ஹாம் பிரசங்க பீடத்தை தட்டுகிறார்) ஒரு நிமிடம் அதனோடு பேசி, லேசாக தட்டி, அவன் தன் கரங்களை அதன் மீது வைத்தவுடன், முதல் காரியமென்னவென்றால் அந்த குதிரை அமைதியாகிவிடும். புரிந்ததா? ஆகவே அவ்வாறு தான் வியாதியஸ்தர்கள் மீது கரம் வைக்கும் காரியம். அதை செய்வதற்கு தேவனால் அபிஷேகம் பண்ணப்பட்டு இருப்போமானால் நம்முடைய கரங்கள் தேவனின் கரங்களுக்கு பிரதிநிதித்துவமாக இருக்கிறது. அவருக்கு இருக்கும் ஒரே கரம் அது நம்முடையது தான். மற்றும் நாம் வியாதியஸ்தர்களுக்கு ஜெபிக்கிறோம். 8. மருத்துவர்களிடத்தில் இருக்கும் முதல் காரியம் அநேக முறை மருத்துவர்கள் பரிசுத்த ஆவியினால் அபிஷேகம் பண்ணப்பட்டு இருக்கிறார்கள். மற்றும் அவர்களின் நோயாளிக்கு அவர்கள் ஜெபிக்கிறார்கள். சில நேரங்களில் மருத்துவர்கள் கல்வியின் ரீதியாகவும், அவருடைய உண்மையான படிப்பின் படியாகவும், நம்முடைய மருத்துவமனைகளில் மற்றும் பல காரியங்கள்... மற்றும் பெரிய காரியங்கள் செய்து கொண்டு நமக்கு அது பலவிதத்தில் உதவி செய்திருக்கிறது, நம் உடலில் என்ன கோளாறு என்று அறியும்படியாகவும், அந்த கட்டிகளையும், மற்றும் உடைந்த எலும்புகளையும், எக்ஸ்ரே மூலமாக, அவர்கள் கொண்டிருக்கிற அந்த கண்ணாடி மூலமாகவும் பார்க்க மருத்துவர்கள் அந்த அறைக்குள் போவார்கள். நல்லது இப்பொழுது அறிவியல் முன்பு இருந்ததற்கு இது எவ்வளவோ முரணாக இருக்கிறது. சூரிய வெளிச்சத்தை தவிர வேறு எந்த வெளிச்சமும் இல்லை என்று சொன்னார்கள். வேதாகமம் சொல்கிறது நம் முழு சரீரமும் வெளிச்சத்தால் நிரம்பியுள்ளது. அக்காரியத்தை எக்ஸ்ரே நிரூபிக்கிறது. பாருங்கள, அது அல்ல, அது நம்முடைய சரீரத்தின் வெளிச்சம் தான் நிழலாக வீசி அதை அவர்கள் எக்ஸ்ரே மூலம் பார்க்கிறார்கள். 9. ஏதோ ஒரு காரியத்தை மருத்துவர்கள் வெட்டியெடுக்க வேண்டும் என்று உணர்ந்தால், அது அவருடைய ஐம்புலன் உணர்வுகளால் தொடர்பு கொள்ளும் காரியம். நல்லது, அப்பொழுது அவரால்... இன்று நமக்கு அறிவான மருத்துவர்கள், மற்றும் சில அருமையான மருத்துவமனை, மற்றும் அருமையான மருந்துகளை நாம் கொண்டுள்ளோம் என்று நான் நினைக்கிறேன். அவைகளை நாம் கொண்டுள்ளதற்காக சர்வவல்லமையுள்ள தேவனுக்கு நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். நான் மிகவும் நன்றியுடைவனாக இருக்கிறேன். அவர்களால் முடிந்தவரைக்கும் செய்கிறார்கள். ஆனால் சில சமயம் காரியங்கள் அவர்களையும் மீறி செல்கிறது. சில சமயம் அவர்களால் எதுவும் செய்ய இயலாது. அதன்பின் நமக்கு ஒரு பரிபூரணமான உரிமை இருக்கிறது. அது என்னவென்றால் ஒவ்வொரு மனித முயற்சிகள் தோல்வியடைந்தாலும், தேவனிடத்தில் சென்று நமக்கு உதவி செய்யும்படி தேவனிடத்தில் கேட்க நமக்கு இன்னமும் உரிமை உண்டு. அது சரியே. மேலும் அவர் அதை செய்கிறார், அவ்வாறு செய்வேன் என்று அவர் வாக்கு அளித்திருக்கிறார். இப்போது மருத்துவர்கள் தாங்கள் சுகமளிக்கிறவர் என்று உரிமை கோருவதில்லை. எந்த நபரையும் நான் சுகமளிப்பேன் என்று உரிமை கோருவதில்லை. அவர் இயற்கைக்கு மட்டுமே உதவி செய்வதாக உரிமை கோருகிறார். தேவன் மட்டுமே சுகமளிக்கிறவர். இப்போது உங்கள் கரங்கள் உடைந்து போனால், மருத்துவரால் அதை அதன் இடத்தில் பொருத்த முடியும். ஆனால் மருத்துவரால் அதற்கு சுகத்தை கொடுக்க முடியாது. பாருங்கள் அந்த எலும்பை பொருத்துகிறவர் மருத்துவர் மட்டுமே, தேவன் என்ன செய்கிறாரென்றால்...அது இயற்கையாகவே கூடிவிடும் என்று அவர்கள் சொல்வார்கள், ஆனால் அதை செய்வது தேவன் மட்டுமே. நாம் அதை உடைத்தாலும் அந்த எலும்பு குணமாகிறது. புரிகிறதா? 10. பாதிக்கப்பட்ட பல்லை மருத்துவர் எடுக்கலாம். ஆனால் அந்த குழிவை குணப்படுத்த முடியாது. அந்த பல்லை மட்டுமே எடுக்கிறார். கெட்டுப்போன குடல் வளரியை அகற்றக்கூடும். ஆனால் தேவன் தான் சுகத்தை தருகிறார். பாருங்கள். புரிகிறதா? தேவன் உடலில் இருக்கும் ஆக்கப்பொருளை உருவாக்கும்போது மருத்துவம் அதை சுத்தமாக வைத்திருக்கிறது. தேவன் மட்டுமே சிருஷ்டிகர். அது சரிதானே. அவர் உயிரணுக்களை சிருஷ்டிக்கிறார். ஆகவே அது விசுவாசத்தை காட்டுகிறது. நல்லது, இப்பொழுது இந்த முழு உலகமும் ஒன்றாக இணைந்து சகோதரத்துவத்தோடு தேவனோடு இசைந்து இருப்பார்களென்றால் அருமையாக இருக்குமல்லவா? மருத்துவ அறிவியலும் மற்றும் வெவ்வேறு ஸ்தாபன சபைகளும் மற்றும் எல்லா இனத்து நிறங்களும் கொண்ட மக்கள் அக்காரியத்தை அவர்கள் சிந்தையில் இருந்து உடைத்துப் போட்டு நாம் ஒரே நபரிடத்திலிருந்து தான் வருகிறோம் என்று அறிந்து கொள்வார்களென்றால், அது நல்லது. மேலும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். ஏதோ ஒரு சகோதரர் விழுந்து இருக்கலாம். ஆனால் அவரை இன்னும் மோசமான நிலைக்கு தள்ளாதீர்கள். அவருக்கு உதவி செய்யுங்கள். சகோதரத்துவத்திற்கு மறுபடியுமாக கொண்டு வர முயற்சி செய்யுங்கள். தேவனின் சகோதரத்துவத்திற்கு கொண்டுவாருங்கள். இன்றைக்கு அது தான் என்னுடைய கிறிஸ்தவ நண்பர்களே இன்றைய உலகத்திற்கு என்ன தேவை என்பதை பற்றிய என்னுடைய தரிசனமாக இருக்கிறது. அது என்னவென்றால் மறுபடியும் நாம் தேவனிடத்திற்கு திரும்புவது. மேலும் அவ்வாறு செய்து கொண்டே இருப்பதுதான் என்னுடைய நோக்கம். எனக்கு தெரிந்தது எல்லாம் எவ்வாறு மனிதனை தேவனிடத்தில் மறுபடியுமாக கொண்டு வரவும், மக்களிடையே சகோதரத்து வத்தையும், கிறிஸ்துவின் உணர்வையும், கொண்டு வரவும் எனக்கு தெரிந்த அனைத்தையும் செய்ய திட்டமிட்டுள்ளேன். 11. பெந்தெகொஸ்தே மக்களிடத்தில் நான் இப்போது பேசி கொண்டிருக்கிறேன். அவர்கள் மகத்தான கூட்டமாக இருக்கிறார்கள். நான் இப்பொழுது சென்ற இடத்தில் எனது கடைசி கூட்டம் அது பிளோரிடாவில் உள்ள பாப்டிஸ்ட் மக்களால் நடத்தப்பட்டது. எல்லா வெவ்வேறு ஸ்தாபனங்களுக்காகவும், வெவ்வேறு மக்களுக்காகவும் நாங்கள் கூட்டங்களை நடத்துகிறோம். ஆகவே அநேக முறை நாம் அதிகமாக ஒரே காரியத்தின் மேல் முக்கியத்துவத்தை கொடுக்கிறோம் என்று எண்ணுகிறேன். நாம் அதிகமான முக்கியத்துவத்தை கொடுத்திருக்கிறோம். இதை சொல்வதற்கு மன்னிக்கவும். ஏனென்றால் இந்த இரவில் இங்கு நாம் ஒரு சிறிய கூட்டமாக இருக்கிறோம். மற்றும் இந்த பிரசங்கப்பீடத்தில் நான் என்னுடைய சபையில் இருப்பது போல் உணருகிறேன். நான் மிகவும் இங்கு வரவேற்கப்படுகிறேன் என்று நான் அறிவேன். மற்றும் உங்களை நான் நேசிக்கிறேன். ஆகையால் தான் இக்காரியங்களை நான் சொல்லுகிறேன். நாம் அதிகமாக உணர்வுகளின் மேல் முக்கியத்துவம் கொடுக்கிறோம். ஒருவேளை நாம் உரக்க கத்தி தேவனை துதித்தால் அது அருமையாக இருக்கும் என்று எண்ணுகிறோம். அது நல்லது தான். அல்லது நாம் வெவ்வேறு பாஷைகளில் பேசும் வல்லமைகொண்டு இருப்பதால், அப்படியானால் அது அதுதான் காரியம். இந்த பிலடெல்பியா சபையினர் தேவனின் ஊழியக்காரனாக என்னை ஏற்றுக் கொள்வார்களென்றால்... 12. இன்றைய சபைக்கு மகத்தான தேவை என்ன என்று என்னுடைய கருத்தை நீங்கள் அறிந்துகொள்ள விரும்புகிறீர்களா? நீங்கள் விரும்புகிறீர்களா? எங்கு குறைபாடு உள்ளதென்று நான் யோசிக்கிறேன், அது ஆத்துமபாரம் இல்லாததே. மக்களுக்கு போதுமான அளவுக்கு மனம் உடைந்து, எந்த ஆத்துமபாரமும் இல்லை என்று தெரிகிறது. மேலும் இழக்கப்பட்ட ஆத்துமாக்கள் பற்றி மிகவும் பாரப்பட்டு, மனம் உடைந்து அழுது, ஒரு எழுப்புதல் வேண்டும் என்று மிகவும் துக்கத்தோடு சாப்பிட முடியாத அளவிற்கு இருக்கிற ஒரு நபரை என்னிடத்தில் கொண்டு வாருங்கள். அது வெறுமனே முடியாது. உலக சரித்திரத்தை படிப்பீர்களென்றால், மற்றும் மத ரீதியான வரலாற்றை பார்ப்பீர்களென்றால், அது போன்று ஆவிதான் ஒரு எழுப்புதலை கொண்டு வரும் என்று நீங்கள் கண்டுபிடிப்பீர்கள். அது சரிதான். பாருங்கள், சீயோன் வேதனைப்பட்ட போது அல்லது பிரசவவேதனைபட்டபோது, இது சரியான வார்த்தையாக இருக்கிறது என்று எண்ணுகிறேன். பிறகு அவள் பிள்ளைகளை பெற்றெடுத்தாள். பாருங்கள். நீங்கள் உடைக்கப்பட வேண்டும். அது அந்த சூழ்நிலையை பொறுத்ததே... 13. விவாதம் நடக்கும் இடத்தில் நீங்கள் செல்லும்போது, அந்த சூழ்நிலைக்குள் நீங்களும் சென்றுவிடுகிறீர்கள். யாராவது ஒருவர் கீழ்ப்படியாமல் மற்றும் அசிங்கமான காரியத்தை சபையில் செய்து கொண்டு, சபையில் பிரச்சனை செய்வாரென்றால் அது போல் ஓர் சூழ்நிலை இருக்கும் வரை, உங்களுக்கு எந்த ஒரு எழுப்புதலும் வராது. எனவே நீங்கள் அனைவரும்... பெந்தெகோஸ்தே நாளில் பரிசுத்த ஆவியானவர் வந்தபோது நீங்கள் கவனிப்பீர்களென்றால் அவர்கள் எல்லோரும் ஒரே இடத்தில ஏக சிந்தையோடு இருந்தார்கள். அது சரிதானா? மற்றும் வாக்குத்தத்தத்திற்கு காத்து கொண்டு இருந்தார்கள். மேலும் நாம் அந்த நிலைக்கு வரும்போது, சகோதரர் போஸே, அப்பொழுது ஒரு எழுப்புதல் இங்கு இருக்கும். அது உண்மை. 14. இன்றைய நாளில் பெரிய கவர்ச்சியான கூட்டங்கள் உள்ளன. தெற்கு பகுதியில் அதை நீண்ட நேர கூட்டங்கள் என்று நாம் சொல்லுவோம் என்று நீங்கள் அறிவீர்கள். ஆகவே அது ஒரு எழுப்புதல் என்பதற்கு பதிலாக அவர்கள் உபயோகப்படுத்தும் ஒரு வார்த்தை மட்டுமே... ஆனால் அது நீண்ட நேர கூட்டங்களாக மாறிவிட்டதாக நான் எண்ணுகிறேன். அது சரிதான். எழுப்புதலுக்கு பதிலாக, என்னவென்றால் நான் பார்க்கு வண்ணமாக, தேசத்தில் இன்னுமாக ஒரு எழுப்புதல் கூட இல்லை. நான் எதையும் அவ்வாறு காணவில்லை... வேல்ஸ் எழுப்புதல் அல்லது ஸ்காட்லாந்தில் இருந்தது போல், அல்லது வெஸ்லியின் நாட்களில் நடந்த சில எழுப்புதல்கள் செய்தது போல் நமக்கு ஒரு எழுப்புதல் இருந்தால், அப்போது அவர்கள் மத்தியில் பெரிய அளவில் ஒரு மகத்தான பிரிவினை இருந்த போது, ஒரு ஜான் வெஸ்லியினால் உலக எழுப்புதல் வந்தது. அப்போது தான் நமக்கு உண்மையான எழுப்புதல் கிடைக்குமென்று நான் நினைக்கிறேன். இப்பொழுது சமீபத்தில் அப்படி இருப்பதை என்னுடைய ஊழியத்தில் நான் கவனித்தேன்... அந்த மக்கள், ஆவியினால் நிரப்பப்பட்ட மக்கள், ஆனால் தேவன் என்ன செய்வார் என்றும், அடையாளங்கள் அல்லது ஏதோவொரு காரியத்தை அவர் செய்வார் என்று மக்கள் கவனிப்பார்கள். மக்கள் அமர்ந்து, “நல்லது, அது மிக அருமையாக உள்ளது”, என்று சொல்வார்கள். புரிகிறதா? மற்றும் தேவன் இப்பொழுது வேறு ஏதாவது ஒன்றை செய்வார் என்பதை நீங்கள் காண்பீர்கள். அதற்கு அவர்கள் சொல்லுவார்கள், “அது ரொம்ப அருமையாக உள்ளது அதை நாங்கள் மெச்சிக் கொள்கிறோம். தேவன்... நல்ல மனிதன்” பாருங்கள்? அது ஒருவிதமான, “ஆமாம் தேவனே, அது உங்களுடைய கடமை. நீங்கள் அதை ஒரு கடமையாக செய்தீர்கள்”. 15. நிச்சயமாகவே ஒரு எழுப்புதல் சூழ்நிலை உண்டாகுமானால் அது போன்ற ஒருகாரியம் நடக்குமென்றால் ஒவ்வொரு ஆத்துமா அதை துரிதமாக பிடித்துக் கொள்ளும். மற்றும் அது ஓ, என்னே, அதற்கு முடிவே இருக்காது. அது ஒருவரிலிருந்து இன்னொரு வருக்கு செல்லும். ஒருவரில் இருந்து இன்னொருவருக்கு. அது அவ்வாறே தொடர்ந்து சென்று கொண்டிருக்கும். உங்களுக்கு தெரியும் உங்களை போல் நானும் ஒரு அமெரிக்கன். ஆனால் ஆப்ரிக்காவில்... அது ஒரு புறஜாதிகளின் தேசம். அவர்கள் சுவிசேஷத்தை ஏற்றுக் கொள்வதை பார்க்கும்போது நம்மை குறித்து நமக்கு வெட்கமுண்டாகும். ஒரு இயற்கைக்கு மேலான காரியத்தை பார்த்தபோது முப்பதாயிரம் பேர்கள் கிறிஸ்துவை அவர்களின் சொந்த இரட்சகராக ஒரே சமயத்தில் ஏற்றுக் கொண்டார்கள். அதுதான் புறஜாதிகள் பாருங்கள். முப்பதாயிரம் அங்கு எந்த ஒரு கேள்வியும் இல்லை. அது முடிந்தது. அவ்வளவு தான். பாருங்கள்? 16. இப்போது நான் சொல்லுவது என்னவென்றால், நம்முடைய மக்கள் கல்வியிலும் வேத சாஸ்த்திரம், மற்றும் பல காரியத்திலும் அதிகமாக சார்ந்து கொண்டு, அவைகள் ஆவிக்குரிய காரியத்தின் இடத்தை அது எடுத்துக் கொள்ளும்படி செய்துவிட்டார்கள். இப்பொழுது இதை நான் உங்களுக்கு மட்டும் சொல்லுகிறேன். இந்த காரியத்தை சொல்லுகிறேன்.அது எசேக்கியேல் 9-ம் அதிகாரத்தில் உள்ளது என்று எண்ணுகிறேன். நிச்சயமாக அதில் உள்ளது என்று எண்ணுகிறேன். நான் தவறாக இருக்கலாம். ஆனால் அது எசேக்கியேல் 9-ம் அதிகாரத்தில் தான் உள்ளது என்று நம்புகிறேன். பரிசுத்த ஆவியானவர் முன் சென்றபோது... முதலாவதாக புருஷர்கள் வாசலுக்கு பின்பாக இருந்து படுகொலை செய்யும் ஆயுதங்களோடு புறப்பட்டார்கள். அது நிச்சயமாக... அது வேத வசனத்தின்படி சரியாக அவ்வாறே உள்ளது. அது எருசலேமின் அழிவுக்கு முன்... வெள்ளை அங்கியோடு ஒரு மனிதன் வந்தார். மற்றும் அவர் கையில் மைகூடு இருந்தது. மேலும் தேவனிடத்திலிருந்து அவருக்கு கட்டளைக் கொடுக்கப்பட்டது. அந்த நகரம் முழுவதும் சென்று (இதை கேளுங்கள்) நெற்றியில் ஒரு அடையாளத்தை போடு. பரிசுத்த ஆவியானவரின் முத்திரை நகரத்திற்குள் செய்கின்ற சகல அருவருப்புகளினிமித்தமும் பெருமூச்சு விட்டழுகிற ஒவ்வொரு மனுஷனின் அல்லது ஸ்திரீயின் நெற்றிகளில் அடையாளம் போடு என்றார். 17. உங்களிடத்தில் ஒன்றை கேட்க விரும்புகிறேன். இன்றைய இரவில்சிக்காகோவிற்கு தேவன் வருகிறாரென்றால், எழுப்பு தலுக்காக அழுது கொண்டு மிகுந்த ஆத்தும பாரத்தோடு எதையும் தாங்கிக் கொள்ள முடியாத நிலையில் என்ன செய்வதுஎன்று தெரியாமல் இருக்கும் சூழ்நிலை எத்தனை இடத்தில் மற்றும் எத்தனை வீட்டில் இருப்பதை அவர் காண்பார்? கிட்டத்தட்ட 50 லட்சம் பேர் இந்த சிகாகோ பட்டினத்தில் இருக்கலாம். அதில் எத்தனை பேருக்கு அடையாளம் போடப்படும் என்று நான் யோசிக்கிறேன். எத்தனை...? எங்கு...? அவர் எந்த அடையாளத்தை போடுவார்? விரல் விட்டு என்னும் அளவிற்குக்கூட இருக்க மாட்டார்கள் என்று நான் யூகிக்கிறேன். அவ்வாறு உங்களுக்கு தோன்றவில்லையா? அது அந்த பாரத்தோடு இருக்கும் மக்கள், ஆயினும் அது தான் கச்சிதமாக, அந்த மாதிரியான மக்களை தவிர வேறு யார் ஒருவர் மீதும் அடையாளத்தை போடவில்லை. நான் என்ன சொல்லுகிறேன் என்று புரிகிறதா? அது போல் தேவன் முன்னால் நாம் அமைதியோடு பணிந்து இருக்கவேண்டும். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக இங்கு அவருடைய சில வார்த்தைகளை படிக்க விரும்புகிறேன். என்னுடைய வார்த்தை மற்ற மனிதன் போல் தோல்வி அடையும். ஆனால் அவருடைய வார்த்தை ஒருபோதும் தோல்வி அடையாது. நாளை காலையில் ஞாயிறு பள்ளியில் பிரசங்கிக்க வேண்டும் என்று எண்ணுகிறேன். அது சரிதான் என்று நினைக்கிறேன். பதினோரு மணியளவில், நாளை பதினோரு மணிக்கு... அதன் பிறகு நான்... 18. மறுபடியுமாக நாளை இரவு ஏழு முப்பது... ஏழு மணி. இப்போது வியாதிபட்டவர்களையும் மற்றும் அவதிக்குள்ளாக இருப்பவர்களையும் கொண்டு வாருங்கள். நாம் ஒன்றாக கூடி நாம் ஊக்கமாக ஜெபிப்போம், நமக்காக தேவன் ஏதாவது செய்வார் என்று நான் அறிவேன். இப்பொழுது எனக்கு தெரிந்தவரை...வெளிநாட்டிற்கு போவதற்கு முன் இது தான் என் கடைசி கூட்டமென்று நான் நினைக்கிறேன். சிகாகோவில் உள்ள அருமையான மக்களாகிய உங்களுடைய ஜெபத்தை நான் வேண்டிக் கொள்கிறேன். எனக்காக நீங்கள் ஜெபிக்கும்படி கேட்கிறேன். முன்பு இருந்ததைக் காட்டிலும் இப்போது உங்கள் ஜெபம் எனக்கு மிகவும் அவசியமாயிருக்கிறது. பாருங்கள், மேலும் வெளிநாட்டில் தேவன்மகத்தான காரியங்களை செய்வார் என்று நான் நம்புகிறேன். மேலும் நிச்சயமாக அவர் செய்வார். இங்கு நிற்கையில் முக முகமாய் சவால்களும், எதிர்ப்புகளும் இருப்பதை என் சிந்தையில் நான் நினைக்கும் போது இங்கு நிற்பது எவ்வளவு அருமையான உணர்வு என்பதை நீங்கள் அறியீர்கள். அநேக மக்கள் இந்த சிகாகோ கூட்டத்தில் கலந்து கொண்டார்கள். பலர் சொன்னார்கள், சிலர் ஜெபித்து கொண்டு இருக்கிறார்கள். நிச்சயமாக சிகாகோவில் ஒரு சிலர் ஜெபித்து கொண்டு இருப்பார்கள். சிலர் மியாமியில் ஜெபித்து கொண்டு இருப்பார்கள், பாம் கடற்கரை இடத்தில் சிலர் ஜெபித்து கொண்டு இருப்பார்கள். இங்கும் அங்குமாக சிலர் ஜெபிக்கிறார்கள். அவை எல்லாம் ஒன்று சேரும்போது, அப்போது நான் ஜெபத்தினால் மூடப்பட்டுள்ளேன் என்று அறிந்து இருக்கிறேன். அக்காரியம் நம்மை மிகவும் பெலப்படுத்தச் செய்யும். அப்போது நீங்கள் சொல்லலாம், “சாத்தானே, இங்கு பார் என்னை சுற்றி ஜெபங்கள் உள்ளன. என் நிலையை நான் அறிந்திருக்கிறேன்”. 19. நீங்கள் யோசித்தது உண்டா... நம் சரீரத்திற்குள் இன்னொரு மனிதன் இருக்கிறான் என்று அறிந்து நீங்கள் எப்பொழுதாவது நினைத்து இருக்கிறீர்களா? நம் சரீரத்திற்குள் இன்னொரு மனிதன் இருக்கிறான் என்று உங்களுக்கு தெரியுமா? அது ஆவிக்குரிய மனிதன். அதைகுறித்து நீங்கள் யோசித்தது உண்டா, சகோதரர் ரயன்? ஆம் ஐயா, பாருங்கள். அது இங்கு எப்படியாயிருக்கிறது, அந்த உள்ளான மனிதன்... இந்த உள்ளான மனிதன், அது தேவனுடையதாக இருக்குமானால், அது தேவனுடைய ஆவியாக இருக்கும். அது சரிதானா? அது நமக்குள் இருக்கும் நபராக இருக்கிறது. ஏதோவொன்று என் விரல்களை அசைக்காமல் அவைகள் அசைய முடியாது. இங்கு இருக்கும் அறிவுக்கூர்மையினால் அது நடப்பிக்கிறது. சிந்தை உணர்வின்றி செயல்படுகிறது... ஒருவேளை நான் இங்கு வர நினைத்தால் அதைப் பற்றி நான் யோசிக்கத் தேவையில்லை. அது எப்படியிருக்கிறது என்றால், அது விசுவாசம் இருக்கும் வண்ணமாக செயல்படுகிறது. இங்கே மிகவும் வியாதிபட்டிருக்கும் மக்களே, நான் வேத வசனத்தை படிக்கும் முன், நீங்கள் இதை பெற்றுக் கொண்டு நீங்கள் அதனோடு செல்ல வேண்டும் என்று நான் விரும்புகிறேன். இப்பொழுது அது... கடந்த இரவிலிருந்து நான் - நான் சற்று சோர்வடைந்து உள்ளேன். இதை உங்களுக்கு விளக்க விரும்புகிறேன். 20. உணர்வு (conscious) மற்றும் ஆழ் உணர்வு (sub-conscious) என்ற காரியங்கள் உள்ளன அது எப்படியென்றால், நாம் வெளிதேசத்திற்கு கப்பலில் பயணம் செய்வோமென்றால்... அதில் மேல் தளத்தில் ஒரு மனிதன் உட்கார்ந்து கொண்டிருப்பார். அவர் தான் கட்டளைகளை கொடுப்பார். கப்பலின் கீழ்தளத்தில் உள்ள மனிதர் தான் கப்பலை இயங்க செய்வார் ஆனால் அது எங்கு செல்கிறது என்று பார்க்க முடியாது. ஆனால் மேலிருந்து வரும் கட்டளைகளை பின்பற்றுவான். மேலே இருப்பவன், “இடதுபுறமாக திரும்பு அல்லது வலது புறமாக திரும்பு மற்றும் என்ஜினின் வேகத்தை அதிகமாக கூட்டு என்ற காரியங்களை சொல்வான்”, அல்லது அது என்னவாயிருந்தாலும், அவன் அந்த கட்டளைகளின் மூலமாக செய்வான். ஆனால் நம் சரீரத்தின் மத்தியில் இருதயத்தின் உள் உணர்வு காரியம் உள்ளது, மேலும் அது கட்டளைகளை இங்கு இருந்து எடுத்து கொள்கிறது. அநேக முறை மேடையில் நான் பேசுவதை நீங்கள் நிச்சயமாக கேட்டு இருப்பீர்கள். ஓவென்ஸ்ப்ரோவில் நடந்த கூட்டத்தில் முடமான ஒருவர் சுகமானதை குறித்து அன்று ஒரு நாளில் டேப்பில் நான் கேட்டுக் கொண்டிருந்தேன். அது எப்படியாக பேசி உள்ளது. பரிசுத்த ஆவி எப்படியாக பேசினார். 21. இப்பொழுது இங்கே மேடையின் மேல் இந்த உணர்வு தோன்றுகிறது, “சகோதரர் பிரான்ஹாம் கர்த்தருக்கு ஸ்தோத்திரம் எனக்கு விசுவாசம் உள்ளது” ஆனால் சரியாக அதே சமயத்தில், “உனக்கு விசுவாசம் இல்லை என்று உனக்கு தெரியும், என்று அந்த சிறிய உள்ளுணர்வு இப்படியாக சொல்லிக் கொண்டிருக்கும்” பாருங்கள், இந்த உணர்வுகளையும் மற்றும் அந்த உணர்வும் இசைவோடு நீங்கள் கொண்டு வரும்போது, உங்களுக்கு புரிகிறதா? “இந்த உணர்வு எப்போதுமே ஆம் என்று சொல்லும், மற்ற உணர்வும் ஆம் என்று சொல்லும்” ஆனாலும் உங்கள் உள்ளத்தின் ஆழத்தில் உள்ள ஏதோவொன்று அந்த சிறிய நபர், ஆனால் நீங்கள் அதை செய்ய விரும்புகிறீர்கள். அதற்கு ஆம் என்று சொல்ல விரும்புகிறீர்கள், ஆனால் உங்களுக்குள் ஆழத்தில் உள்ள அந்த சிறிய நிழல் உங்களை செய்யும்படியாக... உதவிசெய்ய... நீங்கள் அதிகமாக அந்த சிறிய உணர்வுக்கு செவி கொடுக்க வேண்டாம். எனினும் அவன் தான் ஆளுகை செய்கிறான் என்பதை நீங்கள் கண்டுபிடிப்பீர்கள். பாருங்கள். ஆகையால் இந்த சிறிய உள்ளுணர்வு... எல்லாவற்றுக்கும் பிறகு, அவன் தான் கப்பலை ஓட்டுகிறான்.பாருங்கள். கீழுள்ளவன் தான் வழி நடத்துகிறான். மேலே உள்ளவன் அதிகமாக சத்தத்தோடு பேசலாம். ஆனால் இங்கு கீழே உள்ள மனிதன் தான் இங்கு கப்பலை இயக்குகிறான்.பார்த்தீர்களா? புரிகிறதா? சரியாக இந்த நபர் ஓ, ஆம் அதை நான் விசுவாசிக்கிறேன், “ஓ, நிச்சயமாக அதை நான் செய்வேன்”, என்று சொல்லலாம். நல்லது, அது சரியாக இருக்குமானால் அது தான் நடக்கப் போகிறது... இதுவும் மற்றும் அதுவும் அதனுடன் ஒத்துப் போகிறது. மற்றும் அப்போது அதை நாம் பெற்றுக் கொள்ளலாம். புரிகிறதா? அப்போது அது வேலை செய்யவேண்டும். 22. ஆனால் அக்காரியம் நடக்கும் வரை அது வேலை செய்யாது. அது அப்படியாக ஏனெனில் இந்த வழியாக போக சொல்லி உங்களுக்கு கட்டளையிடப்பட்டது. அதுவும் அந்த வழியாக போய்க் கொண்டிருக்கிறது. ஆனால் அவர்களோ உங்கள் கப்பலை வேறு பக்கமாக செல்ல இழுக்கிறார்கள். அப்பொழுது நீங்கள் அந்த துறைமுகத்திற்கு போய் சேர முடியாது. உங்களுக்கு புரிகிறதா? இன்னுமாக நீங்கள் அங்கேயே இருப்பீர்கள். அவர்களை நாம் சம்மதிக்க வைக்கவேண்டும். மற்றும், “தேவன் சரியாக இருக்கிறார்” என்று சொல்ல வைக்க வேண்டும். இது சொல்லும் “தேவன் சரி என்று” அது சொல்லும், “தேவன் சரி என்று” அப்போது நாம் முன்னோக்கி போகலாம், பாருங்கள். கட்டளைகள் மற்றும் எல்லாவற்றையும் நாம் பெற்றிருக்கிறோம். உங்களுக்கு எல்லா அறிகுறிகளும் இருந்தாலும், நீங்கள் செல்லும் வழியில் எந்த தடையும் இருக்காது. நீங்கள் சந்தேகிக்கும்படியாக எந்த ஒன்றும் இருக்காது. மறுபடியுமாக காலையில் நீங்கள் மருத்துவமனைக்கு செல்லக்கூடும். மற்றும் அவர்கள் சொல்லலாம், “உங்கள் கை இன்னுமாக விறைப்பாக உள்ளது, உங்களுடைய புற்று நோய் இன்னுமாக இருக்கிறது”, அந்தகாரியம் சிறிது அளவு கூட... அது கொஞ்சம் கூட உங்களை பாதிக்காது. பாருங்கள், அதுவும், இதுவும், மற்றும் இதுவும் ஒன்றாக ஒப்புக்கொண்டால் பாருங்கள், அது சரி விசுவாசம் எதையும் செய்யும். 23. இப்போது உங்களுக்குள் தேவன் இருக்கிறார். பரிசுத்த ஆவியை பெற்றுக்கொண்ட மக்கள் உங்களுக்குள் தேவன் இருக்கிறார். அதை விசுவாசிக்கிறீர்களா? இயேசு சொன்னார், “நான் உங்களுக்கு வல்லமையை கொடுக்கிறேன், தேவ கிருபையால் சபையின் பெலவீனத்தை நான் உங்களுக்கு காண்பிக்கட்டும்” அசுத்தாவியின் மேல் நான் உங்களுக்கு அதிகாரத்தை கொடுக்கிறேன். அவர்களை நீங்கள் துரத்துவீர்கள். நான் அல்ல, “நீங்கள் என் நாமத்தினாலே நீங்கள் பிசாசுகளை துரத்துவீர்கள், அவர்கள் நவமான பாஷைகளை பேசுவார்கள், சர்ப்பங்களை எடுப்பார்கள், மற்றும் சாவுக்கேதுவான யாதொன்றையும் அவர்கள் குடித்தால் அது அவர்களை சேதப்படுத்தாது” மகத்தான பவுலை குறித்து நினைவுகூறுங்கள். ஒரு சமயம் ஒரு தீவுக்குள் சென்றார். அவருடைய கப்பல் சிதைந்து அவன் ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு செல்வான் என்று தேவன் வாக்குத்தத்தம் செய்தார். அவன் ரோமா தேசத்திற்கு சென்று ராயன் எதிரில் நிற்கவேண்டும் என்றார். அவன் தேவனை விசுவாசித்தான். ஆகவே அவன் அந்த புருஷர்களுக்கு உதவி செய்துகொண்டு இருந்தான். அவன் சங்கிலியால் கட்டப்பட்டு இருந்தான் அவன் ஒரு கைதி நெருப்பு மூட்ட கட்டைகளை எடுக்க உதவி செய்து கொண்டிருந்தான். 24. பவுல் சில மர கட்டைகளை போடும் போது, பெரிய கொடிய மிருகமான சர்ப்பம் அவன் கரத்தை கடித்தது. மேலும் அந்த மிருகம் மிகவும் கொடியது. அது யாதொருவரை கடித்தால் ஒரு நிமிடம் அல்லது இரண்டு நிமிடத்தில் இறந்து விடுவார்கள். ஆகவே அந்த ஊர் மக்கள் சொன்னார்கள், “அந்த மனிதன் அவன் சங்கிலியில் கட்டப்பட்டு இருக்கிறான். அவன் ஒரு கைதி. நிச்சயமாக அவன் ஒரு கொலைபாதகனாக இருக்கக்கூடும். ஏனெனில் புயலில் இருந்து அவன் தப்பியிருக்கலாம். ஆனால் இந்த சர்ப்பத்தில் இருந்து அவன் தப்ப முடியாது. அவன் சாகப்போகிறான்”. இப்போது கவனியுங்கள், பவுல் அதை பார்த்து கவனித்தான். இந்த புலனும், அந்த புலனும் மற்றும் அந்த உணர்வும் எல்லாம் ஒப்புரவாக இருந்தது. ஒரு பயமும் அவனுக்கு இல்லை. அவர் சொன்னார், “அவர்கள் சர்ப்பத்தை எடுப்பார்கள், அது அவர்களை சேதப்படுத்தாது”, பவுல் அந்த சாவுக்கேதுவான அந்த பாம்பு கடித்ததை பார்த்தான். ஒரு பயமும் இல்லை. நீங்கள் பயந்தீர்களென்றால் சாத்தான் உள்ளே நுழைவான். பயம் சாத்தனாக இருக்கிறது. ஆனால் பரிபூரணமான அன்பு எல்லா பயத்தையும் வெளியேற்றும். அப்படித்தான் நீங்கள் இருக்க வேண்டும். “நான் தேவ மனிதன், அதோ சர்ப்பம் தொங்கிக் கொண்டிருக்கிறது. ஆனால் இங்கோ அல்லது அங்கோ ஒரு துளி கூட பயமும் இல்லை”, பாருங்கள். அது எல்லாம் இசைவோடு இருக்கிறது. 25. அந்த சர்ப்பத்தை அவன் பார்த்தான். நல்லது என்று எண்ணினான். அதை நெருப்பில் உதறினான். பின் சென்று இன்னும் அதிகமான மரக்கட்டைகளை எடுத்துக் கொண்டு வந்து அதன் மேல் போட்டான். நீங்கள் சொல்லலாம், “பவுல் நீ மரித்துப் போவாய் என்ற பயம் இல்லையா?” “நிச்சயமாக இல்லை, அவ்வாறு மரிக்க முடியாது. பரிசுத்த ஆவியானவர் என்னுள் இருக்கிறார்”, என்றான். வானத்தையும் பூமியும் சிருஷ்டித்த அதே பரிசுத்த ஆவியானவர், அந்த சர்ப்பத்தின் பற்கள் அவன் சரீரத்திற்குள் செல்ல முடியாத அளவிற்கு அந்த மனிதனை தன்னுடைய வல்லமையால் முழுமையாக நிரப்பியிருந்தார். ஏனெனில் அவன் சரீரம் முழுவதுமாக இரத்தம் நிரம்பி இருப்பதை போல் பரிசுத்த ஆவியால் நிரப்பப்பட்டிருந்தான். பாருங்கள், அது சரிதானா? 26. மேலும் இரத்தத்திற்குள் இருக்கும் ஒவ்வொரு அணுக்களில் ஜீவன் இருக்கிறது. நீங்கள் அனைவரும் முழுமையாக பரிசுத்தாவியினால் நிரப்பப்பட்டிருக்கிறீர்கள். அவர்கள் நிச்சயமாக தண்ணீரில் நடந்தார்கள். மகத்தான அற்புதங்கள் மற்றும் அநேக காரியங்களை செய்தார்கள். எதினால்? அவர்கள் தேவனோடு மிகவும் சரியான இசைவோடு இருந்தார்கள், அப்படித்தான் முதல் சபை இருந்தது. மற்றும் கிறிஸ்தவ நண்பர்களே, நாம் அதை பெற்றுக் கொள்வதற்கு திரும்பி செல்லும் வரை... இப்பொழுது நீங்கள்... ஸ்தாபனங்களோடு குறை கூறிக்கொண்டும் சண்டையிட்டுக் கொண்டும் மற்றும் தர்க்கம் செய்யக் கூடாது. அப்படியிருந்தால் நாம் அதை ஒருபோதும் பெற்றுக் கொள்ள முடியாது. ஸ்தாபனங்கள் நம்மை அந்த இடத்திற்கு கொண்டு செல்ல முடியாது. தேவன் மேல் நாம் வைத்து இருக்கும் பரிபூரண அன்பு மற்றும் திட நம்பிக்கை மட்டும் தான் அதை கொண்டு வரும். பாருங்கள். அதை தான் நீங்கள் செய்ய வேண்டும்... புரிகிறதா? மற்றும் நீங்கள்... நாம் உரக்ககத்தலாம், நாம் அந்நிய பாஷையில் பேசலாம், நாம் இதைசெய்யலாம், வேதசாஸ்திரத்தில் நாம் மகத்தான போதகராக இருக்கலாம். நாம் டி.டி பட்டத்தை பெற்று, அது நம் மேல் தொங்கிக்கொண்டிருக்கலாம், ஆனால் அதுவும் இதுவும் ஒன்றாக இசைந்து வராமல், அது ஒருபோதும் வேலை செய்யாது.பாருங்கள், அது செயல்பட... 27. அது ஒரு வெளிச்சத்தை போல் உள்ளது. வெளிச்சம் தரும் பல்பை போல ஒரு கம்பியை எடுப்போமானால் நேர்முறையோ அல்லது எதிர் முறையோ அது நிச்சயமாகவே வேலை செய்யாது. அவ்வளவு தான். அதற்கு சரியான மின் புதைப்பு இருக்க வேண்டும். அது சரியானபடி பூமியில் புதைக்கப்பட வேண்டும். சரியான கம்பியும் மற்றும் எல்லாவற்றும் சரியாக பொருத்தியிருக்க வேண்டும். பின் அது மின்சாரத்தை பாயச் செய்யும். அதற்கு தேவையானது எல்லாம் அது தான். நாமும் கிறிஸ்துவுக்குள் சரியாக இணைக்கப் பட்டிருப்போ மென்றால், பாருங்கள் நமக்குள் பரிசுத்த ஆவியை கொண்டு தேவனின் விசுவாசத்தில் வேரூன்றி மற்றும் சரியாக பொருத்தப்பட்டு இருப்போமென்றால் அது நிச்சயமாகவே உலகத்திற்கு சுவிசேஷ வெளிச்சத்தை காண்பிக்கும். அது சரிதான். அது வியாதியஸ்தர்களை குணப்படுத்தும் மகத்தான கிரியைகளை செய்யும். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக. கிறிஸ்தவர்களே மற்றும் அவருடைய ஆசீர்வாதங்களை நீங்கள் பெற்றுக்கொள்வீர்களாக. இப்போது எண்ணாகமம் ஜெப வரிசையை துவங்க வேண்டிய நேரத்தை கடந்து சென்றாயிற்று. ஆயினும் எண்ணாகமத்தில், 21-ம் அதிகாரத்தில் வாசிக்க விரும்புகிறேன். சில நேரத்திற்கு முன் என் இருதயத்தில் அக்காரியம் அதிகமாக ஊற்றியதால் அதை படிக்கவேண்டும் என்று எண்ணுகிறேன். அது மிகவும் பிரசித்தி பெற்றது. அது மோசே மற்றும் இஸ்ரவேல் பிள்ளைகளை குறித்ததாயுள்ளது. நாம் அதை வாசிக்கையில் தேவன் அவர் வார்த்தையை ஆசீர்வதிப்பார் என்று நம்புகிறேன். 28. இதை நான் படிக்கையில் நான் சொன்ன காரியங்களை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். பாருங்கள், அவைகளை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். பாருங்கள், இயேசு அந்த மரத்தை கடந்துபோகையில் அதை நோக்கி அவர் பார்த்தார். அதில் எந்த கனியும் இல்லை. அவர் சொன்னார், “இனி ஒருவரும் உம்மில் புசிக்கமாட்டார்கள்”, பின் எருசலேம் சென்றார்கள். அங்கு அவர்கள் குறை சொல்லி கொண்டு இருந்தார்கள். அதை அவரால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. அவரை சுற்றிலும் ஒருவிதமான தவறான சூழ்நிலை இருப்பதினால், அவர் அங்கிருந்து கடந்து சென்றுவிட்டார். மறு நாள் காலை மலை பகுதிக்கு அவர் வந்தார். பதினொன்றை மணியளவிற்கு அந்த இடத்தை அவர்கள் மறுபடியும் கடந்து சென்றபோது அது பகல் நேரம் என்று எண்ணுகிறேன். பேதுரு அந்த மரத்தை பார்த்தான், அவன் சொன்னான், “இதை கவனியுங்கள், நேற்று தான் நீங்கள் சொன்னீர்கள். அந்த மரம் வேரிலிருந்தே மரித்து இருக்கிறது”, பாருங்கள் அது காய்ந்து போயிருக்கிறது. 29, இயேசு சொன்னார், தேவன் மீது விசுவாசம் கொள்ளுங்கள். அது சரிதானா? எவனாகிலும் இந்த மலையைப்பார்த்து: “நீ (நான் அல்ல நீ) பெயர்ந்து சமுத்திரத்திலே தள்ளுண்டு போ என்று சொல்லி, தான் சொன்னபடியே நடக்கும் என்று தன் இருதயத்தில் சந்தேகப்படாமல் விசுவாசித்தால், அவன் சொன்னபடியே ஆகும் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்”, அது அவ்வாறு செய்தாக வேண்டும். நீங்கள் சந்தேகப்படாமல் விசுவாசித்தால் நீங்கள் எதை சொன்னீர்களோ அது அதை அப்படியாகவே செய்தாக வேண்டும். இங்கே அதை நீங்கள் விசுவாசிக்க வேண்டும். இந்த உள் மனதிலும் கூட நீங்கள் விசுவாசிக்க வேண்டும். இந்த உள் மனதும் மற்றும் உணர்வும் தேவனோடு இசைவாக இருக்கும்போது அப்போது அது நடக்கும். இப்போது எண்ணாகமம் 21ம் 5 – 10-ம் வசனம்: “ஜனங்கள் தேவனுக்கும் மோசேக்கும் விரோதமாகப் பேசி: நாங்கள் வனாந்தரத்திலே சாகும்படி நீங்கள் எங்களை எகிப்து தேசத்திலிருந்து வரப்பண்ணினதென்ன? இங்கே அப்பமும் இல்லை, தண்ணீரும் இல்லை, இந்த அற்பமான உணவு எங்கள் மனதுக்கு வெறுப்பாயிருக்கிறது என்றார்கள். அப்பொழுது கர்த்தர் கொள்ளிவாய் சர்ப்பங்களை ஜனங்க ளுக்குள்ளே அனுப்பினார் அவைகள் ஜனங்களைக் கடித்ததினால் இஸ்ரவேலருக்குள்ளே அநேக ஜனங்கள் செத்தார்கள். அதினால் ஜனங்கள் மோசேயினிடத்தில் போய்: நாங்கள் கர்த்தருக்கும் உமக்கும் விரோதமாய்ப் பேசினதினால் பாவஞ் செய்தோம் சர்ப்பங்கள் எங்களைவிட்டு நீங்கும்படி கர்த்தரை நோக்கி விண்ணப்பம் பண்ணவேண்டும் என்றார்கள். மோசே ஜனங் களுக்காக விண்ணப்பம் பண்ணினான். அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: நீ ஒரு கொள்ளிவாய்ச் சர்ப்பத்தின் உருவத்தைச் செய்து, அதை ஒரு கம்பத்தின் மேல் தூக்கிவை கடிக்கப்பட்டவன் எவனோ அவன் அதை நோக்கிப் பார்த்தால் பிழைப்பான் என்றார். அப்படியே மோசே ஒரு வெண்கலச்சர்ப்பத்தை உண்டாக்கி, அதை ஒரு கம்பத்தின் மேல் தூக்கி வைத்தான். சர்ப்பம் ஒருவனைக் கடித்தபோது, அவன் அந்த வெண்கலச் சர்ப்பத்தை நோக்கிப் பார்த்துப் பிழைப்பான். புத்திரர் பிரயாணப்பட்டுப்போய், ஓபோத்தில் இஸ்ரவேல் பாளய மிறங்கினார்கள். 30. இப்போது என்னுடைய வேதாகமத்தில் முழுவதுமாக எல்லாம் எழுதுகோளால் மேற்கோளிடப்பட்டு உள்ளது. ஆகையால் நான் எதை குறித்தேனோ அதை தவறவிட்டேன். மன்னிக்கவும், கர்த்தர் தாமே வாசித்த அவர் வார்த்தையை ஆசீர்வதிப்பாராக. பிரச்சனை உண்டாகும்போது தேவன் அவருடைய பிள்ளைகளுக்கு, தேவை இருக்கும் போது அந்த தேவையை சந்திக்குமபடியான தேவனாக எப்போதுமே இருக்கிறார். அது உங்களுக்கு தெரியும். மேலும் தேவன் அவர்கள் தேவையை சந்திக்கும்படி வாக்கு அளித்து இருக்கிறார். இப்போது அவர்கள் தவறு செய்தபோதிலும் மற்றும் பாவம் செய்து தவறான காரியங்களை அவர்கள் செய்த போதும், அவர்களுக்கு சுகம் தேவைப்பட்டபோது, தேவன் அந்த சுகத்திற்கு இன்னுமாக பரிகாரம் இல்லாத போதும் சுகத்திற்காக தேவன் ஒரு பரிகாரத்தை கொடுத்தார். பாருங்கள். தேவன் அதை செய்தார். எல்லா கடினமான சூழ்நிலையை சந்திக்க தேவன் ஒரு வழியை உண்டாக்கினார், அவைகளிலிருந்து தப்பிக்க தேவன் ஒருவழியை உண்டாக்குவார். அவரை விசுவாசித்தால் மற்றும் அவருக்குள் நீங்கள் விசுவாசம் மற்றும் நம்பிக்கை கொள்வீர்களென்றால் தேவன் செய்வார். 31. அவர்கள் ஒரு வனாந்தரத்தில் இருந்தார்கள். மோசே மருத்துவராக இருந்திருக்கக் கூடும். எகிப்தின் எல்லா ஞானங்களையும் கற்பிக்கப்பட்டான். மற்றும் சர்ப்பத்தின் கடிகளுக்கு உண்டான மருந்தும் அவன் அறிந்திருக்கக்கூடும். ஆனால் இந்த சமயம் அவன் அறிந்து கொண்ட பரிகாரங்கள் எகிப்தின் ஞானங்கள் வேலை செய்யவில்லை. ஏனென்றால் மக்கள் மோசேயுடன் தர்க்கம் செய்துகொண்டு இருந்தபடியால், எங்களை ஏன் இந்த வனாந்தரத்திற்கு அழைத்து கொண்டு வந்தாய் என்று சொன்னார்கள். மற்றும் எல்லா சமயத்திலும் குறை கூறிக்கொண்டு இருந்தார்கள், அது பாவத்தை கொண்டு வந்தது. மேலும் வியாதி நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பாவத்தினால் வருகிறது. பாவம் வருமுன் நமக்கு வியாதிகள் இல்லை. ஆகவே வியாதி பாவத்தின் தன்மையாக இருக்கிறது. ஒரு வேளை அது நீ செய்ததாக இராமல் இருக்கலாம். ஆனால் அது உன் வம்சத்தின் மூலமாக வந்ததாகவும் இருக்கலாம். ஏனெனில் பெற்றோர்கள் தேவனுக்கு கீழ்ப்படியாததினால் வியாதியினால் அவர்களை தேவன் சந்தித்தார். ஏனெனில் அது மூன்று அல்லது நான்காம் தலைமுறை வரைக்கும் அது தொடர்ந்து செல்லும் என்று அவர் வாக்கு அளித்துள்ளார். சில சமயம் நல்ல மருத்துவர்கள் இருக்கிறார்கள். நீங்கள் மருத்துவரிடத்தில் போவீர்களென்றால். மற்றும் அவர் நல்ல மருத்துவராக இருப்பார்களென்றால் நீங்கள் அவர்களிடத்தில், “மருத்துவரே எனக்கு தலைவலியாக இருக்கிறது”, என்று சொல்லலாம். அவருக்கு அந்த வியாதியஸ்தர் மீது அக்கறை இருந்தால் அவர் இவ்வாறு சொல்லமாட்டார், “ஒரு ஆஸ்பிரின் எடுத்துக்கொண்டு வீட்டிற்கு செல்”, என்று சொல்லமாட்டார். முதலாவதாக அதற்கு காரணம் எங்கே இருக்கிறது என்று அதை கண்டுபிடிக்கும் வரை அலசிப்பார்த்து கண்டடைவார். பாருங்கள் ஏதோ ஒரு காரணத்தினால் தலைவலி உண்டாகிறது. ஒருவேளை அந்த ஆஸ்பிரின் அதை குணப்படுத்தலாம் எனக்கு தெரியாது. ஆனால் அவர் ஒரு நல்ல மருத்துவராக இருப்பாரென்றால் அதை மேலோட்டமாக பார்த்து அதை விட்டுவிடமாட்டார், அவரால் முடிந்தவரை மிக சிறந்ததையே செய்வார். 32. உங்களுக்கு குடல்வால் அழற்சி இருக்கக்கூடும். நாம் அதற்கு அறுவைசிகிச்சை செய்யலாம் என்று அவர் சொல்லுவாரென்றால், அந்த வியாதிக்கான காரியத்தை கண்டடையாமல் சொல்லுவது ஒழுங்கின்மையான காரியமாகும். பாருங்கள், முதலாவதாக அந்த பிரச்சனை எதினால் இருக்கிறது என்று கண்டறிய வேண்டும். இந்த கூட்டங்களில் அது போல் தான் தேவன் செய்கிறார். அக்காரணத்தால் தான் நான் மெதுவாக வியாதியஸ்தர்களிடத்தில் முதலாவதாக நான் அணுகுவது, ஏதோவொறு காரணத்தினால் தான் அந்த வியாதி உண்டானது. மருத்துவரால் எதுவும் உங்களுக்கு செய்ய முடியவில்லையென்ற நிலையில் அந்த வியாதியிலிருந்து நீங்கள் விடுபடு முன் அதற்கு உண்டான காரணத்தை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும். ஆகவே அநேக முறை... கூட்டத்திற்கு வரும் நீங்கள், பரிசுத்த ஆவியானவர் மக்களுக்கு மறைக்கப்பட்ட பாவத்தையும் நீண்ட ஆண்டுகளுக்கு முன்பு அவர்கள் செய்ததையும் எவ்வாறு வெளிப்படுத்துவார் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும், அவர்கள் செய்யக் கூடாத ஏதோ ஒன்று அல்லது அவர்கள் செய்திருக்க வேண்டிய காரியமும் மற்றும் செய்யக் கூடாத காரியத்தையும் செய்திருக்கலாம். இக்காரியங்ளை நீங்கள் மேடையில் கவனிக்கலாம். 33. இப்போது அது தேவன் அவருடைய ஆவியை அனுப்பி மக்கள் இருதயத்தின் இரகசியங்களை வெளிப்படுத்துகிறார். இயேசு கிறிஸ்து இங்கு இருந்தபோது அது தான் அவருடைய ஊழியமாக இருந்தது. ஜீவ தண்ணீருக்காக தாகித்த ஸ்திரீயை அவர் கண்டடைந்த போது அதை செய்தார். அதை நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? பரிசுத்த யோவான் 4-ம் அதிகாரம், மேலும் இயேசு அவளோடு சம்பாஷித்து கொண்டிருந்தார். அவர் சொன்னார்... அவள் ஒரு சமாரியாவை சேர்ந்தவள் யூதர் அல்ல, மற்றும் அவர், “தாகத்துக்கு தா”, என்று கேட்டார். அவர் துரிதமாக அவளோடு சம்பாஷிக்க ஆரம்பித்தார். “நீர் யூதனாயிருக்க, சமாரியா ஸ்திரீயாகிய என்னிடத்தில் தாகத்துக்குத் தா என்றுஎப்படிக் கேட்கலாம்” என்றாள். இயேசு அவளுக்குப் பிரதியுத்தரமாக: “நீ தேவனுடைய ஈவையும் தாகத்துக்குத் தா என்று உன்னிடத்தில் கேட்கிறவர் இன்னார் என்பதையும் அறிந்திருந்தாயானால் நீயே அவரிடத்தில் கேட்டிருப்பாய்”, என்றார். உடனடியாக அவளுக்கு அந்த தண்ணீர் வேண்டும் என்று எண்ணினாள். இயேசு அவளை நோக்கி: “நீ போய் உன் புருஷனை இங்கே அழைத்துக் கொண்டு வா” என்றார். பாருங்கள் அவர் என்ன செய்தார் என்று பார்த்தீர்களா? அவள் இந்த தண்ணீரை குடிக்காதபடிக்கு தடையாக இருக்கும் காரணத்திற்கு நேராக சென்றார். பாருங்கள் அந்த தண்ணீரை பெற்று கொள்ளுமுன் அதற்கு ஒரு காரணம் இருந்தது. அதற்கு அந்த ஸ்திரீ: “எனக்குப் புருஷன் இல்லை” என்றாள். “நீ சொன்னது சரிதான். எப்படியெனில் ஐந்து புருஷர் உனக்கிருந்தார்கள் இப்பொழுது உனக்கிருக்கிறவன் உனக்குப் புருஷனல்ல. இதை உள்ளபடி சொன்னாய்”, என்றார். வேறு வார்த்தையில் சொல்ல வேண்டுமென்றால் அவள் சட்டப்பூர்வமான திருமணம் செய்யப்படாத மனைவியாக இருந்தாள். 34. அந்த ஸ்திரீ அவரை நோக்கி: “ஆண்டவரே நீர் தீர்க்கதரிசிஎன்று காண்கிறேன். அந்த ஸ்திரீ அவரை நோக்கி: மேசியா வருகிறார் என்று அறிவேன் அவர் வரும்போது எல்லாவற்றையும் நமக்கு அறிவிப்பார்”, என்று நான் அறிந்திருக்கிறேன் என்றாள். அதற்கு இயேசு: நானே அவர், “உன்னுடனே பேசுகிற நானே அவர்”, என்றார். நான் தான் மேசியா என்றார். ஆகவே அவள் பட்டணத்திற்குள் சென்று, அவளுடைய பாவங்கள் மட்டும் மன்னிக்கப்பட்டது மட்டுமல்லாமல், இயேசு மக்களிடத்தில் பேசியபோது திரளான மக்கள் அவர் மீது நம்பிக்கை கொள்ளும்படியாக அவள் செய்தாள். பரிசுத்த ஆவியானவர் வந்த பிறகு, பிலிப்பு அவர்களிடத்தில் பிரசங்கிக்க சென்றபோது... நமக்கிருக்கும் வேத வசனத்தின்படி சமாரியாவில் அவர் இருக்கும் போது, ஒரு அற்புதத்தையும் இயேசு செய்யவில்லை. அவர் அங்கு சென்ற போது தேவனுடைய ராஜ்ஜியத்தைபற்றி மட்டுமே சொன்னார். மேலும் அந்த ஸ்திரீயிடத்தில், அவர் பேசியதை நாங்களே கேட்டபடியால் இப்போது நாங்கள் விசுவாசிக்கிறோம். அவர் மற்ற மக்களை விட வேறுபட்டவராக இருக்கிறார், மற்றும் அவர் தான் மேசியா என்று அறிந்துகொண்டோம், என்று அவர்கள் சொன்னார்கள். 35. ஆகவே பிலிப்பு அங்கு சென்று அவர்களுக்கு பிரசங்கித்த போது இயேசு ஏற்கனவே அங்கு செய்தியை நிலவரப்பட செய்திருந்தார். அச்சமயத்தில் ஒரு வேளை அவர்களுக்குள் இவ்வாறு சம்பாஷித்திருக்கலாம், “மேசியா பூமியில் இருக்கிறார் என்று நாம் அறிந்து இருக்கிறோம்”, இப்போது எல்லாம் சரியாகிவிடும். அவர்களிடத்தில் பிலிப்பு பிரசங்கிக்க சென்றபோது, அப்போது சுகம் பெற்றுக்கொள்ளுதல், மகத்தான அடையாளங்கள், மற்றும் அதிசயங்கள் நடந்தன. அதன் பின் யாக்கோபு அல்லது யோவான், பேதுருவோடு வந்து விசுவாசிகளாகிய சரீரத்திற்குள் ஞானஸ்நானம் கொடுத்தார். பரிசுத்த ஆவியானவர் அவர்கள் மீது வந்து அதிலிருந்து சபை துவங்கியது. தேவன் எவ்வாறு அந்த காரியத்தை செய்தார் என்று பார்த்தீர்களா? அந்த நபரின் பிரச்சனையை அவர் ஆராய்ந்து அவனுக்குள்ளிருந்த எல்லாவற்றையும் அகற்றி பின்பு அந்த நபருக்குள் நேராக அவர் வந்து அந்த மனிதனுக்குள் அவரே வாசம் செய்கிறார். 36. அக்காரியத்தை தான் தேவன் இந்த இரவு பொழுதில் செய்ய விரும்புகிறார். இங்கு பாவம் இருக்குமென்றால், கூடியிருக்கும் மக்கள் மத்தியில் பாவம் இருக்குமானால் எல்லா பாவத்தையும் எடுத்து போட அவர் விரும்புகிறார். இங்கு அவ்வாறு ஒருவரும் இல்லாதவாறு நான் ஜெபிக்கிறேன், ஆனால் அப்படி இருக்குமானால்...“சகோதரர் பிரான்ஹாமே பாவம் என்றால் என்ன? நல்லது இன்றைக்கு நான் சொல்லுகிறேன், என் கோபத்தை நான் இழந்துவிட்டேன்”, இப்போது ஒரு நிமிடம் பாவம் என்றால், “அவிசுவாசம் அது தான் பாவம்”. இப்பொழுது அதுதான் பாவமாகும். அவிசுவாசத்தை தவிர வேறு பாவம் இல்லை. குடிப்பது, புகைபிடிப்பது, சீட் ஆட்டம் ஆடுவது, விபச்சாரம் என்ற காரியங்கள் பாவம் அல்ல. அது பாவம் அல்ல. அது பாவத்தின் விளைவுகள். நீங்கள் ஒரு அவிசுவாசியாக இருப்பதால் அந்த காரியங்களை நீங்கள் செய்வீர்கள், பாருங்கள், அவைகள் பாவத்தின் தன்மைகள். 37. நீங்கள் விசுவாசித் தீர்களென்றால் அதை நீங்கள் செய்யமாட்டீர்கள். இயேசு, “என் வார்த்தைக்கு செவிகொடுத்து என்னை அனுப்பினவரை விசுவாசிக்கிறவனுக்கு நித்திய ஜீவன் உண்டு, ஏனெனில் அவன் என்னை விசுவாசித்தான்”, என்றார். இப்போது நீங்கள் விசுவாசித்தீர்களென்றால் அக்காரியங்களை செய்யமாட்டீர்கள். தானியத்தை செய்ய முடியாது. ஒரு கோதுமை மணியை மறு ஊமத்தையாக மாற்ற முடியாது, உங்களால் முடியுமா. இல்லை ஐயா.அவ்வாறு செய்வதற்கு வழியேயில்லை. அதில் இருக்கும் ஜீவன் கோதுமை. ஆகவே அது கோதுமையை உற்பத்தி செய்யும். மேலும் நீங்கள் தேவ ஆவியால் பிறந்திருப்பீர்களென்றால்...நீங்கள் ஒரு கிறிஸ்தவன். கிறிஸ்தவ கனிகளை தவிர வேறு ஒன்றையும் உங்களால் கொடுக்கமுடியாது. அவ்வளவு தான். அது தான் முழு காரியம். மேலும் நீங்கள், வேறு ஒரு கனிகளை கொடுப்பீர்களென்றால் இயேசு சொன்னார், “அவர்களுடைய கனிகளினாலே அவர்களை அறிவீர்கள்”,. அது சரிதானா? அவர்கள் செயல்களால் அல்ல, இதனால் அல்ல, அதினால் அல்ல, ஆனால் அவர்களுடைய கனிகளினாலே. 38. இப்போது கோதுமை, நீங்கள் சொல்லலாம் அந்த நிலத்தில் நான் கோதுமையை விதைத்தேன். நான் அங்கு சென்று பார்க்கும்போது கோதுமையின் கனிகளை காணவில்லையென்றால் உங்கள் மீது எனக்கு சிறிது சந்தேகம் வரும். பாருங்கள் ஆனால் கோதுமை விதைத்தேன் என்று நீங்கள் சொல்லி, மற்றும் அங்கு கோதுமை விளைச்சல் இருக்குமானால் நீங்கள் சரியாக இருக்கிறீர்கள். அதன் கனிகளினினால் நீங்கள் நிலத்தில் என்ன கொண்டு இருக்கிறீர்கள் என்று நிரூபிக்கிறது. அது தான் கோதுமை. மேலும் அவிசுவாசம் மட்டுமே தேவனுடைய ராஜ்ஜியத்திலிருந்து உங்களை தூரமாக வைப்பது அது அவிசுவாசம் மட்டுமே. அந்த அவிசுவாசம் மட்டும் தான் பாவமாகும். நீங்கள் சொல்லலாம், “சகோதரர் பிரான்ஹாம், நான் குடிப்பதை நிறுத்திவிட்டேன். இக்காரியங்கள் எல்லாம் நிறுத்திவிட்டேன். பொல்லாத வழியிலிருந்து விலகி விட்டேன்”, அந்த காரியங்கள் எல்லாவற்றையும் ஒரு நோக்கத்தில் தான் செய்தீர்கள். பாருங்கள். ஒரு காரியம் மட்டுமே அவ்வாறு செய்ய வைத்தது. அது என்னவென்றால் நீங்கள் விசுவாசியானீர்கள். பாருங்கள். 39, நீங்கள் இப்படி சொல்லலாம் நான் ஒரு விசுவாசி அல்ல. அப்படியாக இருப்பதை நிறுத்திவிட்டேன். அப்படியென்றால் நீங்கள் கிறிஸ்தவன் அல்ல. பாருங்கள் நீங்கள் கிறிஸ்தவன் அல்ல. நீங்கள் எவ்வளவு ஒழுக்கமாக இருக்கிறீர்கள் என்பது அது பொருட்டல்ல. எல்லா பத்து கட்டளைகளையும் காத்து கொண்டு எல்லாவிதமான ஒழுங்கான காரியங்கள் செய்து கொண்டு அவிசுவாசியாக இருப்பீர்களென்றால் அப்போதும் நீங்கள் கிறிஸ்தவன் அல்ல. நீங்கள் இன்னுமாக மரித்தவராக இருக்கிறீர். தேவனுடைய ராஜ்ஜியத்திற்கு நீங்கள் வருவதை பொறுத்தவரை தேவனுடய பார்வையில் நீங்கள் இன்னுமாக மோசமான நபராக இருப்பீர்கள். ஒவ்வொரு மனிதனும் பாவியாக இருந்தாலும் இல்லையென்றாலும் அவன் ஒரு ஒழுக்கமான நபராக இருக்க வேண்டுமென்று நான் நம்புகிறேன். ஒழுக்கமான காரியங்களை நான் எடுத்துப் போடும் படியாக நான் முயற்சிக்கவில்லை. நான் என்ன சொல்லுகிறே னென்றால் அந்த மனிதன் உண்மையாகவே... “நல்லது, விரைவில் புது வருடம் வருகிறது என்று சொல்லுவார்கள், மற்றும் மக்கள் நான் ஒரு புதிய பக்கத்தை திருப்புகிறேன்”, என்று சொல்லிக் கொண்டிருப்பார்கள். அது ஒரு நன்மையையும் தராது. அதை ஏன் நீங்கள் திருப்பகூடாது. அது ஒரு பக்கம் பெறுவதல்ல. ஆனால் ஒரு புத்தகத்தை பெறுவதாகும். அதுதான் உண்மை. புத்தகத்தை மாற்றுங்கள். அதன் பிறகு அதிலிருந்து தேவன் உங்களை பார்த்துக்கொள்வார். அதன்பின் அவருடைய பரிசுத்த ஆவி நமக்குள் வந்து, நாம் அவருக்கு பிரதிநிதியாக இருப்போம். அதன்பின் நாம் கிறிஸ்தவ ஆவியினால் ஆதிக்கம் பண்ணப்படுவோமானால் கிறிஸ்தவ கனிகளை தவிர வேறு எந்த கனிகளையும் நாம் கொடுக்கமாட்டோம். அது சரிதானா? கிறிஸ்தவனுடைய ஆவியே, கிறிஸ்துவின் ஆவியாகும். 40. பின்பு இயேசு சொன்னார், “நான் செய்யும் காரியங்களை நீங்களும் செய்வீர்கள், நான் செய்யும் அதே காரியங்களை நீங்களும் அதிகமாக செய்வீர்கள். நான் என் பிதாவிடத்தில் செல்கிறேன்”, அது சரிதானா?. அவர் இப்பொழுது, சிறிது காலம் இந்த உலகம் என்னைகாணாது என்று அவர் சொன்னார். அதுதான் அந்த அவிசுவாசியாகும். பாருங்கள். காஸ்மோஸ் உலகத்தின் கோட்பாடுகள். “ஆயினும் நீங்கள் என்னை காண்பீர்கள்”, அது தான் விசுவாசியாகும். “ஏனெனில் நான் உங்களோடு இருப்பேன், இந்த உலகத்தின் முடிவுமட்டும் இருப்பேன்”, அது தான் விசுவாசியாகும். இப்போது அந்த பரிபூர்ண கிறிஸ்தவ ஜீவியத்தின் தன்மைகள் அது ஒரு கூட்டம் மக்களுக்குள் இருக்கும். மற்றும் இயேசு கிறிஸ்துவின் இரண்டாவது வருகை மட்டும் அது ஜீவிக்கும். தேவனை குறித்து நான் கொண்டு இருக்கும் கருத்தை அவர் என்னவாக இருக்கிறார் என்பதை நான் உங்களுக்கு சொன்னேன் என்று நான் நம்புகிறேன். இதை கேளுங்கள், தேவன் எப்போதுமே மூன்று தன்மையோடு உள்ளார் என்று நான் நம்புகிறேன். கிறிஸ்து, தேவனின் பரிசுத்த நபர் அது எவ்வாறு என்றால் மூன்று அடி அளவுகோல் போல, முதல் பன்னிரண்டு அங்குலம் பிதாவாகிய தேவன், இரண்டாவது பன்னிரண்டு அங்குலம் தேவ குமாரன், மூன்றாவது பன்னிரண்டு அங்குலம் பரிசுத்த ஆவியான தேவன், மூன்று அடி, அந்த அளவுகோல் முற்றுபெறுகிறது. இப்போது நாம், மூன்று வெவ்வேறு காரியங்களை நாம் நம்புவதில்லை... அல்லதுஅங்கே ஒருவர் பிதாவாகிய தேவன், இன்னொன்று வாலிபமான நபராகிய தேவ குமாரன், மற்றும் இன்னொரு மனிதன் பரிசுத்த ஆவியான தேவன். அது புறஜாதிகளுடைய எண்ணமாகும். அது அப்படியல்ல. அது மூன்று காலங்களில் வந்த ஒரே தேவன். 41 அக்காலையில் மோசே கட்டளைகளை பெற சீனாய் மலையின் மேல் இருந்த போது தேவன் இறங்கினார். அவர் அக்கினி ஸ்தம்பத்துக்குள் இருந்தார். எல்லோரும் அறிவார்கள். அது பிதாவாகிய தேவன். எல்லோரும் அறிவார்கள். அது உடன்படிக்கையின் தூதன். மேலும் உடன்படிக்கையின் தூதன் தான் இயேசு கிறிஸ்து, அது சரிதானே? வேதாகமம் என்ன சொல்கிறது... அங்கே அவர் அக்கினி ஸ்தம்பத்துக்குள் இருக்கிறார், யாரும் அவரை தொட முடியாது. அவர்பரிசுத்தர். அவரிடத்தில் யாரும் நெருங்க முடியாது. அவரை தொட முடியாதுஐயா. மோசே அந்த கட்டளைகளை உடன்படிக்கை பெட்டிக்குள் வைப்பதற்காக தேவன் தாமே அந்த கட்டளைகளை தன்னுடைய சொந்த விரலில் எழுத அவர் அந்த மலையின் மேல் வந்த போது, மின்னல் மின்னியது, இடி முழக்கங்கள் முழங்கின. மற்றும் அந்த நிலநடுக்கம் பயங்கரமாக இருந்தது. மோசேயே அதை கண்டு பயந்தான். 42. மேலும் மக்கள், “தேவன் எங்களோடே பேசாதிருப்பாராக, பேசினால் நாங்கள் மரித்துப் போவோம், மோசே நீர் எங்களோடு பேசும், தேவன் அல்ல”, என்றார்கள்.ஒரு மிருகம் அந்த மலையை தொட்டாலும் அது ஈட்டியினால் கொல்லப்பட வேண்டும். அது சரிதானா? அது கொல்லப்பட வேண்டும். ஏனெனில் தேவன் அந்த மலையின் மேல் இருப்பதால் அந்த மலை பரிசுத்தமானது. இப்போது தேவனின் அன்பை கவனியுங்கள். அது உங்களை ஒரு எழுப்புதலுக்காக ஜெபிக்க தொடங்க வேண்டும். தேவன் இணங்கி இறங்கி வந்து தன்னை வெளிப்படுத்தி பின் அக்கினி ஸ்தம்பத்தில் தோன்றினார். பின்னர் அடுத்த முறை அவர் காணக்கூடிய வடிவத்தில் தோன்றியபோது, அவர் தன்னுடைய குமாரன் கிறிஸ்து இயேசுவில் தோன்றினார். ஒரு கன்னிகை மீது நிழலாடி அவள் கர்ப்பத்தில் இரத்த அணுக்களை உருவாக்கி, அது தேவ குமாரனை பிறப்பித்தது. மேலும் உலகத்தை தன்னோடு ஒப்புரவாக செய்ய கிறிஸ்துவுக்குள் தேவன் இருந்தார். அதுசரியா? 43. இயேசு சொன்னார், “இந்த கிரியைகளை செய்வது நானல்ல, எனக்குள் வாசம் செய்கிற என் பிதாவானவரே. அவர் தான் இந்தக் கிரியைகளைச் செய்கிறார், பாருங்கள் அது நானல்ல. நான் செய்வ தெல்லாம்...”, அந்நாளில் முடவர்கள் மற்ற வியாதியஸ்தர்களும் இருந்தாலும் அவர்கள் எல்லோரையும் கடந்து சென்றபோது சுக்கிலச் சுரப்பி பிரச்சனை உள்ள ஒரு மனிதனுக்கு மட்டுமே அவர் சுகத்தை அளித்ததை அவர்கள் கேட்டார்கள். அப்பொழுது அவர்கள், “மீதியுள்ளவர்களுக்கு அவர் ஏன் சுகத்தை அளிக்கவில்லை”, இன்றையநாளில் சொல்லுவதுபோல், “இவருக்கு மட்டும் சுகம் கொடுத்தார், அவருக்கு மட்டும் சுகம் கொடுத்தார், அந்த மனிதனுக்கு சுகத்தை கொடுக்கட்டும் அப்போது நான் விசுவாசிப்பேன்”, என்று அவர்கள் சொல்லுவார்கள். பாருங்கள் அதே குறை கூறுபவர்கள் இன்றும் ஜீவிக்கிறார்கள். அவர், “பிதாவானவர் செய்யக் குமாரன் காண்கிறதெதுவோ, அதையன்றி வேறொன்றையும் தாமாய்ச் செய்யமாட்டார், அவர் எதை என்னிடத்தில் சொல்வாறோ அதையே நான் செய்கிறேன். இப்பொழுது பிதா என்னில் இருப்பதால் அவர் என்ன சொல்கிறாரோ அதைநான் செய்கிறேன்”, என்று அவர் சொன்னார். இப்போது அது பூமியில் இருந்த தேவனாக இருக்கிறார். வேதகமம் சொல்கிறது, “அவர் இம்மானுவேல் என்று அழைக்கப்படுவார். அதன் அர்த்தம் தேவன் நம்மோடு இருக்கிறார்”, அது சரிதானா? இப்போது தேவன் தன்னை தாழ்த்திக் கொண்ட தேவனாக இறங்கி வருகிறார். அவர் மனித வடிவத்தில் இருக்கிறார். கவனியுங்கள் அவர் மனிதனுக்கு சற்று நெருக்கமான விதத்தில் இருக்கிறார். 44. கலப்பிடமில்லாமல் இருக்கும் அந்த இரத்தத்தை அவர் கொடுக்க வேண்டிய தாயிருந்ததால், பாலுணர்ச்சியினால் அல்லாமல் கன்னிகை பிறப்பின் மூலமாக வந்துள்ளார். பாலுணர்ச்சியில் பிறந்த ஆணும் பெண்ணும், உன்னுடைய என்னுடைய இருதயத்தை சுத்திகரிக்க அந்த இரத்தத்தை அவர் கொடுத்தார். தேவன் தாமே மூன்றாவது நபராக வந்து மனித இருதயத்தில் வாசம் செய்வதற்காக அவர் நம்முடைய பாவத்திலிருந்து நம்மை சுத்திகரித்தார். அவருடைய சிருஷ்டிப்புகள் மீது அவர் அலாதி அன்பு கொண்டார். ஓ, அதை சிந்திக்கையில் என்னுடைய இருதயம் நெகிழுகிறது. மகத்தான அண்ட பிரபஞ்சத்தை மற்றும் எல்லா காரியத்தையும் சிருஷ்டித்த மகத்தான யெகோவா... எவ்வாறு ப்ளோமார் பர்வதத்தில் இருக்கும் ஆய்வு கூடாரத்தின் வழியாக நூற்று இருபது லட்ச வருடங்கள் ஒளி வேகத்தில் இருக்கும் காரியங்களை பாருங்கள். உலகம், மற்றும் சூரிய மண்டலங்கள்... மற்றும் அங்குள்ள சூரிய குடும்பம், உலகங்கள், சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள் எல்லாவற்றையும் நூற்று இருபது லட்ச வருடங்கள் ஒளி ஆண்டுகளில் எப்படியாக சிருஷ்டிக்கப்பட்டது. பாருங்கள், அதற்கு மேலாகவும் இன்னமும் அநேக உலகங்கள் சந்திரன்கள் மற்றும் நட்சத்திரங்கள் உள்ளது. 45. அவைகள் எல்லாவற்றையும் சிருஷ்டித்த யெகோவா தேவன் உன்னுடைய மற்றும் என்னுடைய இருதயத்தில் ஜீவிக்க அவர் தாமே வந்தார். அதை செய்வதற்கு முன்பாக அவர் அந்த பாதையை உரிமை கோர வேண்டியிருந்தது. அவர்களுக்கு நியாயப்பிரமாணம் மற்றும் கட்டளைகளையும் காண்பிக்க வேண்டியதாயிருந்தது. அதன் பின் அவர் இறங்கி வந்து அவர்களுக்கு அன்பை காட்ட வேண்டியதாயிருந்தது, மற்றும் அதன் பின்னர் மனிதனின் இருதயத்தில் சரியாக அவருடைய வழியை உடைத்து வர வேண்டியிருந்தது. இப்போது தேவன் நமக்குள் இருக்கிறார். அது சரி. இப்போது பூமியில் நாம் அவருடைய கரங்களாக இருக்கிறோம். நாம் இந்த பூமியில் அவருடைய கண்களாக இருக்கிறோம், நாம் இந்த பூமியில் அவருடைய சுவிசேஷமாக இருக்கிறோம். சுவிசேஷம் முழுவதும் வார்த்தையினால் ஆனது அல்ல, பிரத்தியட்சப்பட்ட வார்த்தையே சுவிசேஷம். சுவிசேஷம் என்பது வார்த்தையினால் மட்டுமே அல்ல, அது வல்லமையினாலும் மற்றும் பரிசுத்த ஆவியின் நிரூபனத்தின் மூலம் வருகிறது. “உலகத்திற்கு சென்று பரிசுத்த ஆவியின் வல்லமையின் செயல்களை எல்லா தேசத்திற்கும் காண்பியுங்கள்”, அதை விட்டுவிட்டு அதற்கு பதிலாக நாம் வேத சாஸ்திரத்தை போதிக்க துவங்குகிறோம். நமக்கு இரண்டாயிரம் வருஷம் சென்றது. அதில் மூன்றில் இரண்டு பங்கு பகுதியான பூமியில் இன்னுமாக இயேசு கிறிஸ்து பற்றி அவர்கள் கேள்விபட்டதேயில்லை. மூன்றில் இரண்டு பங்கு பகுதியுள்ள பூமியில் இயேசு கிறிஸ்து பற்றி ஒரு காரியமும் அறியவில்லை. அதை குறித்து யோசியுங்கள், நீங்கள் சொல்லலாம். “அது புறஜாதிகளின் தேசத்தில் முடிந்துவிட்டது”. அது கிட்டத்தட்ட அமெரிக்கா ஐக்கிய தேசத்திலே உள்ளது. 46. நான் வசிப்பதற்கு சற்று கீழேயுள்ள இந்தியானாவில் உள்ள நியு ஆல்பனியில் நான்கு மாதங்களுக்கு முன்பு மக்கள் தொகை கணக்கெடுக்கப்பட்டது. அந்த நகரத்தில் இருபத்தி ஏழாயிரம் பேரில், மூன்றில் ஒரு பங்கு அல்லது நான்கில் ஒரு பங்கிற்கு, சபைக்கு செல்லாதவர்கள், எந்த சபையையும் சார்ந்தவரல்ல, மற்றும் நான் கேள்விப்பட்டேன் பாஸ்டனில் எத்தனையோ சிறு பிள்ளைகள் குற்ற செயல்களில் ஈடுபட்டுள்ளனர் என்று... கேப்டன் அல் பாரார் என்னுடைய தனிப்பட்ட நண்பர். அவர் எப் பி ஐ புலன் விசாரணையின் தலைவர். என்னுடைய கூட்டத்தில் பரிசுத்த ஆவியானவரை பெற்றார், அவர் என்னை பிடிக்க இரண்டு வருடமாக என்னை பின் தொடர்ந்த போது, நான் என்ன செய்து கொண்டிருந்தேன் என்று என்னை கண்காணித்துக் கொண்டிருந்தார். மகத்தான டல்லாஸ் அல்லது மகத்தான அந்த இரவு கூட்டத்திற்கு வந்து நின்று கொண்டிருந்தார். “என்னுடைய வேலையே மோசடிகளை கண்டுபிடிப்பது என்று உங்களுக்கு தெரியும், நான் அவரை இரண்டு வருடமாக பின் தொடர்ந்தேன், இது மோசடி செய்யும் காரியம் அல்ல, இது முற்றிலும் தேவனின் சர்வ வல்லமையாயிருக்கிறது”, என்று அவர் சொன்னார். 47. மறு நாள் என்னை அவர் அழைத்து சென்ற படப்பிடிப்பு அறையில், சகோதரர் பிரான்ஹாம், என்று கூப்பிட்டார். அவர் தன்னுடைய காரை நிறுத்திவிட்டு அந்த இடத்திற்கு நடந்து சென்று, நான் இங்கேயே பரிசுத்த ஆவியை பெற விரும்புகிறேன். நான் மீண்டும் பிறக்க விரும்புகிறேன் என்று சொன்னார். அதுதான் காரியமாக இருக்கிறது. அதாவது இப்பொழுது இன்னும் ஒரு வருடத்தில் அவர் பணிஓய்வு பெறுகிறார். அவர் என்னோடு கூட்டங்களுக்கு வர விரும்புகிறார். அவர் கூறுவது சிறுபிள்ளைத்தனம் போல் உள்ளது. இப்பொழுது அவர்... இக்காரியங்கள் எல்லாமே இளம் வயதின ரோடு காரியங்கள். ஆயிரக்கணக்கான பிள்ளைகள் பத்தாயிரம் கணக்கான பிள்ளைகள் சபைக்கு சென்றதே இல்லை. தேவனை குறித்து ஏதும் தெரியாது. சபிக்கும் வார்த்தைகளை அறிந்திருக் கிறார்கள். அவர்களுக்கு தெரிந்ததெல்லாம் அவ்வளவு தான். இப்போது அது புறஜாதிகளின் தேசத்தில் அல்ல, புரிகிறதா? அது அமெரிக்கா ஐக்கிய தேசத்தில் தான் என்ன 48. இதை முடிக்கும் முன்பாக சொல்கிறேன். நான் விசுவாசிக்கிறேன் என்றால்... தேவன் அவர்களுக்கு அதிகாரத்தை கொடுத்த போது, ஆரம்பத்தில் அவர்களுக்கு பிரதான சாவியை கொடுத்தார்... “உலகமெங்கும் சென்று இந்த வல்லமையை செயலாக்கம் செய்யுங்கள். நான் உங்களோடு இருப்பேன் உங்களுக்குள் இருப்பேன். நீங்கள் செல்லுங்கள்”, என்று சொன்னார். அந்த முதல் சபை காலம், கிறிஸ்தவர்கள் எப்படியாக உலகத்தை தலை கீழாக்கினார்கள்... மற்றும் கிறிஸ்தவர்கள்... சீஷர்கள் ஒரு சுற்றினால் பத்து வருடத்தில் கிட்டத்தட்ட உலகத்தையே கிறிஸ்தவ மயமாக்கினார்கள். பின் அதை எல்லாம் விட்டு அடுத்த கூட்ட சுற்றில் அதை ஸ்தாபனமாக்க தொடங்கினார்கள். மூன்றாவது சுற்றில் முழுவதும் இருண்ட யுகமாயிற்று என்று கத்தோலிக்க சபை உருவாக்கப்பட்டது. அதிலிருந்து வேத சாஸ்திரம் காலம் துவங்கியது. அதிலிருந்து மார்ட்டின் லூதர், ஜான் வெஸ்லி, கால்வின், நாக்ஸ் எல்லோரும் வெளியே வந்தார்கள். எல்லாமே வேத சாஸ்திரத்தை அடிப்படையாக கொண்டிருந்தார்கள். அது உண்மை. அதிலிருந்து அவர்கள் திரும்பி செல்ல தவறி விட்டார்கள். தேவன் அவர்களிடத்தில் செய்யவேண்டாம் என்று சொன்ன காரியத்தை அவர்கள் செய்தார்கள், அந்த காரியத்தை அவர்கள் இயேசுகிறிஸ்து நாமத்திலேயே செய்தார்கள். பாருங்கள். உலகத்தில் கல்வி கற்ப்பிப்பதல்ல அதற்கு மாறாக சுவிசேஷத்தை பிரசங்கித்து தேவனின் வல்லமையை நிரூபிக்க வேண்டும்.புரிகிறதா? 49. இன்றைய தினத்தில் நம் சபைகளில்... நீங்கள் அப்படியாகவே சபையை துவங்குங்கள். அப்பொழுது என்ன சம்பவிக்குமென்று கண்டறியுங்கள். அவர்கள் உங்களுக்கு வாசலை காண்பிப்பார்கள். புரிகிறதா? அவர்கள் விட்டு சென்றதான அந்த பிரதான சாவி அதுதான் அந்த மூலைகல். அன்றைய தினத்தில் கட்டுபவர்கள் கட்டிடத்தை கட்டியபோது அது முழு உலகத்தில் கற்கள் வெட்டப்பட்டு எடுத்து வந்து கட்டினார்கள். இப்போது உங்களுக்கு புரிகிறதா? நான் ஏன் ஸ்தாபனங்களோடு சேராமல் பொதுவாக உள்ளேனென்று. இங்குள்ள கட்டிட வேலை செய்பவர்கள், அந்த ஒழுங்கை அறிந்தவர்களும், அவர்கள் கற்களை வெட்டி எப்படிகொண்டு சென்றார்கள் மற்றும் பல காரியங்களை நீங்கள் அறிவீர்கள். லெபனானின் உயரமான கேதுரு மரங்களை மாட்டு வண்டியில் ஏற்றி சென்றார்கள். அதை எப்படி வெட்டி கீழே கொண்டு வந்தார்கள். ஆனால் அவை அனைத்தும் எருசலேமுக்கு வெளியே குவிக்கப்பட்டபோது நாற்பது ஆண்டுகளாக ஒரு ரம்பத்தின் சத்தமோ அல்லது சுத்தியின் சத்தமோ கேட்கவில்லை. 50. இப்போது ஒரு கல் இவ்வாறு வெட்டப்பட்டு இருந்தது. இன்னொன்று வேறு விதமாக வெட்டப்பட்டு இருந்தது. வேறொன்று அப்படியாக வெட்டப்பட்டு இருந்தது. மற்றொன்று வேறு ஒருவிதமாக, ஆனால் எல்லா கற்களும் அதன் ஸ்தானத்தில் சரியாக பொருந்தியதை அவர்கள் கண்டார்கள். தேவனுக்குள் இருக்கும் விசுவாசிகள் பற்றியும் நான் அதை தான் சிந்திக்கிறேன். நம் ஒவ்வொருவருக்கும் இந்த கட்டிடத்தில் இடம் உள்ளது. மற்றவரை போல் நாம் இல்லையென்றாலும், மறுபடியும் பிறந்த ஒவ்வொரு கிறிஸ்தவர்களே நீங்கள் பொருத்தப்பட இங்கு ஒரு இடம் இருக்கிறது. கட்டிடம் கட்டும் பணியாளர்கள் கட்டிடத்தை துவங்கிய போது ஒரு வேடிக்கையான தோற்றமுடைய கல்லை கண்டார்கள். அவர்கள் சொன்னார்கள், “இதை நம்மால் உபயோகப்படுத்த முடியாது. இந்த கல் சரியில்லை, இது ஒரு விசித்திரமான கல்”, என்று சொல்லி அதை ஒரு குப்பை குவியலுக்குள் உதைத்து எறிந்துவிட்டார்கள். அவர்கள் தங்கள் கட்டிடத்தை கட்ட துவங்கினார்கள். மற்றும் அவர்கள் தங்கள் கட்டிடத்தை கட்டிக் கொண்டிருந்தார்கள். பிறகு ஒரு நிலைக்கு வந்தபோது அதற்கு மேல் அவர்களால் முன் செல்ல முடியவில்லை. ஒரு முற்றும் நிலைக்கு வந்து அதற்கு மேல் செல்ல முடியவில்லை. எந்த கல்லை அவர்கள் தூக்கி எரிந்தார்களோ அதுவே பிரதான மூலை கல்லாக இருந்தது. சகோதர சகோதரிகளே அது தான் இன்றைய தினத்தில் இருக்கிறது. நாம் வேத சாஸ்திரத்தை எடுத்தோம், பள்ளிப்படிப்பை எடுத்தோம், கல்வி படிப்பு அறிவை எடுத்துக்கொண்டோம். 51. கல்வி ஆனால் சுவிசேஷத்திற்கு அருமையானது தான் இருப்பதிலேயே மிக பெரிய தடையாக உள்ளது கல்வி தான். (அது சரிதான்) இப்போது நான் நீங்கள் கல்வியற்றவனாக இருக்க வேண்டும் என்று சொல்லவில்லை. நீங்கள் கல்வியற்றவராக இருக்க வேண்டியதில்லை. ஆனால் சகோதரரே மக்கள் எல்லாவற்றையும் கல்வியின் மேலும், வேதசாஸ்திரத்தின் மேலும், எல்லாவற்றையும் வைக்கிறார்கள். அவர்கள் என்ன செய்கிறார்கள் என்று பாருங்கள். இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலை குறித்து ஒரு அத்தாட்சியும் அவர்களால் கொடுக்க முடியாது. அவர்கள் முகமதியர்களை எதிர்கொள்ள முடியாது. அல்லது முகமதியர்கள் நேருக்கு நேர் வந்து காரியங்களை சவாலிடுகிறார்கள். கொஞ்சம் காலம் முன் மருத்துவர் ரீட்ஹெட், சூடான் மிஷனரியில் இருப்பவர் பரிசுத்த ஆவியானவரின் ஞானஸ்நானத்தை பெற்றார். அவர் ஒரு அருமையான மனிதன் என் வீட்டில் நின்றபோது, அவருக்கு பட்டங்கள் மேல் பட்டங்கள் இருந்தது. சகோதரர் பிரான்ஹாம் அவருக்கு, போதகர்கள் தவறாக போதித்தார்களா? பரிசுத்த உருளைகள் என்று அவர்களால் அழைக்கப்படும் கூட்டங்களுக்கு நான் போயிருக்கிறேன். ஆனால் நான் சிந்திக்க முயற்சிப்பது என்னவென்றால் நான் பார்த்த இதையெல்லாம்... நான் பெற்ற பட்டப்படிப்புகளும்... என் இருதயம் தேவனுக்காக பசி கொள்கிறது. நீங்களோ அடிப்படை வாதத்தின் உச்சத்தில் இருக்கிறீர்கள். இப்பொழுது என் இருதயமோ தேவனுக்காக பசி கொள்கிறது. விசுவாசித்த பிறகு பரிசுத்த ஆவியை பெறுவது என்ற ஒன்று இருக்கிறதா என்று அவர் கேட்டார். (ஒலி நாடாவில் காலியிடம்) பாருங்கள், அது சரியே, அது சரியே? பார்த்தீர்களா? 52. புத்தரை பாருங்கள் இரண்டாயிரத்து முன்னூறு வருடங்களுக்கு முன் மரித்தார். புத்த மதம் சீனாவின் மிக பெரிய மதம். அவர் மரிக்கும் முன் இக்காரியங்களை தான் அவர் சொன்னார், உலகம் முடிவதற்கு முன்பு, இப்பொழுதோ சர்வாதிகாரிகள் தேவனாக இருக்கிறார்கள். அன்பின் தேவனானவர் இந்த உலகத்தின் முடிவில் தம்முடைய ஊழியக்காரர்களையும், தம்முடைய தீர்க்கதரிசி களையும் அனுப்புவார். அவர்கள் தங்களுக்கு பின்னால் ஒரு தடயத்தை விட்டு செல்லாதபடி ஆகாய விமானம் மூலம் வருவார்கள் என்று சொல்லப்பட்டதை நீங்கள் அறிவீர்கள். ஆகாய விமானம் மூலம், இரண்டாயிரத்து முன்னூறு வருடங்களுக்கு... பாருங்கள்? புரிந்ததா? அவர்கள்... அவர்களுக்கு அதில் போதுமான சாயல் இருந்தது. ஆனால் அந்த சாயலை மறுத்தலித்தார்கள். பாருங்கள், அது இயேசு கிறிஸ்துவின் இரத்தம் மட்டுமே அந்த காரியமாக இருந்தது. இப்பொழுது இந்த முகமதியர், அங்கு நின்று மருத்துவர் ரீட்ஹெட் உடன் பேசிக் கொண்டிருந்தார். நீங்கள் ஏன் மரித்த தீர்க்கதரிசி முகமதை நிராகரித்து விட்டு நாங்கள் கொண்டு இருக்கும் உயிர்த்தெழுந்த கர்த்தராகிய இயேசுவை ஏன் பெறக் கூடாது என்று மருத்துவர் ரீட்ஹெட் கேட்டார். 53. மற்றும் அந்த முகமதியன் புத்திசாலியும் சாமர்த்தியமானவன். அவன, “அன்பான ஐயா என்னுடைய மரித்த தீர்க்கதரிசி செய்கிறதை காட்டிலும் உங்களுடைய உயிர்த்தெழுந்த கர்த்தராகிய இயேசு அதிகமாய் எனக்கு வேறு என்ன செய்யக்கூடும்”, என்றான் அதற்கு இவர், “எங்களுக்கு ஒரு ஆறுதல் உண்டு”, என்றார். அதற்கு அவர், “எங்களுக்கும் அதே உள்ளது”. பின் இவர், “எங்களுக்கு சந்தோஷசம் மற்றும் களிகூருதல் உண்டு” அவர் சொன்னார், “எங்களுக்கும் அவ்வாறு உண்டு. எதற்காக உங்களுக்கு சந்தோஷமும் களிகூறுதலும் உண்டாகிறது? அதற்கு இவர் சொன்னார், “அவர் திரும்ப வருகிறார்” அதற்கு அவர், “அது போல் தான் எங்களுடைய தீர்க்கதரிசியும். உங்களுடைய தீர்க்கதரிசி இயேசு மரித்தபின் ஜீவன் இருக்கிறது என்று வாக்களித்தார். எங்களுடைய தீர்க்கதரிசி முகமது அதே வாக்கு கொடுத்து இருக்கிறார். மரித்த பின் ஜீவன். ஆகவே நாங்கள் சந்தோஷப்படுகிறோம். என்னுடைய மரித்த தீர்க்கதரிசியால், என்னால் உறுவாக்க முடியாத ஒன்றை உங்கள் கர்த்தராகிய இயேசுவை கொண்டு நீங்கள் உறுவாக்குங்கள். அப்பொழுது நாங்கள் பெற்றுக் கொள்ளாத ஒரு காரியத்தை நீங்கள் பெற்று இருப்பதை எனக்கு காண்பியுங்கள். ஆகவே அப்படி செய்யாமல் என்னிடத்தில் அதை குறித்து போதிக்காதீர்கள்”, என்று அவர் சொன்னார். அந்த மனிதன் சரியாக தான் சொன்னார். 54. அதன் பின் மருத்துவர் ரீட் ஹெட்டிடம் அவர் சொன்னார், “கேளுங்கள் ஐயா இயேசு மரித்தோரிலிருந்து எழுந்தார் என்று நீங்கள் சொல்லுகிறீர்கள்”, அவர் மரித்தோரிலிருந்து எழும்பின போது அவ்வாறு எழும்பியிருந்தால் நான் செய்த அதே காரியங்களை நீங்களும் செய்வீர்கள். மற்றும் மகத்தான அடையாளங்களை விசுவாசிகளுக்கும் மற்றும் உம்மை போல் இருக்கும் போதர்களுக்கும் வாக்களித்தார். அவர் வாக்களித்தது போல் உள்ள அடையாளங்களை நீங்கள் எல்லோரும் செய்வதை நான் காணட்டும் பின் அவர் மரித்தோரிலிருந்து எழும்பினாரென்று நான் விசுவாசிப்பேன் என்று அந்த முகமதியன் சொன்னார். அது சரியே. அதற்கு இவர், “சுவிசேஷத்தை நாங்கள் உலகமெங்கும் பிரசங்கிக்கிறோம்” என்றார். அதற்கு, “நாங்களும் அவ்வாறே செய்கிறோம்”, என்றார். “அவர் செய்த கிரியைகளை நான் காணட்டும். உங்களுக்கு ஒன்று சொல்லுகிறேன் உங்களுக்கு இரண்டாயிரம் வருடங்கள் இருந்தன. ஆயினும் எங்களிடத்தில் தான் அதிகமான மக்கள் எங்கள் மதத்தில் உள்ளனர்.” அது சரிதான். அதிகமான முகமதுக்கள் உள்ளனர். கிறிஸ்தவர்கள் அதில் மூன்றில் ஒரு பங்கு உள்ளனர் பாருங்கள். முகமதுக்குள் அதிகமானவர்களாக மத ரீதியாக உலகத்தில் உள்ளனர். பாருங்கள். அவர் மேலும் சொன்னார், “மூன்றில் இரண்டு பகுதியில் உள்ள உலகத்தில் உள்ள மக்களுக்கு உங்களுடைய உயிர்த்தெழுந்த இயேசு கிறிஸ்துவைக் குறித்து ஒன்றும் தெரியாது. எங்களுடைய முகமது மரித்தோரிலிருந்து எழும்பட்டும். மொத்த உலகமே அதை குறித்து அறிந்து கொள்ளும்”, என்றார்.அது சரிதான். 55. இப்போது மருத்துவர் ரீட்ஹெட் அவர் தோல்வியுற்றதாக சொன்னார். மற்றும் அது போல் தான் ஆனது. அந்த காரியம் தான் அவரை தேவன் மீது பசியுள்ளவர் ஆக்கியது. மற்றும் சகோதர சகோதரிகளே மரித்தோரிலிருந்து கர்த்தராகிய இயேசு கிறிஸ்து எழும்பினார் என்று சொல்லுவதற்கு இந்த இரவுப்பொழுதில் நான் இங்கு உள்ளேன். இந்நாளில் நம் மத்தியில் அவர் ஜீவிக்கிறார். அவர் சொன்ன பிரகாரம் கச்சிதமாக அதே காரியங்களை அவர் செய்கிறார் அவர் அதே உயிர்த்தெழுந்த கர்த்தராகிய இயேசு தான். அவர் அதை செய்வாரென்றால் அது அவருடைய இராஜாதிபத்திய கிருபையினால் மட்டும் ஆனது. என்னுடையதினால் அல்ல. நான் அவருடைய ஊழியக்காரன் இங்கு அமர்ந்திருக்கும் நபர்களை போல்தான் நானும் கிறிஸ்தவனாக இருக்கும் அந்த சிறிய பையன் அல்லது அந்த சிறிய பெண்ணை போல் அல்லது, யாரேனும் யாராக இருந்தாலும் அது குறித்து அக்கறை இல்லை, மகத்தான மக்கள் என்பதெல்லாம் இல்லை, தேவனுடைய இராஜ்ஜியத்தில் சிறியவர்கள் எவரும் இல்லை. தேவனின் கிருபையால் நாம் எல்லோரும் தேவ இராஜ்ஜியத்தில் உள்ளோம். அவ்வளவு தான். யாரேனும் பெரியவர்கள் சிறியவர்கள் என்று இல்லை. நாம் சகோதரர் சகோதரிகளாக இருக்கிறோம். அது சரிதான். யாரோ ஒருவருக்கு இந்த அலுவல் இருக்கும் வேறு ஒருவருக்கு அந்த அலுவல் இருக்கும் ஆயினும். 56. நான் படித்துக் கொண்டிருக்கையில் அது சார்லஸ் ஜி பின்னி. அந்நாளில் அவர் ஒரு மகத்தான சுவிசேஷகர், மனந்திரும்பின வழக்கறிஞர். ஒரு வயதான மனிதன் காசநோயினால் மரித்துக் கொண்டிருந்தார். அவர் மரிக்கும் முன் அவர் குப்புற படுத்து அழுது ஜெபித்தார். பின் எழும்பி சொன்னார், ஏதோவொரு பட்டணத்திற்கு தேவன் எழுப்புதல் கொடுக்கப் போகிறார். அந்த பட்டணத்திற்காக என்னால் விசுவாசத்தோடு ஜெபிக்க முடிந்தது. மற்றும் ஒரு முப்பது பட்டணத்தை குறிப்பு எடுத்து அதில் இருக்கும் என்று எழுதி வைத்தார். அந்த மனிதன் மரித்து சென்றபின் அங்கு வந்த பின்னி, அந்த விதவையினிடத்தில் உள்ள புத்தகத்தை எடுத்துக் கொண்டு அதில் சொன்ன விதமாகவே அநேக பட்டணங்களில் எழுப்புதல்கள் நடந்தன. அது சரிதான். ஒரு வேதனையுள்ள ஆத்துமா தேவனுக்கு முன்பாக உத்தமத்துடன் ஜெபித்ததினால் உலகத்தில் உள்ள அநேக வேதாகம பள்ளிகளை காட்டிலும் அதிகமாக எழுப்புதல்களை கொண்டுவரும். அது சரியே. ஒரு ஆத்துமா ஜெபித்ததினால். 57. எவராக இருந்தாலும் இதை கேளுங்கள். அநேக வருடங்களுக்கு முன் கிழக்குபகுதியில் நடந்த மகத்தான எழுப்புதல், ஆப்ரிக்காவில் அங்கு தெற்கு ஆப்ரிக்காவில் இருக்கும் (Hottentots) பழங்குடியினர் மற்றும் அநேகர் அங்கு இருந்தபோது, அந்த எழுப்புதல் உண்டாவதற்கு காரணம் என்னவென்றால் அது அவர்களின் போதனைகளில், பெரிய வேத பள்ளிகளினால் அல்ல. ஆனால் ஒரு எளிமையான படிப்பறிவு இல்லாதவர், படிக்க தெரியாத ஒரு கறுப்பினர், ஒரு சிறிய பாழடைந்த குடிசையில், அந்த மண்ணில் இரவும் பகலும் குப்புற படுத்து தேவன் எழுப்புதலை அனுப்பும் வரை ஜெபித்தார். தேவ ராஜ்ஜியத்துக்குள் கிழக்கு அல்லது வடக்கு ஆப்ரிக்கா முழுவதும் ஒரு எழுப்புதலை தேவன் அனுப்பும் வரை இரவும் பகலுமாக அந்த புழுதியில் முகம்குப்புற விழுந்து ஜெபித்தார். மற்றும் அங்கு ஒரு எழுப்புதல் இருந்தது. ஓ, என்னே, எப்பேர்ப்பட்ட எழுப்புதல், ஆனால் அதை குலைத்து போட்டது எது? போதகர்கள் இங்கிலாந்தில் இருந்தும் மற்றும் வெவ்வேறு வழிகளில் வந்து அங்கே தங்கி வேத சாஸ்திரத்தை போதிக்க தொடங்கியதால் அந்த உபதேசங்கள், தேவனுடைய வல்லமையில் இருந்தும் அப்படிப்பட்ட காரியங்களிலிருந்தும் அவர்களை விலக செய்தது. பிறகு எல்லாமே ஒரு குழப்பத்தில் போனது. அதுதான் சரியாக அமெரிக்கா ஐக்கிய தேசத்தில் நடந்தது. மேலும் சகோதரரே தேவனிடத்தில் திரும்ப செல்வோம். ஜீவனுள்ள தேவன் உயிர்தெழுந்தவர் அன்பாக இருப்பவர் எந்த ஒரு ஸ்தாபனத்தையும் முக்கியத்துவம் கொடுக்காதவர். எல்லோரையும் ஒரு விதத்தில் முக்கியத்துவம் கொடுப்பவர். பூமியில் அவருடைய ஒவ்வொரு சிருஷ்டியும் நேசிப்பவர் மற்றும் நம் இடத்தில் இறங்கி வருபவர் மனிதர்களில் இருதயத்திற்குள் தம்முடைய வழியை செயல்படுத்த தன்னால் முடிந்த அனைத்தையும் அவர் செய்துள்ளார். 58. வெண்கல சர்ப்பத்தை போல் அவர் ஒரு வழியை உண்டாக்கியுள்ளார். நாம் பரலோகத்திற்கும் பூமிக்கும் இடையிலான இந்த பயணத்தில் இருக்கும் போது நமக்கு தேவையான அனைத்தையும் சந்திக்க அவர் இயேசுவை கொடுத்தார். நமக்கு இயேசு கிறிஸ்துவை அளித்தார். மற்றும் அவர் தேவனின் போதுமான பலியாக இருந்தார். இந்த இரவு பொழுதில் உங்களுடைய தேவை எல்லாம் உங்கள் சபையில் இல்லை. அது கிறிஸ்துவில் இருக்கிறது. அங்குதான் உள்ளது. அது உங்கள் கல்வியில் இல்லை. உங்கள் வேத சாஸ்த்திரத்தில் இல்லை. உங்கள் கோட்பாட்டில் இல்லை. அது இயேசு கிறிஸ்துவில் இருக்கிறது. எளிமையான தாழ்மையுள்ள அன்புள்ள விசுவாசத்தோடு அவரை நோக்கி பாருங்கள். மற்றும் சொல்லுங்கள், “தேவனே எல்லா சுய நலத்திலிருந்தும் கழுவவும் மற்றும் எல்லா அசுத்தத்தை எடுத்து போடவும், மற்றும் இன்றைய நாளில் இருந்து முற்றிலுமாக நான் உம்முடையவனாக இருக்கட்டும”. பாருங்கள் பின் தேவன் உங்களுக்கு என்ன செய்கிறார் என்று பாருங்கள். நாம் தலைகளை தாழ்த்தியிருக்கும்போது, அவர் உங்களை ஆசீர்வதிக்கட்டும் என்பது தான் என்னுடைய ஜெபம். எங்கள் தயவுள்ள தேவனே முதலாதவதாக இந்த இரவுப் பொழுதில் இந்த பெரிய பட்டணத்திற்க்காக ஜெபிக்கிறேன். அந்த பரந்த காட்சியை காணுகையில் அதன் பெருநகரத்தில் இந்த இரவுப்பொழுதின் பாவத்தை பார்க்கும் போது, சோதோம் குறித்து யோசிக்கிறேன். அங்கு தூதர்கள் அது உண்மையா என்று காண வந்தார்கள். ஏதோவொரு காரியத்திற்கு நெருங்கி இருக்கிறோம் என்று அறிவோம். சிக்காகோவிற்கு நான் ஜெபிக்கிறேன். தேவனே உண்மையான விசுவாசிகளின் பட்டணத்தை கூடி வரும் சிறிய கூட்டங்களினால் மட்டுமே தேவனின் கோபாக்கினியும் மற்றும் நியாயத்தீர்ப்பையும் ஊற்றுவதில் இருந்து சரியாக இப்பொழுது தடுத்து நிறுத்துகிறது என்று நான் நம்புகிறேன். 59. ரஷ்யா தேசத்தில் நடக்கும் கூட்டு ஆலோசனையில் இருக்கும் நம் பிரதமரை குறித்து ஒரு எண்ணம் தோன்றுகிறது. இந்த இடத்தை எரிக்க செய்து எந்த ஒரு உயிரும் மிஞ்சி இராதபடிக்கு எரிக்கும் ஆயுதம் அவரிகளிடத்தில் இருக்கிறதென்று அறிந்திருக்கிறேன். மற்றும் அதை விடிவதற்குள் அவர்களால் அதை எரிக்க முடியும். பின் தேவனே, “அதை செய்யாமல் இருக்க எது தடை செய்கிறது”, ஏனெனில் சில நீதியுள்ள மக்கள் இன்னுமாக ஜெபிப்பதினால். ஓ, தேவனே இரக்கமாக இரும் என்று நான் ஜெபிக்கிறேன். பிதாவே இரக்கமாக இரும். இந்த இரவில் அதை அருளும். இந்த சிறிய அருமையான சபை கலங்கரை விளக்கமாக அமைக்கப்பட்டிருக்கிறது. அவர்கள் தாமே தங்கள் இருதயங்களையும், ஜீவியத்தையும், தங்களிடம் உள்ள அனைத்தையும் விட்டுக் கொடுத்து, இப்பொழுதே மனப்பூர்வமாக வெளியேறி தங்கள் உயிரையே சுதந்திரமாக கொடுக்கும் மக்களாக இருக்கிறார்கள். மற்றும் அவர்கள் உம்மை விசுவாசிக்கிறார்கள், மற்றும் ஒ, பிதாவே. இந்த இரவில் உம்முடைய மகத்தான வல்லமையினாலும் மகத்தான விசுவாசத்தின் வல்லமையையும் கொடுக்க வேண்டுமென்று நான் ஜெபிக்கிறேன். இன்றிரவு உம்முடைய தெய்வீக திட்டத்திற்கு எதிராக இருக்கும் ஒவ்வொரு எண்ணமும் அவர்களின் மனதில் இருந்தும் அல்லது அவர்களின் ஆழ்மனதி லிருந்தும் அகற்றப்படட்டும். பிதாவே அதை எடுத்துப்போடும். இப்பொழுது எங்களோடு இரும். 60. எனக்கு உதவி செய்யும் கர்த்தாவே, ஒரு நாள் நான் உங்களை எதிர்கொள்ள வேண்டும் என்று அறிந்தும், நான் சொல்லும் ஒவ்வொரு வார்த்தைக்கும், என் மனதில் ஓடும் ஒவ்வொரு எண்ணத்திற்கும் ஏதோ ஒரு நாளில் கணக்கு கொடுக்க வேண்டும் என்பதை அறிந்தும் அழிந்துபோகும் ஜீவனைக் கொண்ட ஒரு தகுதியற்ற ஒரு மனிதனாக இங்கு நிற்கிறேன். தேவனே மேலும் என்னை சுத்திகரித்து என்னுடைய சக மனுஷனோடு பேசுவதற்கு என்னை உங்கள் கரத்தில் வைத்து கொள்ளுங்கள் என்று ஜெபிக்கிறேன் கர்த்தாவே. அவர்களை நேசிக்கிறேன் கர்த்தாவே மற்றும் தேவனோடு மகத்தான ஒற்றுமையில் அவர்கள் எல்லோரும் ஒன்று கூடி விரைவில் வருகின்ற அந்த மகத்தான ஆயிர வருட அரசாட்சியில் வர வேண்டும் என்று நான் விரும்புகிறேன். ஒவ்வொருவருக்காகவும் நான் ஜெபிக்கிறேன். இந்த இரவில் இருக்கும் வியாதியஸ்தர்களை ஆசீர்வதியும் பிதாவே. அநேகர் இங்கு வியாதிபட்டு அமர்ந்து இருக்கிறார்கள். இந்த பூமியில் நீங்கள் இங்கு இருந்தபோது நீங்கள் செய்த அதே காரியங்களை உங்கள் விசுவாசிகள் செய்வார்கள் என்று நீங்கள் சொன்னதை நான் அறிந்திருக்கிறேன். இப்போது இந்த இரவில் அவரை அனுப்பும். ஓ தேவனே, மேலும் அவர் வல்லமையில் அவர் வந்து இங்கு இருக்கும் கூட்டத்தினர் மத்தியில் தன்னை வெளிப்படுத்தி ஒவ்வொரு விசுவாசியின் இருதயத்திற்குள் செல்லட்டும். அடையாளங்கள் மற்றும் அற்புதங்களால் அவர் பிரத்தியட்சப்படட்டும். அப்போது இந்த இரவு பொழுதில் நாங்கள் கடந்து செல்லும்போது சுகத்தை பெற்றவர்களாக ஒரு நபர் விடாமல் அவ்வாறு செல்லட்டும். அதை அருளும் கர்த்தாவே. 61. விசுவாசம் அதன் நிலையை அடையும்போது நீங்கள் சொன்னது போல் இருக்கும். உன் இருதயத்தில் நீ விசுவாசித்தபடியே அவ்வாறே நடக்கும், அதை இந்த இரவில் அருளும்படி ஜெபிக்கிறேன். இந்த முழு சூழ்நிலையை கர்த்தாவே ஏக ஆத்துமாவோடும் ஏக சிந்தையோடும் ஏக மனதோடும் ஒரே நோக்கம் கொண்ட சிருஷ்டிக்கும் சூழ்நிலையை உருவாக்கும். அதை அருளும் கர்த்தாவே. என் ஜெபத்தை கேளும். உம்முடைய நேச குமாரனான இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் அருளும்படி நான் ஜெபிக்கிறேன். ஆமென். அது போன்ற சூழ்நிலைகளை காண என் இருதயம் பசியாக இருக்கிறது.பாருங்கள், அது போன்ற சூழ்நிலை தான் அக்காரியங்களை கொண்டு வருகிறது. பாருங்கள், சூழ்நிலைகள் கொண்டு வந்து...இங்கு இருக்கும் ஒவ்வொரு நபரும் அந்த பரிபூரண இசைவுக்குள் வருவார்களென்றால் அது தீர்த்து வைக்கிறது. அது எவ்வாறென்றால் ஒரு முட்டை இயற்கையாக பொரிந்து வருவதற்கு கோழியின் கீழாக வைக்க வேண்டும். அது பொறிந்து விடும், ஏனெனில் அது தான் ஒரு சூழ்நிலையாக இருக்கிறது. அது வெப்பமாக இருக்கிறது. ஆயினும் ஒரு துப்பட்டியில் வைத்து அது சூடாக வைக்கும் போதும் அது எப்படியாக இருந்தாலும் அது பொரியும். ஒரு அடைக்காக்கும் கருவியில் (இன்குபேட்டர்) வைத்தாலும் அது பொரியும். பார்த்தீர்களா? அந்த சூழ்நிலைதான் அதனுடைய பலன்களை கொண்டு வருகிறது. 62. மேலும் நமக்கு இருக்கும் எல்லா சந்தேகத்தையும் நாம் அப்புறம் தள்ளிப் போடுவோமென்றால், வழியில் இருக்கும் எல்லா சந்தேகங்களையும் அப்புறப் படுத்துங்கள்... இங்கு சில மக்கள் மரிக்கும் தருவாயில் இருக்கிறார்கள். அதை குறித்து சந்தேகமேயில்லை. சிலருக்கு இருதய பிரச்சனை அல்லது அது போல் ஒன்று, மற்றும் இருதய பிரச்சனை கொண்டவர்கள் குறித்து நாம் அதிகமாக பார்த்ததில்லை. ஆகவே நாம் ஜெபிக்கலாம். ஏக சிந்தையோடு இருந்து இதை சொல்லுங்கள், “பரலோக பிதாவே, அந்த மகிமையான சூழ்நிலை நிலவரப்படட்டும். பின் பரிசுத்த ஆவியானவர் உள்ளே வந்து அற்புதமான காரியங்கள் நமக்கு செய்வார். அதை அவர் அருள்வாராக”. நமக்கு ஜெப அட்டைகள் உள்ளன. ஜெப அட்டை உள்ள மக்களை வரிசையில் ஒழுங்குபடுத்துவோம். ஒரு பக்கத்தில் உங்களுடைய விலாசம் மற்றும் பல உள்ளது. வேறு ஒரு பக்கத்தில் எண் இருக்கிறது. எதிலிருந்து துவங்குகிறது என்று எனக்கு அவர் சொன்னார். என்னது? F, ஜெப அட்டை F. மன்னிக்கவும் அதை நான் மறந்து விட்டேன். ஜெப அட்டை F அதிகமானது. நாம் கொடுக்கமுடியாது. நாம் அநேகரை கொண்டு வரமுடியாது. சகோதரர் போஸே? இங்கு கொண்டு வருகிறீர்களா? சரி நல்லது. 63முதலில் பத்திலிருந்து பதினைந்து வரை வரிசையை ஒழுங்குபடுத்துவோம். முடமான மக்கள் அல்லது படுக்கையோடு தூக்கி கொண்டு வரும் நிலையுள்ள மக்களை என்னால் எங்கும் காண முடியவில்லை. முதலாவதாக நாம் பத்துவரை ஒழுங்குபடுத்தலாம் F-1. யாரிடத்தில் ஜெப அட்டை F-1 உள்ளது. ஜெப அட்டை 1,2,3,4,5,6,7,8,9,10. அவர்களை முதலாவதாக வரிசை படுத்துங்கள். சரி 11,12,13 (ஒலி நாடாவில் காலியிடம்). என்னை ஒரு சுகமளிக்கிறவர் என்று நான் உரிமைகோரவில்லை என்பதை குறித்து எத்தனை பேருக்கு தெரியும்? நான் ஒரு சுகமளிக்கிறவர் அல்ல. நான் உங்களுடைய சகோதரன். பாருங்கள் தேவன் உங்களுடைய சுகமளிக்கிறவர். பாருங்கள் நான் வியாதியஸ்தர்களுக்கு ஜெபிக்கிறேன் ஆயினும் தேவன் இவ்வாறு சபையில் நியமித்திருக்கிறார். முதலாவதாக அப்போஸ்தலர்கள், பின்பு தீர்க்கதரிசிகள், பின்பு போதகர்கள், பின்பு சுவிசேஷர்களை சபைக்குள் தேவன் அமைத்திருக்கிறார். அதன் பின் சுகமளிக்கும் வரங்கள் பின்பு அற்புதங்கள், வெவ்வேறு பாஷைகள், அந்நிய பாஷைகளில் வியாக்கியானம். வேத வசனத்தின்படி அந்த வரங்கள் எல்லாம் சபையை பரிபூரணப் படுத்துவதற்காக அமைக்கப்பட்டன. அது சரிதானே. இப்பொழுது தேவன் அவற்றை சபையில் வைத்தார். 64. இது எவ்வாறென்றால் மனுஷனை காதோடு படைத்தார். மனுஷர்கள் காது இல்லாமல் செவிடனாக இருக்கும்படி அவர் எண்ணவில்லை. மனுஷனை வாயோடு படைத்தார். எந்த ஒரு மனிதனும் வாயில்லாமல் அல்லது மூக்கு இல்லாமல் செய்யமாட்டார். அவைகள் சரீரத்தின் அங்கத்தினர்கள். அது போல் என் கரம் எவ்வளவு உறுதியாக உள்ளதோ, தேவன் என் கையை என் கையாக இருக்கும்படி செய்தார். தெய்வீக சுகமளிக்கும் வரங்களை சபைக்குள் தேவன் வைத்தார். நிச்சயமாக அது விசுவாசத்தின் ஜெபமாகும், சிலர் போதர்களாக மற்றும் சுவிசேஷர்களாக வைத்திருக்கிறார். இப்பொழுது நாம் என்ன செய்தோம். சரீரத்தின் மிச்ச பாகத்தை எடுத்துவிட்டு, “இல்லை வெறும் போதகர்கள் மற்றும் சுவிசேஷர்கள் மட்டும் சபையில் இருந்தால் போதும் என்று சொல்லுவோமென்றால”, பார்த்தீர்களா? அப்பொழுது நாம் தீர்க்கதரிசிகளைக் காண நாம் தோல்வியடைவோம். அப்போஸ்தர்கள் இருப்பதை காண தோல்வியடைவோம். சுகம் அளிக்கும் வரங்கள், அந்நிய பாஷையில் பேசுவது, அதை வியாக்கியானம், அற்புத காரியங்கள் நடப்பதைபார்க்க நாம் தவறவிடுவோம். புரிகிறதா? அந்த காரியங்கள் எல்லாம் எனக்கு மூக்கு கண்கள் இருப்பது போல் இருக்கின்றன. அதை பவுல் ஒன்று கொரிந்தியரில் சொல்லவில்லையா? அவைஎல்லாம் ஒரே சரீரத்திற்குள் இருக்கிறது. 65. இந்த வரங்கள் எல்லாம்... நீங்கள் உலகத்தில் பிறக்கும்போது அதோடு பிறக்கிறீர்கள். அவைகள் தேவனின் ராஜாதிபத்தியத்தால் வருகிறது. இந்த உலகத்தில் தரிசனங்களை பார்ப்பது என்னுடைய பாகமாயிருக்கிறது. மற்றும் அது ஒரு தீர்க்கதரிசனம் அல்லது அதுபோன்ற ஒன்று என்று மக்கள் சொல்ல முயற்சிப்பதை நான் கேட்டு இருக்கிறேன். அது ஊக்கத்தின் கீழ் என்று மக்கள் இவ்வாறு சொல்லுவதை நான் கேட்டிருக்கிறேன். அது அப்படித்தான் பேசப்படும். ஆனால் அது ஒரு ஆழ்மனதின் காரியமாகும். அதை நான் உங்களுக்கு முன்பே விவரித்த காரியமாயிருக்கிறது. நீங்களாகவே ஒரு சொப்பனத்தை காண முடியாது. யாரோ ஒருவர் நீங்கள் சொப்பனத்தை காணும்படி செய்ய வேண்டும். தேவன் அதை செய்ய வேண்டும். அது உங்கள் ஆழ்மனதில் நடக்கிறது. நீங்களாகவே கனவு காண முடியாது. நீங்கள் அதை தவிர்க்க முடியாது. நீங்கள் தானாகவே ஒருபோதும் தன் ஆழ்மனதிற்குள் திரும்புவதில்லை. ஆனால் உங்களுடைய ஆழ்மனதில்... நீங்கள் சொப்பனம் காணும்போது, நீங்கள் எங்கேயோ இருப்பது போன்று உங்களுக்கு ஞாபகம் இருக்கும். பல வருடங்கள் முன்பு நீங்கள் கண்ட சொப்பனங்கள் உங்களுக்கு ஞாபகம் இருக்கிறது. உங்களில் எந்த பாகமானது அதை உண்டாக்குகிறது. அது இன்னுமாக உங்கள் ஞாபகத்தில் இருக்கிறது. புரிகிறதா? ஏதோ ஒரு பகுதி உங்களுக்குள் இருக்கிறது. 66. இப்பொழுது ஒரு தீர்க்கதரிசனமுள்ளவர், ஒரு தீர்க்கதரிசி, அவர்களுடைய உள்ளுணர்வு அது பின்பாகவும் இல்லை. முன்பாகவும் இல்லை. அது இங்கேயே இருக்கிறது. அவர்கள் நித்திரைக்கு போவதில்லை. ஒரு நிலையிலிருந்து இன்னொரு நிலைக்கு போகிறீர்கள். இயேசு கிறிஸ்து பூமியில் இருந்தபோது அவ்விதமாகவே நடந்தது. கூட்டத்தினரை கண்டு அவர்கள் எண்ணங்களை பகுத்தறிந்தார். அது சரிதானே? பிலிப்பு அவரிடத்தில் வந்தபோது அவர் சொன்னார், “இதோ ஒரு நல்ல மனிதன் இருக்கிறார்”, வேறுவிதமாக சொல்ல வேண்டுமென்றால், இன்றைய நாளில் கிறிஸ்தவன் ஒரு நல்ல விசுவாசி என்று சொல்லுவது போல. அதற்கு நாத்தான்வேல் கேட்டான், “என்னை எப்போது அறிந்து கொண்டீர்கள் ரபி? (சங்கை போதகர்)”, அதற்கு அவர், “பிலிப்பு உன்னை அழைக்கும் முன் நீ ஒரு மரத்தில் கீழ் நின்று இருப்பதை நான் கண்டேன்”, என்று சொன்னார். அதற்கு, “நீங்கள் தேவனுடைய குமாரன். இஸ்ரவேலின் ராஜா”, என்று சொன்னான். அது சரிதானே? 67. அதற்கு இயேசு, “இக்காரியங்களை நீங்களும் செய்வீர்கள்”, என்று சொன்னார், “நான் எந்த ஒரு சுகமளிக்கிறதையும் செய்வதில்லை. பிதாவானவர் எதை செய்ய சொல்லுகிறாரோ அதை மட்டுமே நான் செய்கிறேன். அவர் எதை காண்பிக்கிறாரோ அதை நான் செய்கிறேன்”. அவர் மரித்தோரிலிருந்து எழும்பி அவருடைய சபையில் ஜீவிக்கிறார். மற்றும் பிதா செய்ததை...வேதத்தில் உள்ள காட்சி இப்பொழுது ஓடுகிறதை உங்களாலே கிரகிக்க முடிகிறதா? கவனியுங்கள். “பிதாவானவர் சொன்னது மட்டும்...”, இங்கு ஒரு சீமாட்டி நின்று கொண்டிருக்கிறார். எனக்கு தெரிந்தவரை என் ஜீவியத்தில் அவளை நான் கண்டதில்லை. எனக்கு அவள் ஒரு அந்நியராக இருக்கிறாள்.இங்கு இரண்டு அல்லது மூன்று பேர் இந்த கூட்டத்தில் உள்ளவர்களை எனக்கு தெரியும். சகோதரர் மூர்ரின் சகோதரி சரியாக இங்கு இருக்கிறார் என்று நான் நம்புகிறேன். அவளை அடையாளம் கண்டுகொண்டேன், சகோதரர் பீளர் இங்கேயே இருந்தார் என்று நான் நம்புகிறேன். கொஞ்ச நேரத்திற்கு முன் நான் அவரை பார்த்தேன், அதோ சகோதரர் ஜான் ரயன் அவர் பக்கத்தில் அது சகோதரி ஜான் ரயன் அமர்ந்து இருக்கிறார்.எனக்கு தெரிந்தவரை என் மனைவி இங்கு எங்கேயோ உள்ளார். ஆனால் அது கூட எனக்கு தெரியாது. இன்னுமாக அவளை நான் பார்க்கவில்லை. இந்த கட்டிடத்தில் இந்த மக்களை மட்டுமே எனக்கு தெரியும். மற்றும் சகோதரர் போஸே எனக்கு தெரியும். இவர்களை மட்டும் தான் எனக்கு தெரியும்... ஆம், சீயோன் பட்டணத்தில் இருந்து சகோதரர் மற்றும் சகோதரி சிம்ஸ்அவர்களையும் நான் பார்க்கிறேன். நான் அவர்களையும் பார்க்கிறேன். அது ஜாய்ஸ் மற்றும் சகோதரர் சிம்ஸ் அங்கு இருக்கிறார்கள். 68. இப்பொழுது நான் எனக்கு தெரிந்தவரை அவ்வளவு மக்கள் தான் என்று எண்ணுகிறேன். இல்லை, டாக்டர்லீ அங்கு அமர்ந்து இருப்பதை என்னால் பார்க்க முடிகிறது என்று நம்புகிறேன். கடந்த கூட்டத்தில் அவரை நான் சந்தித்தேன். நல்லது சகோதரர் லீ, அப்போது தான் நான் முதன் முறையாக உங்களை நான் பார்த்தேன். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. அவரை சந்தித்தீர்களா சகோதரர் போஸே? டாக்டர் லீ உங்களை அடையாளபடுத்த எழுந்து நிற்பீர்களா? இப்பொழுதுதான் நான் ஒரு கூட்டத்தை நடத்தினேன். மியாமி பிளோரிடாவில், பாப்டிஸ்ட் சகோதரர்களில் இவர் ஒருவராக இருந்தார். அங்கு தான் நாங்கள் ஒரு அற்புதமான கூட்டங்களை முடித்து நான் வந்தேன். அது சரியே. என் மனைவி எங்கே என்று தேடிக் கொண்டிருக்கிறேன். எங்கு இருக்கிறாய்தேனே? கரங்களை உயர்த்து. அதில் நான் ஆர்வமாக இருக்கிறேன். எங்கு... ஓ, ஆம் சரி, ஆம் ஓ, நல்லது. அது எதார்த்தமாக என் சிந்தைக்கு வந்தது. மற்றும் எனக்கு வேண்டாம். மற்ற காரியங்கள் நம் சிந்தனைக்கு வரக்கூடாது. நீங்கள் தேவனுக்கு முன்பாக முற்றிலும் மிகவும் சாதாரணமாக இருக்கவேண்டும்... சரி அவள் சிறியவள் மற்றும் அவள் ஒரு மூலையில் இருந்ததால் என்னால் அவளை காண முடியாமல் போனதில் ஆச்சரியமில்லை. நல்லது. 69. இப்போது நீங்கள் ஜெபத்தில் இருங்கள். நீங்கள் ஜெபியுங்கள். உங்களில் ஒவ்வொருவரையும் நான் ஒன்று கேட்க விரும்புகிறேன். இங்கு அமர்ந்து இருக்கும் சீமாட்டியில் இருந்து துவங்குவோம். சீமாட்டியே நாம் அந்நியர்களாக இருக்கிறோம் அல்லவா? நமக்கு ஒருவரை ஒருவர் தெரியாது. நல்லது. இங்கு ஒரு பரிச்சயமாகாத ஒரு பெண் இருக்கிறாள். இப்போது நாம் நேரத்தை எடுத்துக் கொள்வோம். இது சனிக்கிழமையாக இருக்கிறது. ஆகையால் நாளை நீங்கள் ஞாயிறு ஆராதனைக்கு செல்லும் வரை எழுந்திருக்க வேண்டியதில்லை. இங்கு இந்த சீமாட்டி... தேவ குமாரனாகிய இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்படாமல், மற்றும் மகிமைக்குள் அவர் செல்லாமல், பரத்தின் மாட்சிமையில் வலது புறத்தில் அமராமல் இருப்பாரென்றால் என்ன நேரிடும். மேலும் நார்வேயில் எனக்கு கொடுத்த உடையை உடுத்தி கொண்டு அவர் இங்கு நிற்ப்பாரென்றால் மற்றும் அந்த உடையில் இங்கு இருக்கும் இந்த சீமாட்டியை பார்ப்பாரென்றால் அவரால் செய்யக்கூடிய ஒரே ஒரு காரியம்... 70. அவர்கள் வியாதிபட்டிருந்தால், அவர்கள் சுகத்தை பெறும் வரை, எனக்கு தெரியாது. தேவனுக்கு தெரியும். அவளுக்கு என்ன பிரச்சனையென்று தேவன் அறிவார். அவர்கள் நினைத்தாலும் இயேசு கிறிஸ்துவிடத்தில் இருந்து அவர்களுடைய ஜீவியத்தை மறைக்க முடியாது, அவளுக்கு என்ன பிரச்சனை என்பதை தேவன் இயேசு கிறிஸ்து வெளிப்படுத்தினால். அது உண்மைதானே? தேவன் வெளிப்படுத்தவில்லையென்றால் இயேசுவிற்கும் அது தெரியாது. அது சரிதானே... பிதா காண்பிக்கிறதெதுவோ அதை மட்டுமே செய்வார். நினைவிருக்கிறதா அவர் முகத்தில் ஒரு கந்தத்துணியை போட்டு மூடி அவர் தலையை அடித்தார்கள். பின், நீ ஒரு தீர்க்கதரிசியென்றால் உன்னை யார் அடித்தார்கள் என்று தீர்க்கதரிசனம் சொல்லு என்று அந்த போர் சேவகர்கள் கேட்டார்கள். அவர் வாயை திறக்கவில்லை. ஏரோது சொன்னான், நீங்கள் ஒரு அற்புதத்தை செய்யுங்கள். நீங்கள் செய்வதை நான் பார்க்கட்டும். மக்களுக்காக அவர் கோமாளியான காரியத்தை செய்யவில்லை. பிதாவானவர் என்ன செய்யச் சொன்னாரோ அதையே அவர் செய்தார். 71. இப்போது அவர் இங்கு நின்று கொண்டிருந்தால், அவளுடைய வியாதி குணமடையும் வரை... ஆயிரத்து தொள்ளாயிரம் வருடங்களுக்கு முன் அவர் மரித்தபோதே இயேசுகிறிஸ்து அவளுக்கு சுகத்தை கொடுத்தார் என்று எத்தனை பேர் விசுவாசிக்கிறீர்கள்? (சபையார் ஆமென் என்று சொல்லுகிறார்கள்) நல்லது. இது உங்களுக்கு சுவிசேஷத்தை கற்பிக்கப்பட்டுள்ளது என்பதை காண்பிக்கிறது. அது சரிதானே? மற்றும் அவள் பாவியாக இருப்பாளென்றால் ஆயிரத்து தொள்ளாயிரம் வருடங்களுக்கு முன் அவர் மரித்தபோதே இயேசு கிறிஸ்து அவளை இரட்சித்தார். அது சரிதானே? அவர் இப்பொழுது இறங்கி வந்து உங்களை ரட்சிக்கவில்லை. அவர் ஏற்கனவே என்ன செய்தாரோ அதை நீங்கள் உங்கள் ரட்சிப்பை ஏற்றுக் கொள்கிறீர்கள். அவர் ஏற்கனவே செய்து முடித்த உங்கள் சுகத்தையும் நீங்கள் ஏற்றுக்கொள்கிறீர்கள். அப்படியானால் அவர் என்ன செய்வார் அவளுடைய விசுவாசத்தையும் அவள் குணமடைவதையும் ஏற்றுக் கொள்ளும் நிலைக்கு அவள் வருமட்டும் அவர் ஏதாவது செய்யமுயற்சிப்பார். அது சரிதானா? அது வேதவசனம்தானா? அது விவேகமானதாக உள்ளதா? அதுவேதம் தானா? நல்லது தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. 72. இப்போது அவரிடத்தில் ஜெபிக்கிறேன், நான் சிறு பிள்ளையாக இருந்தபோதே என்னிடத்தில் வந்த கர்த்தரின் தூதனானவர்... என் தாயார் சொன்னார் அப்போது நான் பிறந்து மூன்று நிமிடம் தான் இருக்கும் ஒரு வெளிச்சம் என் மேல் நின்று கொண்டிருந்தது. என் ஜீவியத்தில் முதலாவதாக நான் நினைவு கூறும் காரியம் அது அந்ததரிசனம் அன்றையிலிருந்து அது என்னோடு இருக்கிறது. இந்த ஆராதனை முடியும் முன் என் ஜீவியத்தை குறித்து கணக்கு கொடுக்கதேவனுக்கு முன்னால் நிற்க வேண்டுமானால் என்னை நோக்கி பார்க்கும் தேவனுக்கு, அவர் தரிசனத்தை எனக்கு காண்பித்தது நிஜமென்றும் அவருக்கு தெரியும். அந்த வெளிச்சம் அவர் இறங்கி வந்தபோது அதன் புகைப்படத்தை எடுத்தார்கள். அநேகர் அதை பார்த்திருக்கிறீர்கள். அது வாஷிங்டனில் டி சி யில் உள்ள மத கலை கூடத்தில் உள்ளது. இந்த இரவுப்பொழுதில் கிருபையை அருளட்டும் மற்றும் அவர் எனக்கு உதவிசெய்யட்டும். ஏனெனில் என் இருதயத்தில் அவருடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவை நீங்கள் காண வேண்டும் என்று உதவிசெய்வதே என் இருதயத்தில் உள்ளது என்று அவர் அறிந்திருக்கிறார். மேலும் அவருடைய ஆவியினால் அவருடைய வார்த்தையினால் மற்றும் என் மேல் இருக்கும் அவருடைய அபிஷேகத்தினால் இங்கு இருக்கும் ஒவ்வொரு ஆத்துமாவையும் இயேசு கிறிஸ்து நாமத்தில் என் கட்டுக்குள் எடுத்துக் கொள்கிறேன். 73. இப்போது நீங்கள் இங்கு வாருங்கள் சீமாட்டியே, உங்களிடத்தில் சில நொடிகள் பேசவேண்டும்...பாருங்கள் நாம் இருவரும் மனிதர்கள் உங்களுக்கு ஆத்துமா உள்ளது எனக்கும் ஆத்துமா உள்ளது. மற்றும் ஒரு நாளில் தேவனை சந்தித்து நம் ஜீவியத்திற்குண்டான கணக்கை கொடுக்க வேண்டும். மற்றும் அது தொடர்ந்து... என்னால் முடிந்த வரை நன்மைக்காக எல்லாவற்றையும் செய்ய எண்ணுகிறேன்... உங்களுக்கும் அவ்வாறு உள்ளது அல்லவா? நிச்சயமாக அவ்வாறு தான் இருக்கிறது. இப்போது நாம் இருவரும் ஒருவருக்கு ஒருவர் அந்நியர்கள். மற்றும் உங்கள் பிரச்சனை எதுவாக இருந்தாலும், இங்கு நிற்கிற எனக்கு தேவன் அதை வெளிப்படுத்துவாரென்றால், நான் சத்தியத்தை சொன்னேன், நான் அவருக்கு பிரதிநிதியாக நிற்கிறேன் என்று உங்களால் விசுவாசிக்க முடியுமா? நாம் ஒருவரை ஒருவர் பார்த்ததேயில்லை. அப்படியானால் என்னால் அதை செய்ய முடிந்தால்... அப்போது உங்களுக்கு தெரியும். இங்கு ஏதோ ஒரு ஆவி மற்றும் ஏதோ ஒரு வல்லமை இங்கு இருக்கிறது என்று உங்கள் ஜீவியத்தில் அறியும்படியாக இங்கு ஏதோ ஒரு வல்லமை உள்ளது என்று நீங்கள் அறிகிறீர்கள். நான் ஒரு கிறிஸ்தவன். தேவனை விசுவாசிக்கிறேன். பரிசுத்த ஆவியானவரை பெற்றுக் கொன்டேன். தேவன் அதை எனக்கு வெளிப்படுத்துவாரென்றால் உங்கள் சுகத்தை நீங்கள் ஏற்றுக்கொள்வீர்கள். 74. பிலிப்பு வந்தபோது, இருந்தது போல நீங்கள் ஒரு கறுப்பின பெண்ணாகவோ நான் ஒரு வெள்ளை மனிதனாகவோ இருந்தாலும் அதே ஆத்துமா தான் இங்குள்ளது. அது சரியாக அந்நாளில் சமாரிய ஸ்திரீ இயேசுவிடத்தில் வந்தபோது அதே விதமாக அது இருந்தது. அவள் சொன்னாள்... அவர் சொன்னார் குடிக்க தண்ணீர் தா, இன்றைய நாளில் இருப்பது போல் அன்றைக்கும் இனவேறுபாடு இருந்தது. புரிந்தா? சமாரிய ஸ்திரீ அவரை நோக்கி, “நீர் யூதனாயிருக்க, சமாரிய ஸ்திரீயாகிய என்னிடத்தில் தாகத்துக்குத் தா என்று எப்படிக் கேட்கலாம் என்று அவள் கேட்டாள். அதற்கு அவர், “நீ யாரிடத்தில் பேசுகிறாய் என்று அறிந்திருப்பாயென்றால்...” எல்லோரையும் போல அவள் எந்த வேறுபாடும் இராதவரிடத்தில் பேசிக் கொண்டிருந்தாள். உங்களுக்கு புரிந்ததா? அதற்கு அவள், “அதன் பின் நேராக அவளுடைய பிரச்சனை எதுவோ அதற்கு நேராக அவர் சென்றார்”, அவள் மோசமான பாவத்தில் இருந்தாலும், அவள் வேண்டுமென்று அவர் எண்ணினார், அவள் ஒரு நல்ல விசுவாசியாகவும், நல்லவளாகவும் இருக்கவேண்டும் என்றும் விரும்பினார். 75. இப்போது அவர் அதே கர்த்தராகிய இயேசுவாக இருக்கிறார் அல்லவா? அவர் அதே கர்த்தராகிய இயேசு. நீங்கள் உங்களுக்காக இங்கு வரவில்லை, மருத்துவமனையில் இருக்கும் ஒரு மனிதனுக்காக வந்திருக்கிறீர்கள். மற்றும் அவர்... அவர்... அவர் மிகவும் மோசமான நிலையில் உள்ளார். அவருக்கு... நான் நம்புகிறேன்... சில மருத்துவர்கள் இப்போது அவர் பக்கத்தில் உள்ளார்கள். அது காசநோய். அந்த மனிதனுக்கு காசநோய். அவர் உங்களுடைய புருஷன். அது சரிதானா? அவருக்கு பதிலாக நீங்கள் இங்கு நிற்கிறீர்கள். நல்லது, பிதாவே தேவனே, எங்களுடைய சகோதரி அவள் புருஷனுக்காக இங்கு நிற்கிறாள். அவருடைய படுக்கை அருகே பரிசுத்த ஆவியானவர் நிற்பாராக, அவரை அவள் காணும் போது இந்த மணி நேரத்தில் ஏதோ நடந்தது என்று அவர் சாட்சி சொல்லட்டும். மற்றும் சுகமடைந்து வீட்டிற்கு செல்லட்டும். இதை இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் கேட்கிறேன். ஆமென். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. சகோதரியே, கர்த்தர் அவருடைய ஆசீர்வாதத்தை உங்கள் மீது கூட்டுவாராக. எங்கள் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மீது உங்களுக்கு விசுவாசம் உள்ளதா? இப்போது அவருடைய மகத்தான சர்வ வல்லமையுள்ள ஆசீர்வதிக்கப்பட்ட பரிசுத்த வல்லமையை பொழியட்டும்... ஒவ்வொருவருக்கும் அவருடைய ஆசீர்வாதத்தை அனுப்பட்டும். இங்கு இருக்கும் ஒவ்வொரு நபரும் விசுவாசிக்கட்டும். அவர்களுக்கு விசுவாசம் இருக்கட்டும். ஒரு நிமிடம்... 76. நீண்ட தொப்பி போட்டு அமர்ந்து இருக்கும் சீமாட்டியே, நீங்கள் அழுது கொண்டு இருக்கிறீர்கள். கருப்பின சீமாட்டியே, என்ன... ஓ, உங்களுக்கு நேசமுடையவர் வியாதிபட்டு இருக்கிறார். அது ஒரு மனிதன். அது உங்கள் தகப்பன் என்று நான் நம்புகிறேன். அது சரிதானா? சமீபமாக அறுவை சிகிச்சை அல்லது ஆண்களின் விதைப்பையின் அருகிலுள்ள சுரப்பியில் அறுவை சிகிச்சை நடந்தது. அது சரிதானா? நீங்கள் திரும்ப செல்லும்போது உங்கள் கரத்தை அவர் மீது வையுங்கள். இயேசு கிறிஸ்து நாமத்தில் அவர் சுகத்தை பெற்றுக் கொள்வாராக. தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. தேவன் மீது விசுவாசம் கொள்ளுங்கள். உங்கள் முழு இருதயத்தோடு விசுவாசியுங்கள். சந்தேகிக்காதீர்கள், அப்படியே நம்புங்கள். முன்னே வாருங்கள், எப்படி இருக்கிறீர்கள் ஐயா... நாம் ஒருவருக்கொருவர் அந்நியர்களாக இருக்கக்கூடும். என் ஜீவியத்தில் உங்களை நான் பார்த்ததில்லை. ஆனால் நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நம் இருவரையும் போஷித்திருக்கிறார். அவர் செய்தாரல்லவா? மற்றும் இன்று நாம் இவ்வாறு இருப்பதும் அவரினால் தான். எல்லாம் அவருடைய ராஜாதிபத்திய கிருபையினால் நீங்களும் நானும் ஒருவருக்கொருவர் அந்நியர்களாக இருக்கிறோம். ஐயா நம் ஜீவியத்தில் நாம் சந்தித்ததில்லை. நாம் ஒருவரை ஒருவர் அறிந்து கொண்டதில்லை. நேராக இந்த மேடைக்கு மேல் நடந்து வாருங்கள். நல்லது இங்கு ஏதோ ஒரு காரியம் உள்ளது. அவர் மட்டும் அவருடைய வல்லமை மற்றும் கிருபையை எனக்குக் கொடுப்பாரென்றால்... தேவ ஆவியானவர் ஏதாவதொன்றில் பிரதிநிதியாக இருக்க வேண்டும். அது அக்கினி ஸ்தம்பத்தில் இருந்தது. ஓ, ஒரு சமயம் தண்ணீரின் மேல் இருந்தது. மற்றும் மக்கள் அதனுள் சென்று சுகமடைந்தார்கள். ஏதோ ஒன்றிற்குள் அது பிரதிநிதியாக இருக்க வேண்டும். ஒரு சமயம் கீழே பறந்து வந்த புறாவில் பிரதிநிதியாக இருந்தது. பின் இயேசு கிறிஸ்துவுக்குள் பிரதிநிதியாக இருந்தது. மற்றும் அவர் வரும்வரை உலகம் முழுவதும் விசுவாசிக்குள் அது பிரதிநிதியாக இருக்கும் என்று அவர் வாக்குத்தத்தம் செய்தார். 77. அவருடைய அன்பின் இரக்கத்தினால் கிருபையினால் சபையை உருவாக்க வெவ்வேறு நோக்கத்திற்காக சபையில் வெவ்வேறு காரியங்களை அமைத்துள்ளார். இப்போது இங்கு நீங்களும் நானும் இரண்டு புருஷர்களாக இருக்கிறோம். ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டதேயில்லை. உங்களை பார்த்ததாக எனக்கு நினைவே இல்லை. நான் பார்த்ததில்லை என்று எண்ணுகிறேன். மற்றும் நீங்கள் என்னை ஏதாவது ஒரு கூட்டத்தில் பார்த்து இருக்கலாம். உங்களுக்கு புரிகிறதா? (சகோதரர் சொல்லுகிறார் ஆம் ஒரு கூட்டத்தில் நான் உங்களை பார்த்து இருக்கிறேன்) இதற்கு முன் உள்ள கூட்டங்களில் இருந்து இருக்கிறீர்கள். ஒரு காரியம் மட்டும் எனக்கு தெரியும். நீங்கள் ஒரு விசுவாசி. நீங்கள், நீங்கள் ஒரு விசுவாசி. அதுமட்டுமல்ல நீங்கள் ஒரு பிரசங்கி. அது சரி. அது உண்மை தானே? ஆம் ஐயா, மேலும்... நீங்கள்... ஏதோ ஒரு சிறிய தொப்பிகள் கொண்ட சில ஸ்திரீகள் உள்ள... அது மெனோனைட் நீங்கள் ஒரு மெனோனிட் பிரசங்கி. அது உண்மை தானா? ஆம் ஐயா, ஆம் ஐயா, அவ்வாறு தான் நீங்கள் ஒருபட்டணத்தில் இருந்து வருகிறீர்கள். அது அய்வா. (lowa) அய்வா பட்டணம். அது சரிதானா? மற்றும் நீங்கள்... குடல் இறக்கத்தினால் (Herina) அவதிக்குள்ளாக இருக்கிறீர்கள். மற்றும் மலக்குடல் பிரச்சனை உள்ளது. அது உண்மைதானா? நான் தேவனின் தீர்க்கதரிசி என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? நாம் ஜெபிக்கலாம். கர்த்தாவே வேதாகமத்தின் பிரகாரம் என்னுடைய கரத்தினால் காரியங்களை வெளிப்படுத்த, உம்முடைய ஆவி, உம்முடைய ஊழியக்காரனாக என் மீது இருக்கையில் என் சகோதரர் மீது என் கரத்தை வைக்கிறேன். அவருடைய சரீர சுகத்திற்காக மேலும் பொல்லாப்பின் வியாதிகளும் மற்றும் அவதிகளும் என்னுடைய சகோதரரை விட்டு செல்லட்டும். அவற்றிலிருந்து என் சகோதரரை நான் விடுவிக்கிறேன். இவை இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் என் சகோதரரை விட்டு செல்லட்டும் என்று நான் கூறுகிறேன். என் சகோதரரை விட்டு வெளியேறி, அவர் நலமாக வீடு செல்லட்டும். ஆமென். தேவனின் ஆசீர்வாதம் உங்கள் மீது இருக்கிறது. சகோதரரே செல்லுங்கள். மற்றும் இப்பொழுதே நலமாகுங்கள். 78. நாம் ஜெபத்தில் இருந்து நம் முழு இருதயத்தோடு தேவனை விசுவாசிப்போம். இப்போது கவனமாக மற்றும் உத்தமமாக இருக்க முயற்சியுங்கள். மற்றும் ஜெபித்துக் கொண்டு இருங்கள். உங்கள் முழு இருதயத்தோடு நீங்கள் விசுவாசித்தீர்களென்றால் தேவன் உங்களை சுகமாக்குவார். அதை நீங்கள் விசுவாசிக்கவில்லையா? ஒரு நிமிடம் ஐயா, சகோதரரே ஏதோ ஒன்று... ஒரு நிமிடம் காத்து இருங்கள். ஒரு பரிதாபமான... எல்லாவற்றையும் அறிந்த சர்வ வல்லமையுள்ள தேவன் எல்லாவற்றையும் வெளிப்படுத்துகிறார். எல்லாவற்றையும் சரிப்படுத்துகிறார். நீங்கள் சுகமானீர்கள் என்று நான் விசுவாசிக்கிறேன். பாருங்கள்... ஆனால், ஓ, அது அங்கு இருக்கும் சீமாட்டியின் மேல் உள்ளது. உங்களுக்கும் மலக்குடல் சிக்கல் உள்ளது அல்லவா சீமாட்டியே, அது சரிதானா? அது உங்களை விட்டுவெளியேறும்போது ஒரு வினோதமான உணர்வு இருந்தது அல்லவா? அந்த மனிதன் அங்கு சென்றபோது, அந்த சமயம் தான் நீங்களும் சுகமானீர்கள். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. ஐயா... நீங்கள்... தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. கடந்து செல்லுங்கள். இப்போது பயபக்தியாய் இருங்கள். பாருங்கள் கூட்டத்தில் அமர்ந்து இருப்பவர்கள், நீங்களும் மேடையில் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. பாருங்கள், இங்கு இருக்கும் மக்கள்...வரிசையில் நிற்பது பரிசுத்த ஆவியானவர் அசைவாடு வதற்காக மட்டுமே. அங்கு இருந்து உங்கள் முழு இருதயத்தோடு நீங்கள் விசுவாசியுங்கள். உங்கள் முழு இருதயத்தோடும் உங்கள் முழு ஆத்துமாவோடும் உங்கள் முழு சிந்தையோடும் விசுவாசம் கொண்டீர்களென்றால், மீதி உள்ள காரியத்தை தேவன் பார்த்துக் கொள்வார். 79. எப்படி இருக்கிறீர்கள் சீமாட்டியே? நான் தேவ ஊழியக்காரனாக இருக்கிறேன் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? இதை நான் சொல்லுவதற்கான காரணம் என்னவென்றால் பேதுரு மற்றும் யோவான் அலங்கார வாசலண்டை அவர்கள் கடந்தபோது எங்களை நோக்கி பார் என்று சொன்னார்கள். அதற்கு அவர்கள் செவி கொடுத்தார்கள். அது உங்களுக்கு தெரியும். மேலும் கர்த்தரின் தூதனானவர் என்னிடத்தில் சொன்னது என்னவென்றால் மக்கள் உன்னை விசுவாசிக்கும்படி செய்தால்... அது எவ்வாறென்றால் இங்கு இருக்கும் பிரசங்கி இப்படி சொல்வது போல், “நீங்கள் என்னை தேவன் அனுப்பிய மேய்ப்பர் என்று விசுவாசிக்கிறீர்களா?” “ஆம் மேய்ப்பரே, அதை நான் விசுவாசிக்கிறேன்”. “இப்பொழுது என்னால் உங்களுக்கு உதவி செய்யமுடியும்”, ஆனால் அவர் தேவனுடைய மேய்ப்பர் என்று நீங்கள் விசுவாசிக்கவில்லையென்றால் அவரால் உங்களுக்கு உதவி செய்யமுடியாது. உங்களுக்கு புரிகிறதா? நீங்கள் விசுவாசிக்க வேண்டும்... தேவனுடைய திறவுகோல் அது விசுவாசம் பாருங்கள். அது ஒரு காரியம் மட்டுமே. அதை திறந்து கொடுக்கும். மற்றும் அந்த விசுவாசம் இங்கு இருந்து, இங்கு இருந்து, மற்றும் அங்கு இருந்து வருகிறது. புரிகிறதா? பாருங்கள், அவர் சொல்லுவது எதுவோ அது இங்கு வருகிறது, அதை நீங்கள் நம்பும்போது அது பலன்களை கொடுக்கிறது. புரிகிறதா? 80. நாம் ஒருவருக்கு ஒருவர் அந்நியர்களாக இருக்கிறோம் என்று எண்ணுகிறேன். எனக்கு தெரிந்தவரை உங்களை என் ஜீவியத்தில் நான் எப்பொழுதுமே பார்த்ததேயில்லை. ஆனால்... உங்கள் தலையில் பிரச்சனை உள்ளது. அது உங்களுக்கு உள்ளதா? அப்படித்தானே? உங்களுக்கு காதுகளில் ஒரு கர்ஜிக்கிற சத்தம் போல் ஒரு உணர்வு உள்ளது. அது சரிதானா? இப்போது உங்கள் அருகாமையில் ஒரு வாலிபமான ஸ்திரீயை பார்க்கிறேன். அது அது ஏதோவொன்று... நான் இவ்வாறு எண்ணினேன்....அது ஒரு வாலிப மகள் அமர்ந்து ஜெபித்து கொண்டு இருக்கிறாள். ஒரு வாலிப ஸ்திரீ, நான் அதை எண்ணினேன். ஓ, ஆம் இப்போது எனக்கு நன்றாக தெரிகிறது. இதோ அவள் உங்களுடைய மகள். மற்றும் நீங்கள் மிகவும் வருத்தத்தோடு இருக்கிறீர்கள். ஓ, ஆம், அது ஒரு விவாகரத்து பிரச்சனை. அது அவளுக்கும் மற்றும் அவளுடைய கணவனுக்கும், அதற்குள் இரண்டு பிள்ளைகள் இருக்கிறார்கள். அப்படித்தானே. அது சரிதான். அதில் இரண்டு சிறிய பிள்ளைகள் இருக்கிறார்கள். அது ஒரு விவாகரத்து காரியம். மற்றும் உங்கள் கணவர் கூட அருகாமையில் நிற்கிறார். ஏதோவொன்றை செய்ய முயற்சிக்கிறார். ஏதோ ஒரு காரியத்திலிருந்து விடுபட முயலுகிறார். ஓ, அது குடிப்பழக்கம். அவர் முயற்சிக்கிறார்... அது சரிதானா? அதிலிருந்து விடுபட்டு கிறிஸ்தவராக முடியும். ஓ, பிதாவே, உங்கள் இரக்கத்திற்காக நான் ஜெபிக்கிறேன். அதில் நீங்கள் பரிவாக இருந்து எங்கள் கோரிக்கையை இந்த இரவு பொழுதில் அருளும்படியாக, என்னுடைய சகோதரியின் பிரச்சனை இந்த இரவுப்பொழுதில் அவளை விட்டு நீங்கும்படி கேட்கிறேன். மற்றும் அவள் கேட்ட எல்லாவற்றையும் நீங்கள் அருளும்படியாக கேட்கிறேன். ஓ, இரக்கமுள்ள பிதாவே, எங்களை கொண்டு வந்த...( ஒலி நாடாவில் காலியிடம்) 81. “நாம் அந்நியர்களாக இருக்கிறோம். ஒருவருக்கு ஒருவர் நாம் அறியோம். ஆனால் தேவன் நம்மை அறிந்து இருக்கிறார். அப்படியே விசுவாசியுங்கள் சகோதரியே. எல்லா வலியும் உங்களை விட்டு விலகும். நான் தேவனின் ஊழியக்காரன் என்று விசுவாசிக்கிறீர்களா? நான் அதை விசுவாசிக்கிறேன். இந்த பட்டணத்தில் நீங்கள் வசிக்கவில்லை. அப்படித்தானே? நீங்கள் இல்லினாய்ஸ் (illinois)என்ற ஊரில் இருந்து வருகிறீர்கள். அது உண்மை தானே? நீங்கள் (shreveport) ஷேர்வ்போர்ட், இல்லினாய்ஸ் பகுதியிலிருந்து வருகிறீர்கள். அப்படித்தானே? கர்த்தராகிய இயேசுவை நீங்கள் நேசிக்கிறீர்கள்... உங்களுடைய புருஷன் பேர் ஜேம்ஸ் தானே? வேய்ட் காப் அல்லது இதுபோல்...ஓ, அது சரிதான். ஹ்ம்ம் நீங்கள் மிகவும் வியாதிபட்டு இருக்கிறீர்கள். அது உங்கள் எலும்பில் உள்ளது. அது கட்டி. எலும்பில் உள்ளதென்று மருத்துவர்கள் சொன்னார்கள் என்று நான் நம்புகிறேன். அது சரிதானா? எந்த சிகிச்சையும் செய்ய முடியாத சூழ்நிலை. தேவன் மட்டுமே செய்யக்கூடும். உங்கள் சுகத்தை நீங்கள் ஏற்றுக் கொள்கிறீர்களா? எல்லாவற்றையும் அறிந்து அதை சொல்கிற இங்கு இருக்கும் பரிசுத்த ஆவியானவரை நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? இப்பொழுது விசுவாசிக்கிறீர்களா? அவர் எல்லாவற்றையும் அறிந்தவர். மற்றும் எல்லாவற்றையும் சொல்பவர். இந்த அபிஷேகம் இங்கு இருக்கையில் நான் நம்முடைய பரலோக பிதாவிடத்தில் அந்த காரியத்தை சபிக்கும்படி கேட்பேனென்றால், மற்றும் நீங்கள் நலமாயிருப்பதை மருத்துவர்கள் கண்டுபிடிப்பார்கள் என்பதை நீங்கள் இப்போது விசுவாசிக்கிறீர்களா? இங்கு வாருங்கள். 82. இரக்கமுள்ள பிதாவே என் சகோதரியின் தெய்வீக விடுதலைக்காக நான் ஜெபிக்கிறேன். இந்த கொடுமையான வியாதியில் இருந்து இந்த இரவுப்பொழுதில் அவள் விடுதலை பெறட்டும். உம்முடைய ஊழியக்காரர்களான மருத்துவர்களால் அவளுக்கு எதுவும் செய்யமுடியாது. ஆனால் உம்மால் செய்யக்கூடும். கர்த்தாவே நீங்கள் எங்களுக்குள் இப்போது இருப்பேன் என்று வாக்களித்திருக்கிறீர்கள்... மற்றும் அதை நாங்கள்...நாங்கள் உங்கள் சாயலில் இருந்தால் உம்மைப் போலாக உண்டாகுவோம்... நீங்கள் ஒரு சிருஷ்டி கர்த்தராக இருந்தீர்கள். மற்றும் உங்கள் மகத்தான வல்லமையால் காரியங்களை சிருஷ்டித்தீர். மற்றும் உங்களை போல் வேறு யாரும் இது போன்ற காரியங்களை செய்ய இயலாது. ஆயினும் அளவாக உம்முடைய ஆவியை எங்களுக்கு அளிக்கிறீர். ஆனால் அவருக்கோ அளவில்லாமல் ஆவியை அளித்தீர். தரிசனங்களை கொண்டு வரும் தேவன், நீங்கள் இங்கு இருந்தால் தரிசனங்களை உருவாக்க முடியும். இப்பொழுது இங்கிருக்கும் பரிசுத்த ஆவியானவர் அந்த பரலோகத்தின் சூழ்நிலையை இப்பொழுது இங்கு கொண்டு வர முடியும்... தேவ ஊழியக்காரனாக நான் உங்களிடத்தில் கேட்கிறேன். இந்த எலும்பு கட்டமைப்பை நீங்கள் மறுபடியுமாக சிருஷ்டிக்கப்பண்ணும் என்று நான் கேட்கிறேன். நான் இந்த பெண்ணின் மீது என் கரங்களை நான் வைத்தவுடன் இந்த எலும்பிலுள்ள கட்டி அகன்று போகட்டும். தேவ குமாரனின் பிரதிநிதித்துவத்தின் வழியில் செயல்படட்டும். அந்த வியாதி சபிக்கப்படட்டும். சிருஷ்டிகர் இதை உற்பத்தி செய்யட்டும். நம் சகோதரிக்கு ஒரு ஆரோக்கியமான சரீரத்தை இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் கொடுப்பாராக. ஆமென். இப்போது சகோதரியே பயப்படாதீர்கள். செல்லுங்கள், நாளை தினம் எனக்கு சாட்சி எழுதி அனுப்புங்கள். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. நல்லது. 83. நீங்கள் அமர்ந்து இருந்தபோது அந்த இருதய பிரச்சனை உங்களை விட்டுசென்றது என்று எண்ணினீர்களா? தேவன் உங்களை சுகப்படுத்துவாரென்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? நீங்கள் அவ்வாறு விசுவாசிக்கிறீர்களா? இங்கு வாருங்கள். சர்வ வல்லமையுள்ள தேவனே, கூடுமானால் சாத்தான் முன்கூட்டியே அவரை கல்லறைக்கு அனுப்புவான் என்று அறிந்தபடியால் உங்களுடைய ஆசீர்வாதம் அவர் மீது இருப்பதாக. இப்போது இந்த கொடூரமான உபாதையை நான் சபிக்கிறேன். சிருஷ்டிகராக நீங்கள் இங்கு இருந்து சிருஷ்டிக்க முடியும். இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் அவர் சுகமடையட்டும். ஆமென், தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. சகோதரரே செல்லுங்கள்... தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. தெய்வீக சுகத்தின் மேல் இருக்கும் உங்கள் மனப்பாங்கு போதும். அது சுகத்தை கொண்டுவரும். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. அதுதான் காரியம் உங்கள் மனப்பாங்கு உங்களால் விசுவாசிக்ககூடுமானால் என்னிடத்தில் ஒன்று இருக்கிறது... இதை நினைவு கொள்ளுங்கள். இப்போதுநான் உங்களிடத்தில் சொல்லுகிறேன். நடக்கவேண்டிய காரியத்திற்கு இது நிழலாக மட்டுமேஇருக்கிறது. என்னை விசுவாசியுங்கள். கடந்த சில வருடங்களாக நான் உணர்ந்து கொள்கின்ற தேவ ஆவியினால் இதை உங்களுக்கு சொல்லுகிறேன். சில இரவுகளுக்கு முன்னால்இது நடப்பதை நான் கண்டேன். இங்கு ஏதோவொன்று நடக்கப் போகிறது. மற்றும் தேவன் சுகமளிப்பார். 84. நல்லது சகோதரியே இங்கு வாருங்கள். அந்த கட்டியை எடுத்துப் போடும்படி நாம் தேவனிடத்தில் கேட்போம். அப்போது நீங்கள் சாப்பிடலாம். ஓ தேவனே, வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தவரே, என் கரங்களை இந்த சகோதரியின் மேல் வைக்கிறேன். மேலும் பரலோக பிதாவே, இந்த மக்களுக்கு உமது பிரதிநிதியாக கொண்டு வரும்படி என் முழு இருதயத்தோடு நான் முயற்சிக்கிறேன்... இங்கு இருப்பவர் உங்களால் தரிசனங்களை சிருஷ்டிக்க முடியும். ஆவியை சிருஷ்டிக்க முடியும். ஜீவனை உண்டு பண்ண முடியும். மேலும் உங்கள் வல்லமையால் மட்டுமே நாங்கள் ஜீவித்து நடமாடுகின்றோம். பரலோகத்தின் பிதாவே, இந்த மரிக்கும் ஸ்திரீக்கு உம்முடைய பிரயோஜனமில்லாத ஊழியக்காரனின் ஜெபத்தை ஏற்றுக் கொள்ளும்படி நான் உம்மை கேட்கிறேன். மேலும் இந்த கட்டியை அவள் வயிற்றில் வைக்க சாத்தான் இந்த பொல்லாப்பை செய்துள்ளான். ஆனால் அதை எடுத்துப்போட நீங்கள் இங்கு இருக்கிறீர்கள். மற்றும் அந்த கட்டியை நான் சபிக்கிறேன். இப்போது கர்த்தாவே உம்முடைய ஊழியக்காரன் மேல் உம்முடைய கிருபையின் பார்வை கிடைக்குமானால் இந்த நிமிடத்திலிருந்து அந்த கட்டி மரித்து போகட்டும். இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் அதை நான் சபிக்கிறேன். அது சுருங்கி வெளியே போகட்டும். ஆமென். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக சகோதரியே. அவ்வாறு தான் நாம் சுகத்தை பெற்று கொள்ளவேண்டும். வீட்டிற்கு சென்று விசுவாசியுங்கள். தேவன் மீது விசுவாசம் கொள்ளுங்கள். 85. நான் அவரை கேட்பேனென்றால் நீங்கள் சுகமாவீர்கள் என்று விசுவாசிக்கிறீர்களா? உங்கள் முழு இருதயத்தோடு நீங்கள் விசுவாசிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். நல்லது ஒரு நிமிடம் தலையை தாழ்த்துங்கள். இரக்கமுள்ள பிதாவே, இரக்கமும் பரிவும் தாரும். சாத்தான் எதை அவளிடத்திலிருந்து எடுத்துப் போட்டானோ அதை அவளுக்கு திரும்பக் கொடுங்கள். அதை அருள்வீர்களா கர்த்தாவே? இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் இந்த சாபம் அவளை விட்டு நீங்கட்டும். ஆமென். உங்களுக்கு நான் பேசுவது கேட்கிறதா? நான் சுகமடைவேன் என்று சொல்லுங்கள். அவ்வாறு தானே, நல்லது அது எல்லாம் உங்களை விட்டு சென்றது. உங்கள் கண் பார்வை, மற்றும் கேட்பதும் எல்லாம் மோசமாக போகிறது, மற்றும் ஒரு பழைய பிரச்சனை உங்களை அது உங்களை வெகு நாட்களாக தொல்லைபடுத்திக் கொண்டு இருக்கிறது. சீமாட்டியே ஆனால் அது எல்லாமே உங்களை விட்டு அகன்று போய்விட்டது. வீட்டிற்கு செல்லுங்கள், நீங்கள் சொஸ்தமானீர்கள் தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக... 86. வாருங்கள் சீமாட்டியே உங்கள் முழு இருதயத்தோடு விசுவாசிக்கிறீர்களா? அப்படி செய்கிறீர்களா? நம்முடைய பரலோக பிதா நம் மீது பரிவாக இருந்து... உங்களை குணப்படுத்த அவருடைய குமாரனை மரிக்க அனுமதித்த பின், அவருடைய சபையில் மறுபடியும் அவரே அவதரிப்பார். (மறுபிறவி எடுப்பார்). அவருடைய ஜீவன் மீண்டும் உருவாகி உங்களுக்கு வெளிப்படுத்திய பின் நீங்கள் நிச்சயமாக அதை ஏற்றுக் கொள்வீர்கள், நீங்கள் ஏற்றுக் கொள்வீர்களா? அப்படி செய்து நீங்கள் நலமடைவீர்கள் அல்லவா? அதை நீங்கள் விசுவாசிக்கிறீர்களென்றால், அந்த ரத்த சோகை பிரச்சனை உங்களைவிட்டு செல்லும். அதை நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? அப்படியென்றால் அது உங்களைவிட்டு செல்லும். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. தேவனின் சமாதானம் உங்கள் மீது இருப்பதாக. வியாதிப்பட்டவரையும் மற்றும் உபாதைகள், மற்றும் அவதிக்குள்ளாக இருப்போருக்கு சுகமளிக்கும்படி நம்முடைய கர்த்தராகிய இயேசுவை அனுப்பிய அன்புள்ள பிதாவே, தெய்வீக இரக்கத்திற்காக நான் ஜெபிக்கிறேன். அவளுக்கு உதவி செய்து, மற்றும் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் அவளை சுகப்படுத்தும் என்று நான் ஜெபிக்கிறேன். ஆமென். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக சகோதரியே. முழு இருதயத்தோடு விசுவாசித்துக் கொண்டு செல்லுங்கள். நீங்கள் சுகமடைவீர்கள். தேவன் மீது விசுவாசியுங்கள். தேவன் அதை கொண்டு வர செய்வார். என்னுடைய கருத்து என்னவென்றால் இந்த கட்டிடத்தில் இருக்கும் எல்லோருமே இப்பொழுதே சுகத்தை பெற்று இருக்க வேண்டும். பாருங்கள், அது அவ்வாறு செய்யும் மற்றும் அது உண்மை. 87. இங்கு இருக்கும் சீமாட்டியின் மேல் ஆவியானவர் இன்னுமாக அசைவாடுகிறார். சிறிது நேரத்திற்கு முன் அவள் ஆசீர்வதிக்கப்பட்டு இருப்பாள் என்று எண்ணுகிறேன். தொப்பி அணிந்திருக்கிற சீமாட்டி உங்களுக்கு ஏதோ ஒன்று இருக்கிறது. இன்னுமாக ஏதோ ஒன்று இருக்கிறது. ஓ, இன்னும் ஆழமாக தேவனோடு நடக்க நீங்கள் தேவனை தேடுகிறீர்கள். அது சரிதானா? தேவனோடு நீங்கள் நெருங்கி நடக்க வேண்டுமா அது சரிதானா? அதை தான் நீங்கள் எண்ணிக்கொண்டு இருக்கிறீர்கள். அதைக் குறித்துதான் நீங்கள் எண்ணிக்கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் தான் உண்மையான விசுவாசியாக இருந்தால் நீங்கள் அப்படியே முன் செல்லுங்கள். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. அதை நீங்கள் பெற்றுக்கொள்வீர்கள். அந்த இருதய பிரச்சனை உங்களை விட்டு அகன்று போகும் மற்றும் நீங்கள் சுகமாவீர்கள் என்று விசுவாசிக்கிறீர்களா? அவர் நாமத்தில் உங்களை நான் ஆசீர்வதிப்பேனென்றால் அது நடக்கும் என்று விசுவாசிக்கிறீர்களா? இந்த பரிதாபமான தாய்க்கு இயேசுவின் நாமத்தில் நான் ஜெபிக்கிறேன். பிதாவே, இந்த இரவுப்பொழுதில் இந்த உலகில் நாம் கொண்டு இருக்கும் மிக மோசமான வியாதியால் அவள் அவதிக்குள்ளாக இருக்கிறாள். எங்கள் மக்களில் அநேகரை அது கொன்றிருக்கிறது மற்றும் இரக்கத்திற்காக ஜெபிக்கிறேன். மேலும் தேவனே அந்த குன்றின் மேல் சிலுவையை உங்கள் முதுகில் தூக்கிகொண்டு ஏறிக்கொண்டு அது உங்கள் முதுகை உரசி ரத்தம் உங்கள் புஜத்திலிருந்து சிந்தியதை நினைவுகூறுகிறேன். மிருதுவான உங்கள் சரீரம் அந்த பளுவின் கீழாக உள்ளது.அந்த சிலுவையை சுமக்க உங்களுக்கு உதவி செய்ய சீமோன் வந்தான். இந்த இரவில் அவனுடைய பிள்ளைகளை பாரும். அதில் ஒருவர் இங்கு இருக்கிறார். பிதாவே இங்கும் உங்களை மகிமைப்படுத்த இங்கு பூமியில் இன்னும் சிறிது காலம் விசுவாசத்தின் பரிமாணத்தில் செல்ல முயற்சிக்கிறார்கள். அதை அருளும். இந்த ஸ்திரீயின் சரீரத்தில் இருக்கும் அந்த வியாதி சபிக்கப்படட்டும். சிருஷ்ட்டிக்கும் பரிசுத்த ஆவியானவர் இங்கு உள்ளபடியால் அவளுடைய இருதயத்தை புதுபிக்கட்டும் என்று இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் கேட்கிறேன். ஆமென். நான் இருதயம் என்று சொன்னேன், உங்களுக்கு மற்ற காரியங்களும் இருந்தது. ஆஸ்துமா மற்றும் பல அது எல்லாம் ஒன்று தான். தேவன் எல்லாவற்றையும் சரிபடுத்தினார். சரி. 88. வாருங்கள் சீமாட்டியே பரிசுத்த ஆவியானவர் சுகத்தை கொடுக்க விரும்புகிறார். மக்களின் இருதயத்திற்குள்ளும் செல்ல முயற்சிக்கிறார். அவரை விசுவாசியுங்கள். நல்லது சீமாட்டியே என்னை பாருங்கள். மற்றும் நான் தேவனின் ஊழியக்காரன் என்று நீங்கள் விசுவாசிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். அவ்வாறு விசுவாசிக்கிறீர்களா? இந்த மணிவேளைக்காக பல நாட்களாக ஏங்கி காத்துக் கொண்டிருக்கிறீர்கள். இந்த மணி வேளையை காண்பதற்கு நீங்கள் ஏங்கிக் கொண்டிருந்தீர்கள். நீங்கள் அவதிக்குள்ளிருக்கிறீர்கள். உங்கள் மார்பகத்தில் ஏதோ ஒரு வளர்ச்சி இருக்கிறது. உங்களுக்கு இருதய பிரச்சனையும் உள்ளது. அது உங்களை தொல்லைப்படுத்துகிறது... இதினால் குறுகிப் போயிருக்கிறீர்கள்... ஓ, ஏதோ ஒரு இடத்திற்கு நீண்ட பயணத்தில் சென்றீர்கள். அந்த இடம்... அது என்னுடைய கூட்டம்... எல்லா இடத்திற்கும் நீங்கள் சென்று அதில் முயற்சித்தீர்கள்... இது தான் நேரம் அவ்வாறு தானே, இங்கு வாருங்கள். 89. எல்லாவற்றையும் படைத்த பரலோகப் பிதாவே, உங்கள் பிரதிநிதியாக இந்த ஸ்திரீயை ஆசீர்வதிக்க மற்றும் அவள் சரீரத்தில் உள்ள வியாதியை சபிக்க நான் உள்ளேன். நீரே பரலோகத்தின் தேவன், ஆபிரகாமின் தேவன், ஈசாக்கின் தேவன், மற்றும் யாக்கோபின் தேவன். மற்றும் உம்மை பிரதிபலிக்க நீங்கள் இங்கு இருக்கிறீர்கள். மற்றும் அதை செய்கிறீர்கள். கர்த்தாவே, தேவவார்த்தை பிரத்தியட்சப்படுவது சத்தியம் என்று உறுதிப்படுத்துகிறீர்கள். மற்றும் எங்கள் சகோதரி தாழ்மையோடு வந்து காத்து இருக்கிறார்கள். ஆழம் ஆழத்தை நோக்கி கூப்பிடுகிறது. இதோ அவள் இங்கு நிற்கிறாள். அழுகையை அவர்களால் அடக்க முடியவில்லை. ஏன் இதற்கு தான் அவள் பல வருடங்களாக காத்துக் கொண்டிருக்கிறாள். இதோ இங்கு நிற்கிறாள். ஓ, மகத்தான பரலோகப் பிதாவே, உங்கள் பிரசன்னத்தில் இருக்கிறோம். அவள் சரீரத்தில் இருக்கும் இந்த வியாதியை சபிக்கிறோம்.அது அவளை விட்டு வெளியே செல்லட்டும். அவள் பெலத்தோடு மற்றும் ஆரோக்கியத்தோடு ஜீவித்து உங்களுக்கு ஊழியம் செய்யட்டும். இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் அவளை ஆசீர்வதித்து அந்த வியாதியை சபிக்கிறேன். ஆமென், தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக சகோதரியே... இந்த அளவுக்கு நீங்கள் நம்பிக்கையும் விசுவாசத்தோடு இருப்பதினால் அதை நிச்சயமாக பெற்றுக் கொள்வீர்கள். 90. எப்படி இருக்கிறீர்கள் சகோதரியே? நீங்கள் ஒரு விசுவாசி, ஆழ்ந்த சிந்தனையாளர், அமைதியான நபர். மற்றும் இருதய பிரச்சனையால் அவதிக்குள்ளாக இருக்கிறீர்கள். அவர் உங்களை சுகமாக்குவார். மற்றும் நீங்கள் ஜீவிக்கலாம். நீங்கள் ஜீவிப்பதற்காக அவர் மரித்தார். அதை நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? அவர் நாமத்தில் உங்களை ஆசீர்வதிக்க விரும்புகிறேன். பாருங்கள்...ஒரு மனிதனாக என்னால் இயலாது. ஆனால் நான் சொல்லுவது சத்தியம் என்று இந்த கூட்டத்தினருக்கு அவர் சாட்சியாக இருக்கிறார் என்று நான் நம்புகிறேன். இந்த நோக்கத்திற்காக அவர் என்னை அனுப்பினார். மற்றும் அவர் சொன்னார், “எதையெல்லாம் நீங்கள் பூமியில் செய்கிறீர்களோ அதை எல்லாம் பரலோகத்திலும் நான் செய்வேன், பூமியில் எதையாவது விடுவிப்பீர்களென்றால் பரலோகத்திலும் அது விடுவிக்கப்படும்”, உண்மையாக அவருக்கு நான் பிரதிநிதியாக இருப்பேனென்றால் அதை நிரூபிக்க எனக்கு அதிகாரம் கொடுத்து இருக்கிறார். வேறு விதத்தில் சொல்ல வேண்டுமென்றால் அதை நிஜப் பொருளாகும்படி நான் சொன்னதினால் அல்ல, ஆனால் இது நிஜம் என்று சொல்லி, அவர் இங்கு உள்ளார். பின் இந்த இருதய பிரச்சனையிலிருந்து நீங்கள் விடுபடவேண்டும் என்று கேட்பேனென்றால் தேவன் அதை பரலோகத்தில் இருந்து அதை உறுதிப்படுத்துவார். அது சரிதானே... 91. இப்போது அவர் வார்த்தைக்கு கீழ்படியும்படி உங்கள் கரத்தின் மேல் என் கரத்தை வைக்கிறேன். தேவ குமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் அவருடைய பிரதிநிதியாக இந்த இருதய பிரச்சனையில் இருந்து விடுபடச் செய்கிறேன். அவளை கட்டி போட்ட சாத்தானே அவள் வயதாகி இருந்தாலும் அவளை கல்லறைக்கு கொண்டு செல்ல முயற்சிக்கிறாய். எனினும் நம்முடைய தேவன் வயதை பார்ப்பதில்லை. கல்வாரியின் பிரதிநிதியாக, தேவனின் தூதனாக, நான் உனக்கு உத்தர விடுகிறேன். இனி இந்த வீட்டில் நீ இருக்க முடியாது. நீ வெளியேறியாக வேண்டும். ஏனெனில் இங்கு இருக்கும் தேவனின் துப்பறிவாளரான பரிசுத்த ஆவியானவர் உன்னுடைய இரகசிய இடங்களை வெளிப்படுத்திவிட்டார். இனி நீ மறைந்து இருக்கமுடியாது. சர்வ வல்லமையுள்ள தேவனால் மற்றும் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் இந்த ஸ்திரீயிடத்தில் இருக்கும் அந்த இருதய பிரச்சனை சபிக்கப்படட்டும். இப்போது அவள் விடுதலை பெறட்டும். ஆமென். இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் செல்லுங்கள். தேவ சமாதானம் உங்கள் மேல் இருப்பதாக. 92. விசுவாசம் கொள்ளுங்கள், ஒரு நிமிடம் உங்கள் தலைகளை தாழ்த்துங்கள். “ஓ தேவனே, மரித்தோரிலிருந்து இயேசுவை எழுப்பினீர். இந்த காது கேளாத ஸ்திரீ என் எதிரில் நிற்கிறாள். கர்த்தாவே செவிட்டு ஆவி அவளுக்குள் ஜீவிக்கிறது. மற்றும் அவள் முழுமையாக குணமடைய விரும்புகிறாள். இதை செய்ய விரும்புகிறாள். கர்த்தாவே உம்மை மகிமைபடுத்த அவள் அந்த ஆசீர்வாதத்தை பெற விரும்புகிறாள். இப்போது சீஷர்கள் மற்றும் வியாதியஸ்தருக்கு சுகத்தை கொடுக்கும்படி கர்த்தாவே உலகமெங்கும் நாங்கள் செல்லும்படி நீர் அனுப்பினீர். கல்வாரியில் உங்களுடைய விகாரமான வேதனைக்கு பிரதிநிதியாக நான் கொண்டு வருகிறேன். உம்முடைய தழும்புகளால் நான் சுகமானேன். இந்த பொல்லாப்பு காரியம் என் சகோதரி மீது வந்துள்ளது. அதை இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் சபிக்கிறேன். அதன் மேல் அதிகாரத்தை உரிமை கோருகிறேன். கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் இந்த ஸ்திரீயை விட்டு வெளியே வா என்று நான் சொல்லுகிறேன். நான் பேசுவது கேட்கிறதா? உங்களால் கேட்க முடிகிறதா? இப்போது உங்களுக்கு கேட்கிறதா? மெதுவாக நான் பேசுவதை போல் பேசுங்கள். இப்போது நீங்கள் சுகமானீர்கள். உங்கள் செவி இயல்பானது. தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. சகோதரியே, புரிகிறதா? 93. நாம் எல்லோரும் சொல்லலாம், “தேவனுக்கு நன்றி” என்று. சபையோர் சொல்லுகிறார்கள் தேவனுக்கு நன்றி என்று. செவிடு என்றால் அது ஒரு ஆவி. அது எப்படியென்றால் என் கரத்திலிருந்து ஏதோ வல்லமை வெட்டுவதுபோல் அது உள்ளது. இப்போது அந்த மருத்துவர் இந்த ஸ்திரீயை ஆய்வு செய்வார்... உயரமான ஒல்லியான மருத்துவர் கண்ணாடி போட்டிருப்பார். அவள் காதில் உள்ள நரம்பு மரித்த நிலையில் இருந்தது. எந்த காரியம் அந்த நரம்பை கொன்றது? அவள் சரீரம் முழுவதுமாக கொல்லப்படவில்லை. நம்முடைய சகோதர மருத்துவர் அவருக்கு தெரிந்தது என்னவென்றால் அந்த நரம்பு வேலை செய்யவில்லை. இப்போது இங்கு இருந்து அது வேலை செய்கிறது. அவளால் பேச முடிந்தது. இரண்டுமே அந்த நரம்பு வழியாக தான் வேலை செய்தது என்று எண்ணுகிறேன். ஏனெனில் அதே ஆவி அந்த காரியத்தின் மேல் இருந்தது. இப்போது அந்த நரம்பு வேலை செய்யவில்லை. அது என்ன காரியம்? 94. மருத்துவர் அதை இப்போது பரிசோதிக்கலாம். அதன் மீது ஏதாவது எலும்பு அழுத்திக் கொண்டு இருந்திருந்தால், அது அதற்கு மேல் போகும் ஆற்றலை தடை செய்கிறது. அப்போது அவர் அறுவை சிகிச்சை செய்து அந்த எலும்பை நகர்த்துவார். ஒரு வேளை அவருடைய புலன்களால் அதை அறிவிக்க அங்கு ஒன்றுமே இராமால் இருக்கும். அதை அவரால் காண முடியவில்லை. அல்லது உணர முடியவில்லை. அல்லது எதுவுமில்லை. அது மரித்த நிலையில் உள்ளது. எது அதை மரித்த நிலையில் கொண்டு சென்றது. வேதாகமம் சொல்லுகிறது அந்த செவிட்டு ஆவி அவனை விட்டு அந்த மனிதனை விட்டு அகன்ற போது அவனால் கேட்க முடிந்தது. பாருங்கள் அது ஒரு ஆவி இந்த வியாதிகளை போல் அது ஒரு ஆவி புரிகிறதா? நீங்கள் அதை கவனியுங்கள். அவருடைய பிரசன்னத்தில் இருந்தபோது எல்லா வியாதியும் மற்றும் எல்லாம் விட்டு செல்லும். ஆனால் தேவன் மீது உங்களுக்கு விசுவாசம் இல்லையென்றால் மற்றும் உங்கள் இருதயத்திற்குள் நீங்கள் விசுவாசிக்கவில்லையென்றால் அது திரும்பவும் உங்களிடத்தில் வரும். அந்த காது கேளாத ஸ்திரீயை கவனியுங்கள். சில நாட்கள் கழித்து தேவன் மீது அவள் விசுவாசம் கொள்ளவில்லையென்றால் அதே ஆவி திரும்பவும் வரும் பாருங்கள். ஆனால் அவர் பிரசன்னத்தில். 95. இங்கு சரியாக ஒவ்வொரு நபரும் ஒரே சமயத்தில் விசுவாசிப்பீர்களென்றால் இங்கேயே இப்பொழுதே எல்லாமே நடக்கும். அது அந்த சூழ்நிலையினால் பாருங்கள். எல்லாமே இப்போதே நடக்கும். ஓ, நாம் நம்பும் அளவிற்கு அதை இனம் கண்டு கொண்டு விசுவாசிப்போமென்றால் நம் பரலோக பிதாவால் என்னவெல்லாம் செய்யக்கூடும். எவ்வளவு அற்புதமாக இருக்கிறது. அந்த முதுகு எலும்புபிரச்சனையிலிருந்தது தேவன் உங்களுக்கு சுகம் கொடுப்பாரென்று அங்கு அமர்ந்து ஜெபித்துக் கொண்டிருக்கும் சகோதரியே, அதை அப்படியே நம்பி உங்கள் முழு இருதயத்தோடு நீங்கள் ஏற்றுக்கொள்ளுங்கள். நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? அவர் செய்தார் என்று அப்படித்தானே? உங்கள் கரங்களை உயர்த்துங்கள். நீங்கள் ஏற்றுக் கொண்டீர்களென்றால் நல்லது. இப்போது நீங்கள் செல்லுங்கள் மற்றும் சொஸ்தமாகுங்கள். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. சந்தேகப்படாதீர்கள் விசுவாசம் கொள்ளுங்கள். ஐயா, நீங்கள் எதற்காக ஜெபிக்கிறீர்கள். அங்கே கடைசியில் உட்கார்ந்திருக்கிற நீங்கள் வாத நோயிலிருந்து விடுபட விரும்புகிறீர்கள். அதிலிருந்து விடுபட விரும்புகிறீர்கள். அவர் உங்களுக்கு சுகத்தை அருளினார். நீங்கள் சுகமானீர்கள். எழுந்து நில்லுங்கள். அவர் உங்களைசு கப்படுத்தினார். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. தேவ சமாதானம் உங்கள் மேல் இருப்பதாக விசுவாசியுங்கள். 96. இந்த மேடைக்கு வருமுன் அந்த இருதய பிரச்சனையிலிருந்து சுகமானீர்கள் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா ஐயா...நீங்கள் அமர்ந்த இடத்திலேயே சரியாக நீங்கள் அமர்ந்து கொண்டு இருந்த நாற்காலியிலே அக்காரியத்தை பெற்றுக் கொண்டீர்கள். விசுவாசித்து கொண்டே செல்லுங்கள். இப்போது விசுவாசம் அந்த மனிதர் மீது இருக்கையில் அதை நிச்சயமாக அவர் ஏற்றுக் கொள்ள வேண்டுமென்று அவர் அறிந்திருக்கிறார். அது அவரைவிட்டு செல்லும்படி நீங்கள் உறுதிப்படுத்துங்கள். முன்கூட்டியே கல்லறைக்கு இந்த மனிதனை அனுப்ப என்னும் அந்த பிசாசை நான் சபிக்கிறேன். அவனை விட்டு வெளியே வந்து என்றுமே அவரை தொந்தரவு செய்யாதபடி இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் கூறுகிறேன். ஆமென். இப்போது சகோதரரே... கொஞ்சம் வேறுவிதமாக நீங்கள் உணரக்கூடும். பாருங்கள், அது உங்களை விட்டு சென்றது. உங்கள் இருதயம் மறுபடியுமாக சரியாக அடித்துக் கொள்ளுகிறது. அதை விசுவாசியுங்கள். வேறு எதையும் ஏற்றுக் கொள்ளாதீர்கள். அதை அப்படியே விசுவாசித்துக் கொண்டிருங்கள். அவ்வாறே நீங்கள் ஜீவிக்கலாம். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. நாம் தேவனுக்கு ஸ்தோத்திரம் என்று சொல்லுவோம். (சபையினர் தேவனுக்கு நன்றி.) 97. நீங்கள் விசுவாசிப்பீர்களென்றால் அவர் சொன்னார், சகலமும் கைகூடிடும் அது சரிதானா விசுவாசிக்கிறவர்களுக்கு சகலமும் கைகூடும். மேலும் இங்கு இருப்பவர்களில் எந்த புருஷனும் மற்ற எந்த ஸ்திரீயும் எங்கு இருந்தாலும் அதை ஏற்றுக் கொள்ள மனம் இருந்தால் மற்றும் அதை விசுவாசித்தால், தேவன் எதை சொன்னாரோ, அதை செய்ய இங்கு உள்ளார். சிறுது நேரத்திற்கு முன் உங்களுக்கு தொண்டை பிரச்சனை இருந்தது அல்லவா? அது சரிதான். அவர் அப்போதே உங்களுக்கு சுகம் கொடுத்தார் என்று விசுவாசித்தீர்களா? அவர் செய்தார் உங்களை நலமாக்கினார். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. தேவன் உங்களோடு இருப்பாராக. அடிக்கடி உங்களுக்கு மூச்சுக்குழாயில் பிரச்சனை இருந்தது அல்லவா. அது சரிதானா சீமாட்டியே... அவன் உங்கள் தொண்டையிலிருந்து உங்களுக்கு பின்னால் போனான். நீங்கள் சுகமானீர்கள் தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. ஏன் இந்த கட்டிடத்தில் இருக்கும் எல்லா இடங்களில் உள்ள மக்களை அவர் சுகப்படுத்துகிறார். அந்த சிறுநீரக பிரச்சனையில் இருந்து நீங்களும் அச்சமயத்தில் சுகமானீர்கள் ஐயா... தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக, ஆம் நல்லது. மீதியுள்ளோரும் இப்போது சுகத்தை பெற்று கொள்ள விரும்புகிறீர்களா? ஒருவர் மீது ஒருவர் கரத்தை வைக்கலாம். 98. சர்வ வல்லமையுள்ள தேவனே, இரக்கமாக இரும். ஆசீர்வதித்து சுகத்தை அருளும். எங்கள் சகோதரரை ஆசீர்வதியும். இங்கு இருந்து அவர் செல்லும் போது இயல்பான நிலையில் இயேசுவின் நாமத்தில் செல்லட்டும். மேலும் கர்த்தாவே, இங்கு இருக்கும் இந்த இனிமையான அருமையான காத்துக் கொண்டிருக்கும் மக்கள்... நேரம் மேல் நேரம் போகையில் நம் அருமையான கர்த்தராகிய இயேசு நம்மோடு தரித்து நம்மை ஆசீர்வதித்து, மற்றும் நம் ஒவ்வொருவரிடத்தில் தன்னை வெளிப்படுத்துகிறார். உங்கள் இரக்கத்திற்காக நான் ஜெபிக்கிறேன். கர்த்தாவே, இங்கு இருக்கும் ஒவ்வொரு ஆவியும் மற்றும் ஒவ்வொரு பொல்லாத ஆவியும் சர்வ வல்லமையுள்ள தேவன் கட்டுக்குள் இருப்பதை நாம் அறிந்தபடியால் அவைகள் வெளியேற வேண்டும். உங்கள் தலைகளை நீங்கள் தாழ்த்தியிருக்கையில் நீங்கள் யாராக இருந்தாலும், அல்லது எங்கு இருந்து வந்து இருந்தாலும் அல்லது என்ன பிரச்சனையிருந்தாலும் உங்கள் சரீரத்தை தொந்தரவு செய்கின்ற எல்லா பொல்லாத வியாதிகளும் என்னுடைய ஜெபத்தின் கட்டுக்குள் இருக்கிறது. உங்கள் ஒவ்வொருவரையும் தேவன் சுகப்படுத்த வேண்டும் என்று தான் என்னுடைய ஜெபம். இப்போது நான் சத்தியத்தை சொல்லியிருக்கிறேன். நம்முடைய பரலோகப் பிதா நான் சத்தியத்தை தான் சொல்லியிருக்கிறேன் என்று சாட்சி அளித்துள்ளார். உங்கள் ஒவ்வொருவரையும் சுகப்படுத்த மற்றும் அவர் வார்த்தையை நிறைவேற்றவும் அதை செய்யவும், அவர் என்ன செய்வேனென்று சொன்னாரோ, என்ன செய்தார் என்பதை உறுதிப்படுத்த இயேசு கிறிஸ்து இங்கிருக்கிறார். மற்றும் அவரின் பிரதிநிதியாக என்னை இங்கு அனுப்பியிருக்கிறார். நீங்கள் எவ்வளவாக வியாதிப்பட்டு இருந்தாலும், எவ்வளவாக பெலவீனப் பட்டிருந்தாலும், எந்த பிரச்னையாக இருந்தாலும், இப்போதே...நாளை காலை அல்ல... இயேசு கிறிஸ்து உங்களை சுகப்படுத்தினார். மற்றும் சாத்தானே உன்னை நான் சபிக்கிறேன். வியாதிகளின் மற்றும் குறைபாடுகளின் ஆவிகளே நீ சபிக்கப்படுவாயாக. இந்த மக்களை நீ பிடித்து கொள்ளமுடியாது. தேவனின் பரிசுத்த ஆவியானவர் இங்கு ஒரு விசுவாசத்தை இந்த இரவில் உருவாக்கி யிருக்கிறார். அதன் பிரசன்னத்தில் உன்னால் நிற்கமுடியாது. நீ வெளியேறியாக வேண்டும். அவர்களிடத்திலிருந்து வெளியேறு. தேவ குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் இந்த மக்களை விட்டு வெளியேறு என்று நான் உனக்கு கட்டளை கொடுக்கிறேன். சாத்தானே...